25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Sep 16, 2026

இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட்.

செஸ் ஒலிம்பியாட் தொடரின் 46-வது சீசன் இன்று உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் தொடங்குகிறது. இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் மீண்டும் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றன.சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 1927-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் தொடரில் ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் என மொத்தம் 400 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 2024-ம் ஆண்டு தொடரில் 380 அணிகள் பங்கேற்ற நிலையில், இந்த முறை பங்கேற்பு அதிகரித்துள்ளது.இந்தியா கடந்த 2024-ம் ஆண்டு ஒலிம்பியாட் தொடரில் ஓபன் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.இந்த முறை ஓபன் பிரிவில் இந்திய அணி இரண்டாவது நிலை அந்தஸ்துடன் களமிறங்குகிறது. உலக சாம்பியன் குகேஷ், உலகத் தரவரிசையில் முன்னணி வீரரான பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, நிஹால் சரின், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உள்ளிட்ட இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.பெண்கள் பிரிவில் இந்திய அணிக்கு முதல்நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த கோனேரு ஹம்பி, உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக், வைஷாலி, வந்திகா அகர்வால், சவிதாஸ்ரீ உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.கடந்த தொடரில் சிறப்பாக விளையாடிய திவ்யா தேஷ்முக், வந்திகா உள்ளிட்ட வீராங்கனைகள் இந்த முறையும் சிறப்பாக செயல்பட்டால், இந்திய பெண்கள் அணி மீண்டும் தங்கம் வெல்லும் வாய்ப்பு உருவாகும்.செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணி இதுவரை 2 தங்கம் மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது. ஓபன் பிரிவில் 2024-ல் தங்கமும், 2014 மற்றும் 2022-ல் வெண்கலமும் இந்தியா வென்றுள்ளது. பெண்கள் பிரிவில் 2024-ல் இந்திய அணி தங்கப் பதக்கம் கைப்பற்றியது.

Sep 16, 2026

டி-20 தரவரிசையில் ஸ்ரீசரணி முதலிடம்.

சர்வதேச டி-20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரணி 804 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.மேலும், ஐ.சி.சி. டி-20 தரவரிசையில் 800 புள்ளிகளை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் ஸ்ரீசரணி படைத்துள்ளார்.

Sep 16, 2026

டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி.

டில்லியில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.இந்நிலையில், இரண்டாவது போட்டி நேற்று டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 14.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இதன் மூலம் இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.

Sep 15, 2026

யு.எஸ். ஓபன்: ஸ்வெரேவ் சாம்பியன்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை எதிர்கொண்ட ஸ்வெரேவ், தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் இருவரும் கடுமையாக போராடியதால் ஆட்டம் 6-6 என டைபிரேக்கருக்கு சென்றது. இதில் ஸ்வெரேவ் 7-6 என வெற்றி பெற்றார்.மூன்று மணி நேரம் 33 நிமிடங்கள் நீடித்த போட்டியின் முடிவில், ஸ்வெரேவ் 6-3, 7-6, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் ஷெல்டனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இதன் மூலம் யு.எஸ். ஓபனில் முதல்முறையாக பட்டம் வென்ற ஸ்வெரேவ், தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றினார். சாம்பியனான அவருக்கு ரூ.52.56 கோடி பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பிடித்த ஷெல்டனுக்கு ரூ.26.76 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

Sep 15, 2026

உலக கோப்பை வில்வித்தை: திராஜ் வரலாற்று சாதனை.

மெக்சிகோவில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை பைனல் தொடரில் இந்திய வீரர் திராஜ் பொம்மதேவரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.நடப்பு சீசனில் நடைபெற்ற நான்கு உலக கோப்பை ஸ்டேஜ் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 32 வீரர்கள், தனிநபர் ரீகர்வ் மற்றும் காம்பவுண்டு பிரிவுகளில் பங்கேற்க தகுதி பெற்றனர். இந்தியா சார்பில் ரீகர்வ் பிரிவில் திராஜ் மட்டும் பங்கேற்றார்.இறுதிப் போட்டியில் ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை எதிர்கொண்ட திராஜ், முதல் நான்கு செட்களின் முடிவில் 3-5 என்ற கணக்கில் பின்தங்கினார். இருப்பினும், அடுத்த செட்டை 28-27 என கைப்பற்றி போட்டியை 5-5 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் நடத்தப்பட்டது. இதில் திராஜ் 10 புள்ளிகளையும், ஜப்பான் வீரர் ஜுன்யா 9 புள்ளிகளையும் பெற்றனர். இதன் மூலம் திராஜ் 6-5 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.உலக கோப்பை பைனல் வில்வித்தை தொடரின் ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் திராஜ் பெற்றார்.

Sep 15, 2026

இந்தியா–ஆப்கானிஸ்தான்: 2வது டி20 போட்டி இன்று.

இந்தியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது.இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.முதல் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.மறுபுறம், தொடரை சமன் செய்யும் நோக்கில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிக்காக போராடும் என்பதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Sep 12, 2026

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: பைனலுக்கு முன்னேறியது இந்தியா.

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்று நடந்த அரையிறுதியில் மலேசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.சீனாவில், ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி (20 வயதுக்குட்பட்டோர்) தொடரின் 10-வது சீசன் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் 10 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனான இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றது.லீக் சுற்றில் பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு ‘டிரா’ என 10 புள்ளிகள் பெற்ற இந்தியா, பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.நேற்று நடந்த அரையிறுதியில், ‘பி’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.நாளை நடைபெற உள்ள பைனலில் இந்தியா, தென் கொரிய அணியை எதிர்கொள்கிறது.

Sep 12, 2026

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை பைனலுக்கு முன்னேற்றம்.

ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி பைனலுக்கு முன்னேறியது.ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.) பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (டி-20) தொடரின் 10-வது சீசன் நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, பைனலுக்கு முன்னேறியது.நேற்று இரண்டாவது அரையிறுதி போட்டி நடந்தது. ‘பி’ பிரிவில் முதலிடம் பெற்ற இலங்கை அணி, ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த பாகிஸ்தானை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 130/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, 18.4 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Sep 12, 2026

வியட்நாம் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய தான்வி சர்மா, பிரனாய்.

வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் தான்வி சர்மா, ரக்ஷிதா ஸ்ரீ, இஷாராணி, பிரனாய் உள்ளிட்டோர் முன்னேறினர்.வியட்நாமில், ‘சூப்பர் 100’ அந்தஸ்து பெற்ற வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் தான்வி சர்மா, மாளவிகா பன்சோத் மோதினர். இதில் தான்வி சர்மா 21-18, 15-21, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ரக்ஷிதா ஸ்ரீ, 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் சக வீராங்கனை மான்சி சிங்கை வீழ்த்தினார்.இந்தியாவின் இஷாராணி, 21-15, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சீனதைபேயின் ஹுவாங் சிங் பிங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரனாய், சக வீரர் சான்ஸ்கர் சரஸ்வத்தை எதிர்கொண்டார். இதில் பிரனாய் 28-26, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Sep 11, 2026

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 19-0 என வீழ்த்திய இந்தியா.

சீனாவில் பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்டோர்) ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 10வது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 19-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.இந்திய அணியில் பூஜா மாலிக் ‘ஹாட்ரிக்’ கோல்கள் (27, 49, 51வது நிமிடங்கள்) அடித்தார். ரோஷ்னி (9, 60+), சனிகா மானே (13, 23), மது சிதரர் (16, 39), சுப்ரியா (40, 54) ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர்.மேலும், பூஜா (7), தனுஸ்ரீ (11), சுக்வீர் கவுர் (13), கீதா (18), தனுஜா (25), பூர்ணிமா யாதவ் (33), கிருஷ்ணா சர்மா (48), பினிமா (55) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.அரையிறுதியில் (செப். 12) இந்தியா - தென் கொரியா அணிகளும், சீனா - ஜப்பான் அணிகளும் மோதவுள்ளன.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 181 182

AD's



More News