25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Sep 23, 2026

ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப்போட்டியில் பிரணதி.

பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பிரணதி பங்கேற்றுள்ளார். 19 வீராங்கனைகள் பங்கேற்ற வால்ட் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட அவர், 12.916 புள்ளிகளுடன் 7வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Sep 23, 2026

கபடியில் இந்தியாவுக்கு தொடர் வெற்றி.

ஆண்களுக்கான கபடி போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் கொரியாவை எதிர்கொண்டது.முதல் பாதியில் இந்திய அணி 34-14 என்ற புள்ளிக் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தைத் தொடர்ந்த இந்தியா, 29-17 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.முடிவில் இந்திய அணி 63-31 என்ற புள்ளிக் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி, தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.இந்திய அணி அடுத்ததாக இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

Sep 22, 2026

செஸ் ஒலிம்பியாட்: அமெரிக்காவை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் 46வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பெண்கள் அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.பெண்கள் பிரிவின் 6வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது. இந்திய அணியில் ஹம்பி, வந்திகா, திவ்யா மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோர் களமிறங்கினர்.கருப்பு காய்களுடன் விளையாடிய சவிதா ஸ்ரீ, 47 நகர்த்தல்களில் ரோஸ் அத்வலை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் வந்திகாவும் தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா மற்றும் அனுபவம் வாய்ந்த ஹம்பி ஆகியோரின் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

Sep 22, 2026

ஓபன் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.

ஓபன் பிரிவின் 6வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வலுவான உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.இந்திய அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹால் சரின் மற்றும் அர்ஜுன் ஆகியோர் விளையாடினர். குகேஷ்–ஷம்சுதின், பிரக்ஞானந்தா–நாடிர்பெக் அப்துசட்டோரோவ் மற்றும் அர்ஜுன்–சிந்தரோவ் ஆகியோருக்கு இடையிலான மூன்று ஆட்டங்களும் டிராவில் முடிந்தன.மற்றொரு ஆட்டத்தில் நிஹால் சரின், 54 நகர்த்தல்களில் யாக்குபோயிடம் தோல்வியடைந்தார். இதனால் இந்திய அணி 1.5-2.5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானிடம் தோல்வியடைந்து, தொடரில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தது.

Sep 22, 2026

மகளிர் ஹாக்கியில் இந்திய அணிக்கு அபார வெற்றி!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு ஹாக்கி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தோனேசியாவை எதிர்கொண்ட இந்திய அணி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. தீபிகா, ருதுஜா மற்றும் நவ்னீத் ஆகியோர் ஹாட்ரிக் கோல்களை பதிவு செய்தனர்.இறுதியில் இந்திய அணி 17-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி, தொடர்ச்சியாக 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

Sep 22, 2026

துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 2 வெள்ளி, ஒரு வெண்கலம்.

ஜப்பானின் அய்ச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ரான்க்ஸ் 631.8 புள்ளிகளுடனும், ஹிமான்சு தில்லான் 630.0 புள்ளிகளுடனும் முறையே 3வது மற்றும் 7வது இடங்களைப் பிடித்து தனிநபர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.மற்றொரு இந்திய வீரரான பார்த்த் ராகேஷ் 628.3 புள்ளிகளுடன் 11வது இடத்தைப் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார்.தகுதிச்சுற்றில் வீரர்கள் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் அணிகளுக்கான பதக்கம் தீர்மானிக்கப்பட்டது. ருத்ரான்க்ஸ், ஹிமான்சு மற்றும் பார்த்த் ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி 1,890.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.சீனா 1,899.0 புள்ளிகளுடன் தங்கத்தையும், தென் கொரியா 1,884.2 புள்ளிகளுடன் வெண்கலத்தையும் கைப்பற்றின.

Sep 22, 2026

டேபிள் டென்னிஸ்: இந்திய அணிகளுக்கு 3-0 வெற்றி.

ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் தங்களது லீக் ஆட்டங்களில் பாகிஸ்தானை எதிர்கொண்டன.பெண்களுக்கான 'எப்' பிரிவு லீக் போட்டியில் சுதிர்தா, சின்ட்ரெலா மற்றும் ஸ்ரீஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.ஆண்கள் பிரிவிலும் ஹர்மீத் தேசாய், சத்யன் மற்றும் பயாஸ் ஜெயின் ஆகியோர் வெற்றியைப் பதிவு செய்தனர். இதனால் இந்திய ஆண்கள் அணியும் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

Sep 22, 2026

கபடி: ஜப்பானை வீழ்த்திய இந்திய ஆண்கள் அணி.

ஆண்களுக்கான கபடி 'ஏ' பிரிவு லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.ஆட்டத்தின் முதல் பாதியிலேயே இந்திய அணி 31-9 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தைத் தொடர்ந்த இந்திய அணி 18 புள்ளிகளைச் சேர்த்தது. ஜப்பான் அணி 15 புள்ளிகளை மட்டுமே பெற்றது.ஆட்டநேர முடிவில் இந்திய அணி 49-24 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு 8 ஆல்-அவுட் மற்றும் 2 சூப்பர் டேக்கிள் புள்ளிகள் கிடைத்தன.மகளிர் கபடியிலும் வெற்றி.பெண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது.ஆட்டம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள், 42-21 என்ற புள்ளிக் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தனர்.

Sep 21, 2026

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்க வேட்டை!

ஜப்பானின் அய்ச்சி–நகோயா நகரில் ஆசிய விளையாட்டு போட்டிகளின் 20-வது சீசன் நடைபெற்று வருகிறது. பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Sep 21, 2026

துப்பாக்கி சுடுதல் – இளவேனிலுக்கு வெள்ளிப் பதக்கம்!

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.பெண்களுக்கான தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சோனம் 634.1 புள்ளிகளுடனும், இளவேனில் வாளறிவன் 633.5 புள்ளிகளுடனும் முறையே 3-வது மற்றும் 6-வது இடங்களைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.இறுதிப்போட்டியில் சோனம் 167.0 புள்ளிகளுடன் 6-வது இடத்தைப் பிடித்தார். சிறப்பாக செயல்பட்ட இளவேனில் வாளறிவன் 252.4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 182 183

AD's



More News