ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை விஸ்மாயா
இந்திய தடகள வீராங்கனை விஸ்மாயா வயது 27 கடந்த 2018 ஆசிய விளையாட்டு 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். கடந்த ஆகஸ்ட் 15-ல் கொச்சியில் உள்ள விஸ்மாயா வீட்டில், போட்டி இல்லாத நாளில் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.
தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் (NADA) சார்பில் நடந்த இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட மருந்து, இவரது சிறுநீர் மாதிரியில் கலந்திருந்தது. உறுதியானது. இதனால் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
0
Leave a Reply