25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Sep 05, 2026

உலக பாரா வில்வித்தை: ஷீத்தல் தேவி மீது எதிர்பார்ப்பு.

உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரின் 3-வது கட்டப் போட்டிகள் இன்று இந்தியாவில் தொடங்குகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 109 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஷீத்தல் தேவி பங்கேற்கிறார். நடப்பு உலக சாம்பியனும், காம்பவுண்டு பிரிவில் உலகின் நம்பர்-1 வீராங்கனையுமான 19 வயது ஷீத்தல் தேவி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆண்கள் பிரிவில் உலகின் நம்பர்-1 வீரரும், நடப்பு சாம்பியனுமான தோமன் குமார், ராகேஷ் குமார் ஆகியோர் களமிறங்குகின்றனர். ரீகர்வ் பிரிவில் ஹர்விந்தர் சிங்கும் போட்டியிடுகிறார்.மேலும், செக் குடியரசின் சர்கா பல்டர் முசிலோவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளும் பங்கேற்பதால் போட்டியில் கடும் சவால் நிலவுகிறது.

Sep 05, 2026

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இன்று இந்தியா-தென் கொரியா மோதல்.

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி இன்று தனது முதல் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது.ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 1988-ம் ஆண்டு முதல் 21 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடத்தப்பட்டு வருகிறது.பெண்கள் பிரிவில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, சீனா உள்ளிட்ட 5 அணிகள் ‘எலைட்’ பிரிவிலும், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 5 அணிகள் ‘சாலஞ்ச்’ பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.முதற்கட்டத்தில் லீக் முறையில் போட்டிகள் நடைபெறும். பின்னர் ‘எலைட்’ பிரிவில் உள்ள 5 அணிகளும் காலிறுதியில் விளையாடும். ‘சாலஞ்ச்’ பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளும் காலிறுதிக்கு முன்னேறும்.இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி, 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற தென் கொரியாவை சந்திக்கிறது. இதையடுத்து செப்டம்பர் 6-ம் தேதி மலேசியாவையும், செப்டம்பர் 8-ம் தேதி ஜப்பானையும், செப்டம்பர் 9-ம் தேதி சீனாவையும் எதிர்கொள்கிறது.இந்தியா ஏற்கனவே 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ளது. கேப்டன் ஷிலெய்மா சானு தலைமையிலான இந்திய அணி மீண்டும் சிறப்பாக செயல்பட்டால், தொடர்ந்து 3-வது முறையாக கோப்பையை வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கலாம்.

Sep 04, 2026

தேசிய யூத் தடகளம்: 2 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்ற தமிழகம்.

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற 21வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகம் 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்று அசத்தியது.18 வயதுக்கு உட்பட்டோருக்கான இப்போட்டியில், தமிழகத்தின் சார்பில் 21 வீரர்கள், 16 வீராங்கனைகள் என மொத்தம் 37 பேர் பங்கேற்றனர்.ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் சாம்ராஜ், 10.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் மிர்த்திகா, 11.78 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து தங்கம் கைப்பற்றினார்.பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் சகாய ஜெமிமா, 24.54 வினாடிகளில் வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இத்தொடரில் அவர் வென்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும். முன்னதாக 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ராஜஸ்ரீ, 14.23 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். நீளம் தாண்டுதலில் மிருனிஷா, 5.69 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் சக்திவேல், 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். 110 மீட்டர் தடை ஓட்டத்தில் கிரிபால் கார்த்திக் வெண்கலம் கைப்பற்றினார்.இதன்மூலம் தமிழக அணி, 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் தொடரை நிறைவு செய்தது.

Sep 04, 2026

ஆசிய கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய பெண்கள் அணி.

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தொடர்ந்து 2வது வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியது.துபாயில் நடைபெற்ற ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா–ஹாங்காங் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.கடினமான இலக்கை விரட்டிய ஹாங்காங் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.2 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதன் மூலம் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரில் தொடர்ந்து 2வது வெற்றியைப் பதிவு செய்ததுடன் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது.

Sep 04, 2026

யு.எஸ். ஓபன்: சபலென்கா, அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்.

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், நடப்பு சாம்பியன்களான அரினா சபலென்கா மற்றும் கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.சபலென்கா அபார வெற்றி.பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், நடப்பு சாம்பியன் பெலாரஸின் அரினா சபலென்கா, ரஷ்யாவின் போலினா இயாட்சென்கோவை எதிர்கொண்டார்.53 நிமிடங்கள் மட்டுமே நீடித்த ஆட்டத்தில் சபலென்கா, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.போராடி வென்ற அல்காரஸ்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், போர்ச்சுகலின் ஜெய்மி பாரியாவை சந்தித்தார்.முதல் செட்டை 4-6 என இழந்த அல்காரஸ், பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த 3 செட்களையும் 6-0, 6-3, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.முடிவில் 4-6, 6-0, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற அல்காரஸ், 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

Sep 03, 2026

ஹாங்காங்கை எதிர்கொள்ளும் இந்திய பெண்கள் அணி.

பெண்களுக்கான ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.‘ஏ’ பிரிவில் இந்தியா, தாய்லாந்து, ஹாங்காங், பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே தாய்லாந்தை வீழ்த்திய இந்திய அணி, இன்று நடைபெறும் தனது 2-வது லீக் போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.இந்தப் போட்டியிலும் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை வலுப்படுத்த இந்திய அணி முனைப்புடன் களமிறங்குகிறது.

Sep 03, 2026

தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப்: சஹாயா ஜெமிமாவுக்கு வெண்கலம்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தத் தொடரில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.இதில் தமிழகத்தைச் சேர்ந்த சஹாயா ஜெமிமா 55.14 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 3-வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

Sep 03, 2026

லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக்: அனாஹத், ரமித் டான்டன் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

லண்டனில் நடைபெற்று வரும் கிளாசிக் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.பெண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் மரியம் மெட்வாலியை எதிர்கொண்டார். வெறும் 11 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய அனாஹத் சிங் 2-0 என்ற கணக்கில் (11-3, 11-2) வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.ஆண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் ரமித் டான்டன், கத்தாரின் அப்துல்லா அல்-தாமிமியை எதிர்கொண்டார். இதில் ரமித் டான்டன் 2-0 என்ற கணக்கில் (11-6, 11-7) வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் வீர் சோட்ரானி, சுவிட்சர்லாந்தின் யானிக் வில்ஹெல்மியை எதிர்கொண்டார். இதில் வீர் சோட்ரானி 0-2 (9-11, 9-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

Sep 03, 2026

ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக வீரர் மனோஜ் குமார் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் இந்திய தடகள சீரிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் 15-வது தொடர் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று நடைபெற்றது.ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக வீரர் மனோஜ் குமார் அபாரமாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். தனது 5-வது முயற்சியில் அதிகபட்சமாக 77.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.ஆர்மி அணியின் பிபின் 73.94 மீட்டர் தூரத்துடன் வெள்ளிப் பதக்கமும், உத்தரகாண்டைச் சேர்ந்த விகாஷ் 73.07 மீட்டர் தூரத்துடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.ஆண்களுக்கான குண்டு எறிதலில் ராஜஸ்தானின் ராம் சந்திர மாலி 15.91 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். தமிழக வீரர் பாலாஜி 15.83 மீட்டர் தூரத்துடன் வெள்ளிப் பதக்கமும், பஞ்சாப் வீரர் மால்கீட் சிங் 15.74 மீட்டர் தூரத்துடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த மிஜோ சாக்கோ குரியன் 46.89 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டத்திலும் 21.41 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் தருண் விகாஷ் 7.48 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே தூரத்தை பதிவு செய்த சரண் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

Sep 02, 2026

யூத் தடகளத்தில் தேசிய சாதனை – தமிழக வீரர் நீல் சாம்ராஜ் அசத்தல்!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 21வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கின. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்த மூன்று நாள் தொடரில், தமிழகம் சார்பில் 21 வீரர்கள் மற்றும் 16 வீராங்கனைகள் என மொத்தம் 37 பேர் பங்கேற்கின்றனர்.நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் நீல் சாம்ராஜ், 10.46 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் யூத் தடகளப் பிரிவில் புதிய தேசிய சாதனையையும் படைத்தார்.இதற்கு முன்பு 2023ஆம் ஆண்டு அன்ஷு ராஜ் 10.63 வினாடிகளில் 100 மீட்டரை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது.பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின் மிர்த்திகா, 11.78 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து தங்கப்பதக்கம் வென்றார். இது இந்தத் தொடரின் புதிய சாதனையாக அமைந்தது.பெண்களுக்கான 400 மீட்டர் அரையிறுதி முதல் பிரிவில் தமிழக வீராங்கனை சகாய ஜெமிமா, 55.94 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து மூன்றாவது இடம் பிடித்தார்.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 181 182

AD's



More News