25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Aug 20, 2025

சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர்  .

சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவில் உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா என இருவர் உட்பட மொத்தம் 10 பேர் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் குகேஷ், பிரக்ஞானந்தாவை சந்தித்தார்.பிரக்ஞானந்தா, துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். போட்டியின் 36 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்  சர்வதேச செஸ் லைவ் தரவரிசையில், 5 புள்ளி கூடுதலாக பெற்ற பிரக்ஞானந்தா (மொத்தம் 2784.0)  ஒரு இடம் முன்னேறி, உலகின் 'நம்பர்-3' வீரர் ஆனார்

Aug 20, 2025

ஹர்மன்பிரீத் கவுர் கிரிக்கெட் பெண்கள் உலக கோப்பை கேப்டன் .

பெண்களுக்கான 13வது உலக கோப்பை தொடர்  (50 ஓவர், செப். 30-நவ. 2) இந்தியா, இலங்கையில் நடக்க உள்ளது. இந்தியா, ‘நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர், துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா தொடர்கின் றனர்.

Aug 20, 2025

கிரிக்கெட் ஆண்கள் ஆசிய கோப்பை  தொடரில்  சூர்யகுமார் யாதவ் கேப்டன் ,துணை கேப்டன்  சுப்மன் கில்!

 ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை '14-20' கிரிக்கெட் தொடர் (செப். 9-28) நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணித் தேர்வு நேற்று மும்பையில் நடந்தது. தேர்வுக்குழு தலைவர் அகார்கர் பங்கேற்றார். 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப் பட்டது. சூர்யகுமார் யாதவ் கேப்டன். துணை கேப்டனாக   சுப்மன் கில் நியமிக்க பட்டார். 

Aug 20, 2025

டென்னிஸ்  'சாம்பியன்' ஆனஸ்வியாடெக், அல்காரஸ் .

ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் சின் சினாட்டி ,பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் போலந்தின் ஸ்வியாடெக் (உலகின் 'நம்பர் -3'), இத்தாலியின் பாவோலினி ('நம்பர்-7' மோதினர்.முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார் ஸ்வியாடெக். தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-4 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 50 நிமிடம் நடந்த போட் டியின் முடிவில் ஸ்வியாடெக், 7-5, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, முதன் முறையாக கோப்பை கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-1', இத்தாலியின் சின்னர், 'நம்பர்-2', ஸ்பெயினின் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டில் அல்காரஸ் 5-0 என முன் னிலையில் இருந்தார்.உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட சின்னர், போட்டியில் இருந்து விலகியதால் அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட, கோப்பை வென்றார். 

Aug 19, 2025

ஏ.டி. பி., சாலஞ்சர் டென்னிஸ் இந்திய ஜோடி 2வது இடம் .

ஏ.டி. பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ரித்விக் ஜோடி அமெரிக்காவின் பாட்ரிக், ரியான் எதிர் ஜோடியை கொண்டது.ஒரு மணி நேரம்,23 நிமிடம் நடந்த போட்டி யின் முடிவில் இந்திய ஜோடி 4-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பெற்றது. 

Aug 19, 2025

டைமண்ட் லீக் தொடர் பைனலுக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.

டைமண்ட் லீக் போட்டி உலக தடகள கூட்டமைப்பு சார்பில் ,16வது சீசன் தற்போது நடக்கிறது. உலகின் 12 இடங்களில் 2025ல் இதுவரைபோட்டிகள் நடந்தன.  ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக  செயல்பட்ட 'டாப்-6' நட்சத்திரங்கள், டைமண்ட் லீக் பைனலில், பங்கேற்க தகுதி பெறலாம். எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2025ல் இரு தொடரில் மட்டும் பங்கேற்றார். கத்தாரில் முதன் முதலாக 90 மீ., துாரத்துக்கும் (90.23 மீ.,) மேல் எறிந்து இரண்டாவது இடம் (7 புள்ளி) பிடித்தார். பாரிசில் 88.16 மீ.,துாரம் எறிந்து, முதலிடம் (8 புள்ளி) பிடித்தார். இரு தொடரில் மொத்தம் 15 புள்ளி பெற்ற நீரஜ் சோப்ரா, தற்போது பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.

Aug 19, 2025

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ,இந்தியா  “தங்கம்”, 'வெள்ளி'

 கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ,  ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் அன்மோல் ஜெயின் (580 புள்ளி), ஆதித்யா மல்ரா (579), சவுரப் சவுத்தரி (576) அடங்கிய இந்திய அணி, 1735 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் ஜூனியர் ஆண்கள் தனிநபர்  ,இந்தியாவின் ஜோனாதன் கவின் அந்தோணி (582.20 புள்ளி), முகேஷ் (582.18), கபில் (579.15) முறையே 2,3,4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர் அடுத்த நடந்த பைனலில் கபில், 243.0 புள்ளிகளுடன் தங்கத்தை வென்றார். 

Aug 19, 2025

யூத் கன்டெண்டர் சர்வதேச டேபிள் டென்னிசில் இந்திய 'சாம்பியன்கள் ' .

சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில் ' யூத்' கன்டெண்டர் தொடர், ஜோர்டானில் இந்தியாவின்  அனன்யா, அன்கோலிகா  15 வயது பெண்களுக்கான பைனலில் மோதினர். இதில் அனன்யா 3-0 என (11-8, 11-1, 11-3) நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இந்தியாவின் ஹர்குன்வர் சிங், குஷால் ஆண்களுக்கான (19 வயது) பைனலில் ஹர்குன்வர் சிங் 3-1 என்ற செட் கணக்கில் (8-11, 11-8, 11-6, 11-4) வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.இந்தியாவின் வைஷ்ணவி, திவ்யான்ஷி 17 வயது பெண்களுக்கான பைனலில் மோதினர். இதில் திவ்யான்ஷி, 3-0 என (11-5, 11-3, 11-4) வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.இந்தியாவின் திவ்யான்ஷி, அதர்வா ஜோடி  15 வயது கலப்பு இரட்டையரில் 3-0 என ஈரானின் நிஹால், அல் தஹேர் ஜோடியை வென்று சாம்பியன் ஆனது.திவ்யான்ஷி, 2-3 என ஈரானின் செடயேசிடம் தோற்று, 19 வயது பிரிவு பைனலில் இரண்டாவது இடம் பிடித்தார்.இந்தியாவின் சித்தாந்த் (15 வயது), அபிநந்த் (17 வயது), பெண்கள்பிரிவில்அனன்யா(17 வயது), ஷிரியா, வைஷ்ணவி (19 வயது) ஆண்கள் பிரிவில் 3வது இடம் பிடித்தனர்.

Aug 18, 2025

பெகா ஓபன் ஸ்குவாஷ் தொடரில் அனாஹத் சிங் 2வது இடம்

ஆஸ்திரேலியாவில் நடந்த பெகா ஓபன் ஸ்குவாஷ் தொடர் ,பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங் 17, எகிப்தின் ஹபிபா ஹனி மோதினர்.அரையிறுதி போட்டியின் போது கணுக்காலில் காயமடைந்த அனாஹத், முதல் செட்டை 11-9 என வென்றார். அடுத்த இரு செட்களை 5-11, 8-11 என இழந்த அனா ஹத், 4வது செட்டில் 4-10 என பின்தங்கி இருந்த போது காயத்தால் பாதியில் விலகினார்.எகிப்து வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். உலக தரவரிசையில் 53வது இடத்தில் உள்ள அனாஹத், 2வது இடத்துடன் ஆறுதல் அடைந்தார்.

Aug 18, 2025

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 'ஏ' பெண்கள் அணி, கோப்பை வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா சென்ற இந்தியா 'ஏ' பெண்கள் அணி, பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. நேற்று, பிரிஸ்பேனில் 3வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்தியா 'ஏ' அணிக்கு 47.4 ஓவரில் 216 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா 'ஏ' அணி 27.5 ஓவரில் 222/1 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.  இந்தியா 'ஏ' அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

1 2 ... 125 126 127 128 129 130 131 ... 182 183

AD's



More News