25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Sep 08, 2026

ஐஸ்லாந்து வாள் சண்டை தொடரில் தங்கம் வென்றார் பவானி தேவி.

ஐஸ்லாந்தின் ரேய்ஜவிக் நகரில் சர்வதேச வாள் சண்டை கூட்டமைப்பு சார்பில் ‘டூர்னோய் சாட்டிலைட்’ வாள் சண்டை தொடர் நடைபெற்றது. இதில் 13 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.பெண்களுக்கான சாப்ரே பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி பங்கேற்றார்.அரையிறுதியில் துருக்கியின் யுசெல் எமினேவை எதிர்கொண்ட பவானி தேவி, 15-12 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.இறுதிப்போட்டியில் லிதுவேனியாவின் ஜியாத்ரே ராஸ்கட்டை 15-7 என்ற கணக்கில் வீழ்த்தி, பவானி தேவி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.கடந்த 2017-ம் ஆண்டிலும் இதே ‘டூர்னோய் சாட்டிலைட்’ தொடரில் பவானி தேவி தங்கம் வென்றிருந்தார். தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தத் தொடரில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.மேலும், தனிநபர் பிரிவில் இந்தத் தொடரில் அவர் வென்றுள்ள 8-வது பதக்கம் இதுவாகும். இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை பவானி தேவி வென்றுள்ளார்.

Sep 08, 2026

அமெரிக்க ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய 3 அமெரிக்க வீரர்கள்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில், நடப்பு சாம்பியனும் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலை எதிர்கொண்டார்.இதில் அல்காரஸ் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 5-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ந்து 18-வது வெற்றியையும் அல்காரஸ் பதிவு செய்தார்.மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாஃபோ, முன்னாள் சாம்பியனான ரஷியாவின் டேனில் மெட்விடேவை எதிர்கொண்டார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் டியாஃபோ 7-6 (7-1), 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது முறையாக காலிறுதிக்குள் நுழைந்தார்.ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த எம். ரேவதி, அமெரிக்காவின் மேரி காம்ஸை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Sep 08, 2026

பாரா உலக வில்வித்தை: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஷீத்தல் தேவி.

பாரா உலக வில்வித்தை சீரிஸ் (நிலை-3) போட்டி ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.இதில் பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவு அரையிறுதியில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி, சகநாட்டவரான சரிதாவை எதிர்கொண்டார்.இரு கைகளும் இல்லாத ஷீத்தல் தேவி, சிறப்பாக செயல்பட்டு 145-143 என்ற புள்ளிக் கணக்கில் சரிதாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.இதன் மூலம் ஷீத்தல் தேவி குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் ஷீத்தல் தேவி, கஜகஸ்தானின் அய்ஜதா செய்டானை எதிர்கொள்கிறார்.அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை சரிதா, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் வாங் ஷூயிடிங்கை சந்திக்கிறார்.

Sep 08, 2026

பெண்கள் ஆசிய கோப்பை: ஹாங்காங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்.

10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடைபெற்று வருகிறது.இதில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஹாங்காங் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஷவால் ஜூல்பிகர் அதிகபட்சமாக 47 ரன்கள் (35 பந்துகள், 6 பவுண்டரிகள்) விளாசினார்.தொடர்ந்து 144 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹாங்காங் அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19 ஓவர்களில் 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.இதன் மூலம் பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.‘ஏ’ பிரிவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, அரையிறுதியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.

Sep 07, 2026

ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசியாவை 11-1 என வீழ்த்திய இந்திய பெண்கள் அணி.

சீனாவின் மொகி நகரில், 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 10-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன.‘எலைட்’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை வீழ்த்தியது.இந்நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள், கோல் மழை பொழிந்தனர். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 11-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி, தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்தது.

Sep 07, 2026

பெண்கள் ஆசிய கோப்பை டி20: வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின.‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்தது. பின்னர் 115 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி, 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்ற இலங்கை அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.

Sep 07, 2026

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக்–சிராக் சாம்பியன்.

சீனாவில் ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது.ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி–சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ஜியாங் யு ரென்–ஜி டிங் ஹி ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை இந்திய ஜோடி 11-21 என்ற கணக்கில் இழந்தது. இருப்பினும், அடுத்த செட்டில் சிறப்பாக விளையாடிய சாத்விக்–சிராக் ஜோடி 21-13 என வென்று போட்டியை சமன் செய்தது.வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டிலும் அசத்திய இந்திய ஜோடி 21-17 என வெற்றி பெற்றது.ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நீடித்த போட்டியில், சாத்விக்–சிராக் ஜோடி 11-21, 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சீனா மாஸ்டர்ஸ் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. நடப்பு சீசனில் இந்திய ஜோடி வெல்லும் 2-வது பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓபனிலும் இவர்கள் சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.

Sep 07, 2026

உலக பாரா வில்வித்தை தகுதிச் சுற்றில் ஷீத்தல் தேவி அசத்தல்.

ஆமதாபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா வில்வித்தை சீரிஸ் நடைபெற்று வருகிறது. இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 109 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.பெண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவு தகுதிச் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனையுமான இந்தியாவின் ஷீத்தல் தேவி (19) பங்கேற்றார்.பிறக்கும்போதே இரு கைகளும் இல்லாத ஷீத்தல் தேவி, வலது கால் மற்றும் தோளின் உதவியுடன் வில்லை நிலைநிறுத்தி, வாயால் அம்பை செலுத்தி இலக்கை துல்லியமாகத் தாக்கி அசத்தினார்.ஆண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ராகேஷ் குமார் 702 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான தோமன் குமார் 696 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும், குர்விந்தர் சிங் 689 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும் பிடித்து நேரடியாக 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Sep 05, 2026

யு.எஸ். ஓபன்: ரிபாகினா, ஸ்வெரேவ் வெற்றி.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயினின் ஜெசிகா மனெய்ரோவை எதிர்கொண்டார். இதில் ரிபாகினா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், பிரான்சின் குவென்டின் ஹாலிஸுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்வெரேவ் 6-4, 4-6, 7-6, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

Sep 05, 2026

செஸ் தரவரிசையில் இடம்பிடித்த இளம் வீராங்கனை.

சர்வதேச செஸ் கூட்டமைப்பான ‘பிடே’ சார்பில் செப்டம்பர் மாதத்துக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த எலெனா சர்மா, 4 வயது, 6 மாதம், 16 நாட்கள் என்ற வயதில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ‘பிடே’ தரவரிசைத் தொடரில் பங்கேற்ற அவர், 1,432 புள்ளிகளைப் பெற்றார்.இதன் மூலம் ‘பிடே’ தரவரிசையில் இடம்பிடித்த இளம் வீராங்கனை என்ற பெருமையை எலெனா சர்மா பெற்றுள்ளார்.இருப்பினும், ஒட்டுமொத்தமாக இளம் வயதில் ‘பிடே’ தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற வீரர் என்ற சாதனை மகாராஷ்டிராவைச் சேர்ந்த சர்வாக்யா சிங் குஷ்வாஹா வசம் உள்ளது. அவர் 3 வயது, 7 மாதம், 20 நாட்கள் வயதில், 2025 டிசம்பர் மாத தரவரிசையில் இடம்பிடித்திருந்தார்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 181 182

AD's



More News