கால்பந்து அரங்கில் சிறந்த வீராங்கனை விருதுபெற்ற ஸ்பெயினின் அய்டனா பொன்மதி.
பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை சார்பில் கால்பந்தில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கு, 1956 முதல் 'பாலன் டி ஆர்' விருது வழங்கப்படுகிறது. உலக கால்பந்து 'பிபா' தரவரிசையில் 'டாப்-100' பட்டியலில் உள்ள நாடுகளின் பத்திரிகையாளர்கள் ஓட்டுப்பதிவு தேர்வு செய்வர்.
அர்ஜென்டினாவின் மெஸ்சி அதிகபட்சம் 8 முறை, போர்ச்சுகலின் ரொனால்டோ 5 முறை இவ்விருது வென்றனர். 2025ம் ஆண்டின் சிறந்த வீரராக பிரான்சின், அவுஸ்மேன் டெம் பெலே தேர்வு செய்யப்பட்டார். கிளப் அரங்கில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடும் இவர், ரேமண்ட் கோபா, மிட்செல் பிளாட்டினி, ஜீன்-பியரே பாபின், ஜினடின்ஜிடேன், கரிம் பென்சிமாவுக்குப் பின், 'பாலன் டி ஆர்' விருது வென்ற 6வது பிரான்ஸ் வீரர் ஆனார்.
ஸ்பெயினின் அய்டனா பொன்மதி, சிறந்தவீராங்கனையாக ,தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ('ஹாட்ரிக்') தேர்வானார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா அணிபைனலுக்கு முன்னேற உதவினார்.சிறந்த வீராங்கனையாக ஐரோப்பிய கால்பந்து தொடரில்,ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
0
Leave a Reply