17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து தொடர் இலங்கையின்கொழும்புவில், மொத்தம் 7 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இரண்டாவது பாதியில் இந்திய அணிக்கு டவுன் கெல் (49), கன்லெய்பா (59), நஜார் (86) தலா ஒரு கோல் அடித்தனர். 68வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் காங்டே இரண்டாவது கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வென்றது..
உலகதடகளசாம்பியன்ஷிப் 20 வதுசீசன்ஜப்பான்தலைநகர்டோக்கியோவில்உலகின் 198 நாடுகளில்இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர்.ஒலிம்பிக்கில் இரண்டு முறை (2020, 2024) தங்கம்வென்ற சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் 25, ஆண்களுக்கானபோல் வால்ட் போட்டியில், பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 5.74 மீ.,தாவி பைனலுக்குள் நுழைந்தார்.நேற்று நடந்த பைனலில் 6.15 மீ., உயரம் தாவி, தங்கம் கைப்பற்றினார்..பின் சாதனை முயற்சி யாக 6.30 மீ., உயரம் தாவி, 'போல் வால்ட்' போட்டியில் 14வது முறையாக உலக சாதனை படைத்தார்.
ஹரியானா அணி 40-37 என, குஜராத் அணியை புரோ கபடி போட்டியில் வீழ்த்தியது.தமிழ் தலைவாஸ், மும்பை, பெங்கால் உள்ளிட்ட 12 அணிகள் இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன்போட்டியில் பங்கேற்கின்றன.நேற்று, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் குஜராத் ஹரியானா, அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் ஹரியானா அணி 25-20 என முன்னிலையில்இருந்தது.. ஆட்ட நேர முடிவில் ஹரியானா அணி 40-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் ஓபன், பெண்கள் என இரு பிரிவில் போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவில் மொத்தம் 56 பேர் பங்கேற்றனர். 10 சுற்று முடிவில் இந்தியாவின் வைஷாலி, 7.5 புள்ளியுடன் வைஷாலி, முதலிடத்துக்கு முன்னேறி இருந்தார். 11 சுற்றில் 8.0புள்ளியுடன் முதலிடம் பிடித்த வைஷாலி, கோப்பை வென்றார். தொடர்ந்து இரண்டாவது முறையாக (2023, 2025) கிராண்ட் சுவிஸ்தொடரில் சாம்பியன்ஆனார்.இவருக்குரூ. 35.25லட்சம்பரிசுத்தொகைகிடைத்தது. 'கேண்டிடேட்ஸ்' தொடருக்கு தகுதி பெற்றார் வைஷாலி.
சீனியர் ஆண்களுக்கான 500 மீ, ஸ்பிரின்ட் பிரிவு போட்டிகள் , சீனாவில் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் நடக்கிறது .ஆனந்த்குமார் வேல் குமார், ஆர்யன்பால்இந்தியா சார்பில் பங்கேற்றனர். ஆனந்த் துவக்கத்தில் கடைசி இடத்தில் வந்தார். பின் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். கடைசியில், 43.072 வினாடியில் வந்து, 3வது இடம் பெற்ற ஆனந்த் குமார், வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான 1000 மீ., ஸ்பிரின்ட் பிரிவு பைனலில் ,சிறப்பாக செயல்பட்ட ஆனந்த்குமார், ஒரு நிமிடம், 24.924 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் சீனாவில், பெண்க ளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் மேகனா சஜ்ஜனார், 632.6 புள்ளி களுடன் 7வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார்.அடுத்து நடந்த பைனலில் மேகனா, 230.0 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். உலக கோப்பை வரலாற்றில் மேகனா கைப்பற்றிய முதல் பதக்கம் ஆனது. இது, இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே ஈஷா சிங் (10 மீ., 'ஏர் பிஸ்டல்') தங்கம் வென்றிருந்தார்.இம்முறை ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என, 2 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 5வது இடத்தை கைப்பற்றியது.
உலக தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன்ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், . உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 49 போட்டிகளில் 149 பதக்கம் வழங்கப்பட உள்ளன. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர்.ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதிச்சுற்றில் 2.25 மீ., உயரம் தாண்டிய சர்வேஷ் அனில் குஷாரே, உலக சாம்பியன்ஷிப், உயரம் தாண்டுதலில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என சாதனை படைத்தார்.ஆண்களுக்கான 100 மீ., ஓட்டம் பைனலில் ,ஜமைக்காவின் ஆப்ளிக்யு செவில்லே, 9.77 வினாடி நேரத்தில் வந்து தங்கம் ,மற்றொரு ஜமைக்க வீரர் கிஷேன் தாம்ப்சன் (9.82 வினாடி) வெள்ளி வென்றார். ஆண்களுக்கான 10,000 மீ., பைனலில் ,இந்திய வீரர் குல்வீர் சிங், 29 நிமிடம், 13.33 வினாடி நேரத்தில் வந்து, 16வது இடம் பிடித்தார்.
சர்வ தேச ஓபன் பாட்மின்டன் தொடர் ஹாங்காங்கில் ,ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் லக்சயா சென், ('நம்பர்-20'), உலகத் தர வரிசை யில் 'நம்பர்-4' ஆக உள்ள, சீனாவின் ஷி பெங்லியை எதிர் கொண்டார். லக்சயா முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 10-10 சமநிலையில் இருந்து, முடிவில் 15-21 என செட்டை இழந்தார்.இரண்டாவதுசெட்டிலும் துவக்கத்தில் இருந்து பின்தங்கிய லக்சயா,. முடிவில் 15-21, 12-21 லக்சயா என்ற நேர் செட்டில் தோல்வி யடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சீனாவின் வெய் கெங் லியாங், சங் வாங் ஜோடியை ஆண்கள்இரட்டையர் பிரிவு பைனலில் சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 19-21 என கைப்பற்றியது .அடுத்த செட்டை 14-21 என நழு வவிட்டது. முடிவில் இந்திய ஜோடி 21-19, 14-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்க, இரண்டாவது இடம் பெற்றது.
உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில், இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா 21, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்தின் ஜூலியாவை 57 கிலோ பிரிவு பைனலில் எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார் ஜாஸ்மின். மூன்று சுற்று முடிவில், 5 நடுவர்களில் 4 பேர் ஜாஸ்மினுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினர்.முடிவில் ஜாஸ்மின் 4-1 என (30-27, 29-28, 28-29-29-28) வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றி, உலக சாம்பியன் ஆனார்.இந்தியாவின் மீனாட்சி ஹூடா, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற, மூன்று முறை உலக சாம்பியன் ஆன, கஜகஸ்தானின் நஜிம் கைஜய்பேவை ,பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு பைனலில் எதிர்கொண்டார். இதில் மீனாட்சி, 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, புதிய சாம்பியன் ஆனார்.இந்தியாவின் நுபுர் ஷியோரன், போலந்தில் அகட்டாவை பெண்களுக்கான 80+ கிலோ எடைப் பிரிவு பைனலில் சந்தித்தார். இதில் சமமான போட்டியை வெளிப்படுத்தியபோதும், நுபுர் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் பூஜா, பாரிசின் எமிலி அஸ்குய்த்தை80 கிலோ பிரிவு அரை யிறுதியில் ,பூஜா 1-4 என தோல்வியடைந்து, வெண்கலம் கைப்பற்றினார்.
உலக தடகள சாம்பியன் ஷிப் இரு ஆண்டுக்கு ஒருமுறை 'உலக தடகள அமைப்பு சார்பில் 1983 முதல், நடத்தப்படுகிறது. இதன் 20வது சீசன் இன்று ஜப்பானின், டோக்கியோ தேசிய மைதானத்தில் துவங்குகிறது.உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் காத்திருக்கின்றனர். 49 போட்டிகளில் 149 பதக்கம் வழங்கப்பட உள்ளன.இந்தியா சார்பில் இம்முறை 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர். இதில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா மீது நம்பிக்கை காணப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பின் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை, கடந்த 2021ல் டோக்கியோ மண்ணில்வென்று தந்தார்.