'கேலோஇந்தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் நேற்றுபீஹாரில்,பெண்களுக்கான வாலிபால் 'பி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜார்க் கண்ட் அணிகள் மோதின. தமிழக அணி3-0 (25-13, 25-11,25-7) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 'ஏ' பிரிவு போட்டியில் மேற்கு வங்க அணி3-0 (25-9, 25-7, 25-9) என பீஹாரை வென்றது.ஆண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் பின்தங்கி இருந்த ஜம்மு காஷ்மீர் அணி, பின் எழுச்சி கண்டு 3-2 (18-25, 25-20, 16-25, 27-25, 15-9) உத்ரகாண்ட் அணியை வீழ்த்தியது. 'பி' பிரிவு போட்டியில் குஜராத் அணி 3-1 (25-12, 18-25, 25-18, 25-19) என கேரளாவை வென்றது
கபடி 'நடப்பு சாம்பியன்' ஆண்களுக்கான கபடி லீக் போட்டியில் ஹரியானா, கர்நாடகா அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் 28-14 என முன்னி லையில் இருந்த ஹரியானா, ஆட்ட நேர முடிவில் 57-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.பெண்களுக்கான லீக் போட்kடியில் 'நடப்பு சாம்பியன்' ஹரியானா அணி 33-32 என பஞ்சாப் அணியை வீழ்த்தியது.ஹாக்கி இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியா சென்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று. முதல் மூன்று போட்டியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி யிடம் தோல்வியடைந்த இந்தியா, 4வது போட்டியில் சீனியர் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. நேற்று, பெர்த்தில் நடந்த கடைசி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் மோதின. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்னீத் கவுர் ஒரு கோல் அடித்தார்.. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது.
3RD MAY IPL MATCH BANGALORE – CHENNAI MAY 3-ம் தேதி பெங்களுரில், சென்னை, பெங்களுர், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 213/5 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 211/5 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக Romario Shepherd தேர்ந்தெடுக்கப்பட்டார்.4TH MAY IPL MATCH KOLKATTA - RAJASTHAN 4-ம் தேதி கொல்கத்தாவில், ராஜஸ்தான், கொல்கத்தா, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 206/4 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 205/8 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ANDRE RUSSELL தேர்ந்தெடுக்கப்பட்டார்.4-ம் தேதி தர்மசாலாவில் பஞ்சாப், லக்னோ, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 236/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய லக்னேர் அணி 199/7 ரன்கள் தோல்வியடைந்தது.. 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PRABHSIMRAN SINGH தேர்ந்தெடுக்கப்பட்டார்.
“யூத் ஸ்டார் கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் தாய்லாந்தில்,19 வயதுக்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் அன்குர் பட்டாச் சார்ஜீ, அபினாத் பிரதாவதி ஜோடி, தென் கொரியாவின் லீ ஜங்மோக், சோய் ஜிவூக் ஜோடியை எதிர் கொண்டது. இந்திய ஜோடி 3-1 (11-7, 8-11, 11-8, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பட்டத்தை வென்றது. (19 வயது) பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சின்ட் ரெலா தாஸ், திவ்யான்ஷி போவ்மிக் ஜோடி 1-3 (7-11, 15-13, 1-11, 10-12) என தாய்லாந்தின் விராகர்ன் தயாபிடக், பாட்சரபோன் வோங்லாகோன் ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றது. 15 வயதுக்குட்பட்ட பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ரியானா, அனன்யா த் ஜோடி வெள்ளி வென்றது. பெண்கள் ஒற்றையரில் (15 வயது ) இந்தியாவின் திவ்யான்ஷி போவ்மிக் வெள்ளி வென்றார்.
MAY 2-ம் தேதி அகமதாபாத்தில், குஜராத், ஐதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 224/6, ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணி 186/6 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது, 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PRASIDH KRISHNA தேர்ந்தெடுக்கப்பட்டார். பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
செஸ் உலகில் முதன் முறையாக இரு நாடுகள் நேருக்கு நேர் மோத உள்ளன. இருதரப்பு கிரிக்கெட் போன்ற இப்போட் டியில் செஸ் உலகின் வலுவான இந்தியா - அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன..போட்டியை நடத்தும் நாடு என்பதால், அமெரிக்க நட்சத்திரங்கள், 5 போட்டியிலும் வெள்ளை நிற காய்களுடன் விளையாடுவர். முதல் போட் டியில் இந்தியாவின் குகேஷ்-அமெரிக்காவின் நகமுரா மோதுவர். அதைத் தொடர்ந்து அர்ஜுன்-பேபியானா காருணா, சாகர் ஷா -லெவி ரோஸ்மன், திவ்யா-காரிஸ்சா, ஈதன் வாஸ்-அடீவ்யுமி மோத உள்ளனர். இதன் பின் இரு அணிகள் மோதும் போட்டி இந்திய மண் ணில் நடத்தப்பட உள்ளது. இந்திய அணிக்கு உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்க அணிக்கு உலகின் 'நம்பர்-2' ஹிகாரு நகமுரா தலைமை ஏற்கின்றனர். மொத்தம் 5 போட்டி நடக்கும். ஒவ்வொரு போட்டி யிலும் இருவருக்கும் தலா 10 நிமிடம் தரப்படும். ஒருவேளை 'டிரா' ஆனால், அடுத்து 5 நிமிடம், 1 நிமிடம் கொண்ட போட்டியாக, முடிவு கிடைக் கும் வரை நடத்தப்படும். 'சேக் மேட்' என பெயரிடப்பட்ட இப்போட்டி வரும் அக்டோபர் 4ல், அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள 1 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட, இஸ்போர்ட்ஸ் மைதானத்தில் (ஆர்லிங்டன்) நடக்க உள்ளது.2500 பேர் நேரடியாக இதை கண்டு ரசிக்கலாம். போட்டிகள் 90 அடி உயரமான ராட்சத ஸ்கிரீனில் ஒளிபரப்பாகும். வழக்கமாக செஸ் அரங்கில் நிலவும் அமைதி போல இல்லாமல் உற்சாகத்துடன் பார்க்கலாம்.
(ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில்அனைத்துஇந்தியகால்பந்துகூட்டமைப்பு,ஒவ்வொருஆண்டும்சிறப்பாகசெயல்படும்வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும்.நேற்று,ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் சிறந்த வீரருக்கான விருதை சுபாஷிஷ் போஸ் கைப்பற்றினார். கோல்கட் டாவை சேர்ந்த தற்காப்பு வீரரான இவர், இந்தியாவுக்காக 42 போட்டியில் பங்கேற்றுள்ளார். இவரது தலைமையிலான மோகன் பகான் அணி, இந்தியன் சூப் பர் லீக் (ஐ. எஸ்.எல்.,) 11வது சீசனில் (2024-25) கோப்பை வென்றது. தவிர, லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து ஐ.எஸ்.எல்., ஷீல்டு வென்றது.தெலுங்கானாவை சேர்ந்த மத்தியகள வீராங்கனையான ஈஸ்ட் பெங்கால் அணியின் சவுமியா சிறந்த வீராங்கனைக்கான விருதை தட்டிச் சென்றார். தெலுங்கானாவை சேர்ந்த மத்தியகள வீராங்கனையான இவர், இந்தியாவுக்காக 33 போட்டியில் களமிறங்கினார். சிறந்த கோல்கீப்பருக்கான விருதை ஹிமாச்சல பிரதேசத்தின் விஷால் கைத் கைப்பற்றினார். இவர், ஐ.எஸ்.எல்., 11வது சீசனில் சிறந்த கோல்கீப்பராக தேர்வாகினார். பெண்கள் பிரிவில் சிறந்த கோல்கீப்பராக மணிப்பூரின் பந்தோய் சானு கைப்பற்றினார்.சிறந்த நம்பிக்கைக்குரிய வீரராக கோவாவின் பிரிசான் பெர்ணான்டஸ், வீராங்கனையாக மணிப்பூரின் தோய்பி சானா சானு தேர்வாகினர்.
கராத்தே கோஜுரியு தேசியக் கராத்தே பஞ்சாபில் 2வது அனைத்து சாம்பியன்ஷிப் ,தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 13 அணிகள் பங்கேற்றன. இதில் சிறப்பாக செயல்பட்ட தமிழக வீரர்கள், 34 தங்கம், 28 வெள்ளி, 35 வெண்கலம் என, மொத்தம் 97 பதக்கங்கள் வென்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் கைப்பற்றினர். கர்நாடகா, பஞ்சாப் அடுத்த இரு இடம் பிடித்தன.டென்னிஸ், பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ஜார்ஜியாவில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா ஜோடி, ரஷ்யாவின் வார்வரா பான்ஷினா, டேரியா ஜோடியை எதிர் கொண்டது. ராஷ்மிகா ஜோடி 6-3, 3-6, 10-8 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன் னேறியது.இந்தியாவின் ருடுஜா போசாலே, பெய்ஜ் மேரி ஜோடி, மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கெயட்டனோ, வடக்கு மரியானா தீவின் கரோல் லீ ஜோடியை சந்தித்தது. ருடுஜா ஜோடி 6-7, 6-3, 10-8 என போராடி வென்றது.
30TH APRIL IPL MATCH CHENNAI - PUNJAB APRIL 30-ம் தேதி சென்னையில், பஞ்சாப், சென்னை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 190/10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 194/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SHREYAS IYER தேர்ந்தெடுக்கப்பட்டார்.1ST MAY IPL MATCH. MUMBAI - RAJASTHANMAY 1-ம் தேதி ஜெய்ப்பூரில், மும்பை, ராஜஸ்தான், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 217/2 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 117/10 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது, 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக RYAN RICKELTON தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 15 தங்கம், 6 வெள்ளி, 22 வெண்கலம் 43 என, பதக்கம் கைப்பற் றிய இந்தியா 2வது இடத்தை கைப்பற்றியது.ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டானில், 17 15, வயதுக்குட்பட்டோருக்கான நடந்தது. இதன் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவுக்கு 11 தங்கம், 3 வெள்ளி, 11 வெண்கலம் என, 25 பதக்கம் கிடைத்தது. நேற்று 17 வயதுக்குட்பட்டோருக்கான பைனல் நடந்தது. பெண்களுக்கான 46 கிலோ பிரிவில் இந்தியாவின் குஷி சந்த், மங் கோலியாவின்அல்தான்சுல் மோதினர். குஷி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். மற்ற எடைப்பிரிவு பைன்லில் இந்தியாவின் அஹானா சர்மா (50 கிலோ), ஜன்னத் (54 கிலோ), அன்ஷிகா (80+ கிலோ) வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றனர். சிம்ரன்ஜீத் கவுர் (60 கிலோ), ஹர்சிகா (63 கிலோ) வெள்ளி வென்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் கிடைத்தது. .