சிட்னி அணியில் பிக் பாஷ் லீக்' தொடரில் அஷ்வின்,
அஷ்வின் இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ,டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்கள் பட்டியலில், கும்ளேவுக்கு (619) அடுத்து, 2வது இடத் தில் உள்ளார் அஷ்வின் (537). கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் டில் இருந்து ஓய்வு பெற்றார். பிரிமியர் லீக் அரங்கில் சென்னை (2008-15, 2025), புனே (2016), பஞ்சாப் (2018-19), டில்லி (2020-21), ராஜஸ்தான் (2022-24) அணிகளுக்காக, களமிறங்கினார். சமீபத்தில் பிரிமியர் லீக் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார் அஷ்வின்.
சிட்னி தண்டர் அணிக்காக ஆஸ்தி ரேலியாவில் நடக்கவுள்ள 'பிக் பாஷ் லீக்' 15வது சீசனில் (டிச. 15 - 2026, ஜன. 26) விளையாட ஒப்பந்தமானார் அஷ்வின். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
வீரர்கள் ஏலத்தில் (அக். 1) இடம் பெற்றுள்ள அஷ்வின், சர்வதேச லீக் டி-20' 4வது சீசனுக்கான (டிச. 2 2026, ஜன. 4) தேர்வாகும் பட்சத்தில், 'பிக் பாஷ் லீக்' தொடரில் பின் பாதியில் களமிறங்குவார்.
0
Leave a Reply