25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Sep 11, 2026

யு.எஸ். ஓபன்: அரையிறுதிக்கு ரிபாகினா, கோகோ காப் முன்னேற்றம்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, சீனாவின் கின்வென் ஜெங் மோதினர்.முதல் செட்டை 3-6 என இழந்த ரிபாகினா, இரண்டாவது செட்டை 6-1 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என வென்றார்.இரண்டு மணி நேரம், 14 நிமிடங்கள் நீடித்த போட்டியில் அசத்திய ரிபாகினா, 3-6, 6-1, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ். ஓபனில் முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப், ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவாவை எதிர்கொண்டார். இரண்டு மணி நேரம், 19 நிமிடங்கள் நீடித்த போட்டியில் கோகோ காப் 2-6, 7-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இத்தொடரில் 2வது முறையாக (2023, 2026) அரையிறுதிக்கு முன்னேறினார்.ஸ்வெரேவ் அசத்தல்ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், நெதர்லாந்தின் போடிக் வான் டி ஜாண்ட்சுல்ப் மோதினர்.அபாரமாக ஆடிய ஸ்வெரேவ் 6-2, 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 3வது முறையாக (2020, 2021, 2026) அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் கரன் கச்சனோவ், பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் பிளாக்ஸ் மோதினர். இதில் கச்சனோவ் 6-2, 7-5, 3-2 என முன்னிலையில் இருந்தபோது, காயம் காரணமாக பெல்ஜியம் வீரர் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து கச்சனோவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Sep 11, 2026

ஆசிய கோப்பை பைனலுக்கு இந்திய பெண்கள் அணி.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி 10வது முறையாக முன்னேறியது. அரையிறுதியில் வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 149/5 ரன்கள் எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 109/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

Sep 11, 2026

இந்திய தடகள சீரிஸ்: விஷால் முதலிடம்.

டில்லியில், இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் இந்திய தடகள சீரிஸ் பைனல் நடந்தது.ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் விஷால் 45.36 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் மகாராஷ்டிராவின் ஐஸ்வர்யா 52.51 வினாடிகளில் முதலிடம் பிடித்தார்.பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் அபினயா 11.31 வினாடிகளிலும், கிரிதாரணி 11.35 வினாடிகளிலும் ஓடி முறையே 2வது, 3வது இடங்களைப் பிடித்தனர். மகாராஷ்டிராவின் ஹரிதா 11.22 வினாடிகளில் முதலிடத்தை கைப்பற்றினார்.ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீரர் அனிமேஷ் குஜுர் 10.21 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை தட்டிச் சென்றார்.பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் கவுதமி 2 நிமிடம், 05.63 வினாடிகளில் ஓடி 3வது இடம் பிடித்தார்.பெண்களுக்கான வட்டு எறிதலில் ஹரியானாவின் சீமா 56.52 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். பீதா 54.82 மீட்டர், கானி 54.16 மீட்டர் தூரம் எறிந்து முறையே 2வது, 3வது இடங்களைப் பிடித்தனர்.ஆண்களுக்கான குண்டு எறிதலில் பஞ்சாப் வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் 20.64 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தை கைப்பற்றினார்.

Sep 10, 2026

பாரா வில்வித்தை: ஷீத்தல் தேவி தங்கம்.

ஆமதாபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா வில்வித்தை சீரிஸ் ‘ஸ்டேஜ்-3’ போட்டி நடந்தது. இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 109 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.நேற்று நடைபெற்ற கடைசி நாள் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளுக்கான இறுதிப் போட்டிகள் நடந்தன. ‘காம்பவுண்டு’ தனிநபர் பிரிவு இறுதிப் போட்டியில், நடப்பு உலக சாம்பியனும், உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனையுமான இந்தியாவின் ஷீத்தல் தேவி, கஜகஸ்தானின் அய்ஜடா செய்டனை எதிர்கொண்டார்.முதல் நான்கு செட்கள் முடிவில் ஷீத்தல் 115-116 என பின்தங்கினார். கடைசி செட்டில் 29-28 என முன்னிலை பெற்ற அவர், ஸ்கோரை 144-144 என சமன் செய்தார். இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க ‘ஷூட்-ஆப்’ நடத்தப்பட்டது. இதில் ஷீத்தல் 10-9 என வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.‘ரீகர்வ்’ கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்–பாவ்னா ஜோடி, சீனாவின் லியாம்–ஜியா லெய் ஜோடியை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.ஒட்டுமொத்தமாக இந்திய அணி 4 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றது.

Sep 10, 2026

அமெரிக்க ஓபன்: சபலென்கா, பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 6-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டார்.முதல் செட் ‘டைபிரேக்கர்’ வரை நீடித்த நிலையில், சபலென்கா 7-6 என கைப்பற்றினார். 2-வது செட்டை நோஸ்கோவா 6-3 என வென்றார். வெற்றியாளரைத் தீர்மானித்த 3-வது செட்டும் ‘டைபிரேக்கர்’ வரை சென்றது. இதில் சபலென்கா 7-6 என வெற்றி பெற்றார்.2 மணி நேரம் 22 நிமிடங்கள் நீடித்த போட்டியின் முடிவில், நடப்பு சாம்பியனான சபலென்கா 7-6, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சகநாட்டவரான எம்மா நவரோவை 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் தொடர்ச்சியாக 3-வது முறையாக (2024-26) அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு பெகுலா முன்னேறினார்.

Sep 10, 2026

ஆசிய கோப்பை: இந்தியா–வங்கதேசம் இன்று மோதல்.

மகளிருக்கான ஆசியக் கோப்பையின் 10-வது சீசன், ‘டி-20’ கிரிக்கெட் தொடராக துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடின.‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. 3 போட்டிகளில் 6 புள்ளிகளைப் பெற்று, தனது பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் ‘பி’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த வங்கதேச அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

Sep 09, 2026

யு.எஸ். ஓபன்: காலிறுதிக்கு ரிபாகினா, ஆன்ட்ரீவா, ஜெங் முன்னேற்றம்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் உலகின் நம்பர்-2 வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.இந்த போட்டியில் ரிபாகினா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றிய அவர், 2-வது செட்டையும் 6-4 என வசப்படுத்தினார்.ஒரு மணி நேரம் 7 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற போட்டியின் முடிவில் ரிபாகினா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் உலகின் நம்பர்-1 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், இத்தாலியின் லூசியானோ டார்டெரியை எதிர்கொண்டார்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்வெரெவ் 6-2, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

Sep 09, 2026

உலக பாரா வில்வித்தை: இந்தியாவுக்கு 2 தங்கம்.

ஆமதாபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா வில்வித்தை சீரிஸ் ‘ஸ்டேஜ்-3’ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 109 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.ரீகர்வ் பிரிவு அணிகளுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் - விஜய் ஜோடி, ஸ்லோவாக்கியாவின் டேவிட் - டெனிஸ் ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை இந்திய ஜோடி 0-2 என்ற கணக்கில் இழந்தது. அதன்பின் சிறப்பாக செயல்பட்ட ஹர்விந்தர் சிங் - விஜய் ஜோடி தொடர்ந்து மூன்று செட்டுகளை கைப்பற்றியது.முடிவில் இந்திய அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.

Sep 09, 2026

ஆசிய கோப்பை ஹாக்கி: இளம் இந்திய பெண்கள் அணிக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி.

சீனாவில் நடைபெற்று வரும் 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய பெண்கள் அணி தொடர்ந்து 3-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.21 வயதுக்குட்பட்டோருக்கான இந்த தொடரில் பெண்கள் பிரிவில் அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. இந்தியா, சீனா உள்ளிட்ட 5 அணிகள் ‘எலைட்’ பிரிவில் இடம் பெற்றுள்ளன.இந்திய பெண்கள் அணி நேற்று தனது 3-வது லீக் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. போட்டியின் 5-வது நிமிடத்தில் கிருஷ்ண சர்மா கோல் அடித்து இந்திய அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 9-வது நிமிடத்தில் சுப்ரியாவும், 14-வது நிமிடத்தில் பூர்ணிமாவும் கோல் அடித்தனர்.இதனால் முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் மேலும் கோல்கள் அடித்தனர். முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் இந்திய பெண்கள் அணி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை வசப்படுத்தியது.

Sep 09, 2026

ஆசிய கோப்பை ஹாக்கி:தென் கொரியாவை வீழ்த்திய இந்திய ஆண்கள் அணி.

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் ஆண்கள் பிரிவில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டிகளில் தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு ‘டிரா’ பதிவு செய்திருந்த இந்திய அணி, நேற்று தனது 3-வது லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொண்டது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் அடித்தனர். ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.பின்னர் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். இறுதியில் இந்திய அணி 7-3 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 181 182

AD's



More News