மல்யுத்த ரேங்கிங் தொடர் மங்கோலியாவில் நடக்கிறது. பெண்களுக்கான பிரீஸ்டைல் போட்டி நடந்தன. இந்தியாவின் அன்டிம் (53 கிலோ), பைனலில் ரஷ்யாவின் நடாலியாவை 10-0 என வீழ்த்தி தங்கம் கைப்பற்றினார். 57 கிலோ பிரிவு பைன லில் இந்தியாவின் நேஹா, 4-0 என மங்கோலியாவின் போலூர்டுயாவை வென்று, தங்கம் வசப்படுத்தினார்.மற்ற இந்திய வீரா ங் க னைகள் ஹர்ஷித்தா (72). முஸ்கான் (59) தங்களது பிரிவில் பங்கேற்ற போட்டியிலும் வென்று, தங்கம் தட்டிச் சென்றனர். 50 கிலோ போட்டியில் நீலம் வெண்கலம் வென்றார்.ஆண்களுக்கான கிரிகோ போட்டிகள் ரவுண்டு ராபின்' முறையில் நடந்தன. 55 கிலோ பிரிவில் 4 போட்டியில் இந்தியாவின் அனில் மோர், தங்கம் கைப்பற்றினார். மற்ற இந்திய வீரர் கள் நிஷாந்த் (77), கரண் கம்போஜ் (87), நீரஜ் (67) வெண்கலப் பதக்கம் கைப் பற்றினர். நேற்று நடந்த 7 பிரிவுகளில் இந்தியாவுக்கு 6 பதக்கம்( 1 தங்கம், 2வெள்ளி, 3 வெண்கலம்) கிடைத்தன.இதுவரை இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி,4 வெண்கலம் என மொத்தம் 2 பதக்கம் கைப்பற்றியுள்ளது.
தென் கொரியாவில் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இந்தியா சார்பில் 58 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் 18 வயது பூஜா பங்கேற்றார். 2023ல் நடந்த 23 ஆசிய சாம்பியன் ஷிப்பில் தங்கம் வென்ற இவர், நேற்று அதிகபட்சம் 1.89 மீ., உயரம் தாண்டி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியாவின் குல்வீர் சிங், 13:24.77 நிமிடத்தில் வந்து தங்கப்ப தக்கம் வென்றார். இது ஆசிய சாம்பி யன்ஷிப் சாதனை ஆனது. முன்னதாக 2015ல் கத்தார் போட்டியில் முகமது அல் கார்னி (கத்தார்), 13:34.47 நிமி டத்தில் வந்து இருந்தார்.குல்வீர் வென்ற இரண்டாவது தங்கம் இது. முன்னதாக 10,000 மீ., ஓட்டத்தில் சாதித்து இருந்தார். கோபால் சைனி (1981), பஹ துர் பிரசாத் (1993), லட்சமணனுக்கு (2017) அடுத்து 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற வீரர் குல்வீர் சிங்.
MAY 29-ம் தேதி பஞ்சாப்பில், பெங்களூர், பஞ்சாப் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 101/ 10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 106/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SUYASH SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் தகுதி சுற்றில் பெங்களூர் அணி பைனலுக்கு முன்னேறியது.
தடகளம்26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் போட்டி நடந்தது. கடைசி நேரத்தில் முந்திய இந்தியாவின் அவினாஷ் சபிள், 8:20.92 நிமிடத்தில் வந்து தங்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தின் பைனல் நடந்தது. கடைசி 10 மீ., துாரத்தில் முந் திய இந்தியாவின் ஜோதி, 12.96 வினாடியில் வந்து தங்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 4X400 5., தொடர் ஓட்ட ('ரிலே') பைனல் நடந்தது. இந்தியா சார்பில் துவக்கத்தில் ஜிஸ்னா, அடுத்து ரூபல், ரஜிதா ஓடினர்.கடைசி தமிழகத்தின் சுற்றில் சுபா, மின்னல் வேகத்தில் ஓடி, 3:34.18 நிமிட நேரத்தில் வந்த இந்தியா தங்கம் கைப்பற்றியது. நேற்று ஒரே நாளில் இந்தியா, 3 தங்கம் 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கம் வென்றது. செஸ் சர்வதேச செஸ் தொடர் நார்வேயில்நடக்கிறது. ஓபன் பிரிவில், நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன்(நார்வே) உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர்.மூன்றாவது சுற்றில் குகேஷ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை சந்தித்தார்.31வது நகர்த்தலில்,குகேஷ் 42வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். பெண்களுக்கான மூன்றாவது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, ஸ்பெயினின் சாராவை வென்றார். இந்தியாவின் வைஷாலி, 'டை பிரேக்கரில்' சீனாவின் வென்சுனிடம் வீழ்ந்தார். மூன்று சுற்று முடிவில் உக்ரைனின் அனா முஜிசக் (6.0), ஹம்பி (6.0), சீனாவின் டிங்ஜீ (4.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். குத்து சண்டை சர்வதேச குத்துச்சண்டை தாய்லாந்தில்,தொடர்தாய்லாந்தில், நடக்கிறது. ஆண்களுக்கான 90 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நமன் தன்வர், உஸ்பெகிஸ்தானின் ஜூராபோவ் எலியோர்பெக் மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நமன் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார் பெண்களுக்கான அரையிறுதியில் ஏமாற்றிய இந்தியாவின் தமன்னா (51 கிலோ), லால்பாக் மாவி (80 கிலோ), பிரியா (57 கிலோ) வெண்கலம் கைப்பற்றினர்.
பாட்மின்டன் சர்வதேச பாட்மின்டன் தொடர் சிங்கப்பூரில் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி ('நம்பர் -27'), மலேசியாவின் ஹோன் ஜியான், முகமது ஹைக்கல் ஜோடியை ('நம்பர் -41') சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-16, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறியது. பெண்கள் இரட்டையரில், இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி 21-14, 19-21, 21-17 என சீனதைபேவின் சங், யங் ஜோடியை வீழ்த்தியது. ஹாக்கிஐரோப்பிய நாடுகளில் நடக்கவுள்ள புரோ லீக் போட்டியில் (ஜூன் 14-29) பங்கேற்க சலிமா தலைமையிலான இந்திய பெண்கள் அணி, பெங்களூருவில் இருந்து நெதர்லாந்து சென்றது. செஸ் சர்வதேச செஸ் தொடர் நார்வேயில்நடக்கிறது. ஓபன் பிரிவில், நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே) உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் குகேஷ், அர்ஜுன் மோதினர். முடிவில் 62வது நகர்த்தலில் அர்ஜுன் வெற்றி பெற்றார். பெண்களுக்கான இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் டிங்ஜீ மோதிய போட்டி டிரா ஆனது. வெற்றியாளரை நிர்ணயிக்க நடந்த 'டை பிரேக்கர்' போட்டியும் டிரா ஆனது.ஹாக்கி பெண்கள் அர்ஜென்டினாவில், நான்கு நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் நடக்கிறது. இந்தியா அர்ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் பங்கேற்கின்றன. முதலிரண்டு போட்டியில் சிலி, உருகுவேயை வீழ்த்திய இந்தியா, 3வது லீக் போட டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என சம நிலையில் இருந்தது. இந்திய அணிக்கு கனிகா (44வது நிமிடம்) ஒரு கோல் அடித்து கை கொடுத்தார்.முடிவில் இந்திய அணி என 2-0 என வெற்றி பெற்றது.இந்திய அணி, தனது 4வது லீக் போட்டியில் (மே 30) சிலியை மீண்டும் சந்திக்கிறது. ஸ்குவாஷ் இங்கிலாந்தின் பர்மிங்காமில் பிரிட்டிஷ் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன.இந்தியா சார்பில் இளம் வீராங்கனை அனாஹத் சிங் பங்கேற்கிறார்.தகுதிச்சுற்று முதல் போட்டியில் அனாஹத் சிங் 3-0 (12-10, 11-3, 11-9) ரஷ்யாவின் ஹேலே வார்டை வீழ்த்தினார். அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் அனாஹத் சிங், இங்கிலாந்தின் மில்லி டாம்லின்சனை எதிர் கொண்டார். இதன் முதல் இரு செட்டை 11-6, 11-6 என வசப்படுத்தினார். அடுத்து நடந்த மூன்றாவது செட்டையும் 11-4 என எளிதாக வென்றார். 23 நிமிடம் நடந்த போட்டி முடிவில் அனா ஹத் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
MAY 27-ம் தேதி லக்னோவில், பெங்களூர், லக்னோ, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 227/3 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 230/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக JITESH SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் நேற்று துவங்கியது. 43 நாடுகளில் இருந்து 2000 வீரர், வீராங்கனைகள் . பங்கேற்கின்றனர். ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியாவின் குல்வீர் சிங் 26, சிறப்பாக செயல்பட்டார். ஆண்களுக்கான 20 கி.மீ., நடை பந்தயம் நடந்தது. இந்தியாவின் செர்வின் செபாஸ்டியன், ஒரு மணி நேரம், 21 நிமிடம், 13.60 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலம் கைப்பற்றினார். பெண்களுக்கான ஈட்டி எறிதலில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்தியாவின் அன்னு ராணி, அதிகபட்சம் 58.30 மீ., துாரம் மட்டும் எறிய, 4வது இடம் தான் கிடைத்தது. ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் அரையிறுதியில் அசத்திய இந்தியாவின் விஷால் தென்னரசு (46.05 வினாடி) பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு வீரர் ஜெய்குமார் (46.87) முதல் அரையிறுதியில் 4 வது இடம் பிடித்து வெளியேறினார். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் வித்யா (53.32), ரூபல் (53.00) வெற்றி பெற்றனர். உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சர்வேஷ் (2.10 மீ.,) பைனலுக்கு தகுதி பெற்றார்.
பாட்மின்டன்சிங்கப்பூரில் சர்வதேசபாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது.பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, கனடாவின் வென்யு ஜங்கை சந்தித்தார். சிந்து 21-14, 219 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் கால்பந்து சவுதி அரேபியாவில் 'சவுதி புரோ லீக்' கிளப் கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 18 அணி கள் பங்கேற்றன. உலகின் முன்னணி வீரர் போர்ச் சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 40, இடம் பெற்ற அல்நாசர் அணி, தனது கடைசி லீக் போட்டியில் அல்படே அணியை சந்தித்தது. இதில் அல் நாசர் அணி 2-3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்விய டைந்தது. 70 புள்ளியுடன் (34 போட்டி, 21 வெற்றி,7'டிரா',6 தோல்வி) பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. இப்போட்டியில் 42வது நிமிடம் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து கிளப் கால்பந்து அரங்கில் 800 கோல் அடித்த முதல் வீரர் ஆனார்.இந்தசீசனில் 25 கோல் அடித்து 'கோல்டன் பூட்' (தங்க ஷூ) தட்டிச் சென்றார். கிரிக்கெட்'ஆப்பரேஷன் சிந்தார்' வெற்றியை கொண்டாடும் வகையில், ஆமதாபாத்தில் நடக்க உள்ள பிரிமியர் கிரிக்கெட் பைனலை (ஜூன் 3) காண இந்திய முப்படை தளபதிகளுக்கு பி.சி.சி.ஐ., அழைப்பு.பிரிமியர் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்தன. இன்று ஓய்வு நாள். நாளை முதல் 'பிளே ஆப் சுற்று துவங்குகிறது.
MAY 26-ம் தேதி ஜெய்ப்பூரில், மும்பை, பஞ்சாப், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 184/7 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 187/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக JOSH INGLIS தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வில்வித்தை உலக தரவரிசை வெரோனிகா கோப்பை வில்வித்தை போட்டிசுலோவேனியாவில் நடந்தது. ஆண்கள் தனிநபர் காம் பவுண்டு பிரிவில் இந்தியாவின் பிரதமேஷ் பாலசந்திர பியூஜ், முன்னாள் உலக சாம் பியன், ஆஸ்திரியாவின் நிகோ வியனர்(காலிறுதி), சக வீரர் பிரதமேஷ் ஜவஹரை(அரையிறுதி) வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.இதில் நடப்பு சாம்பியன் ஈரானின் ஷமாய் யம்ரோமை எதிர்கொண்டார். முதலில் பின்தங்கிய பிரதமேஷ், பின் சிறப்பாக செயல்பட போட்டி148,148 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி'ஷூட் ஆப்' முறைக்கு சென்றது. இதில் அசத்திய பிரதமேஷ், தங்கப்பதக்கம் கைப்பற்றினார். பாட்மின்டன்சிங்கப்பூர் ஓபன்'சூப்பர்750' தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் ஒற்றையர் பிரிவில் சிந்து, பிரனாய் முத்திரை பதிக்கலாம். இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் ஜோடி சாதிக்கலாம். குத்துச்சண்டைபாங்காக்கில் நடக்கும் தாய்லாந்து சர்வதேச ஓபன் தொடரின் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை சஞ்சு (60 கிலோ பிரிவு) முன்னேறினார். அன்ஷுல் கில்லும் (90+) அரையிறுதிக்கு தகுதி. துப்பாக்கிசுடுதல் ஜெர்மனியில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் நடக்கிறது. இதில் பெண்களுக்கான25 மீ., பிஸ்டல் பிரிவில் போட்டி நடந்தது. இந்தியாவின் தேஜஸ்வினி,575 புள்ளி எடுத்து4வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.அடுத்து துவக்கத்தில் பைனலில் இருந்தே அசத்தினார். முடிவில்31புள்ளியுடன் முதலிடம் பெற்று,தங்கம் கைப்பற்றினார்.இத்தொடரில் இந்தியா வென்ற3வது தங்கம். இதுவரை3 தங்கம்,4 வெள்ளி,4 வெண்கலம் என11 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஹாக்கி நான்கு நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் அர்ஜென்டினாவில்நடக்கிறது.இந்தியா, அர்ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இந்தியா, சிலியை வீழ்த்தியது.நேற்று தனது இரண்டாவது போட்டியில் இந்தியா, உருகுவேயை எதிர் கொண்டது.3வது நிமிடம் கிடைத்த பெனால்டி கார்னரில் உருகுவேயின் செய்கல் ஒரு கோல் அடித்தார். இந்தியாவின் சோனம் (21) ஒரு கோல் அடித்தார். மறுபக்கம் அகஸ்டினா (24, உருகுவே ) கோல் அடிக்க, இந்தியா1,2 என பின்தங்கியது.46 வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார் கனிகா. தொடர்ந்து அசத்திய இவர், பீல்டு கோல் (50) அடித்து கைகொடுக்க, இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஈட்டி எறிதல்6வது உலக பாரா தடகள கிராண்ட் ப்ரி போட்டி சுவிட்சர்லாந்தில்நடந்தது.ஆண்களுக்கான எப்.42 பிரிவு ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் பங்கேற்றார் மகேந்திர குர்ஜார்27. ராஜஸ்தானை சேர்ந்த இவர், முதல் இரு வாய்ப்பில் 56.11, 55.51 மீ.துாரம் எறிந்தார். மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சம்61.17 மீ., துாரம் எறிந்தார். இது புதிய உலக சாதனை ஆனது. கடைசி3 வாய்ப்பில் மகேந்திர குர்ஜார் (58.54, 57.25, 58.07 மீ.,) ஏமாற்றினார். எனினும் தங்கம் கைப்பற்றி அசத்தினார்.100 மீ., டி 46 பிரிவில் இந்தியாவின் பெருமாள்சாமி சந்தனகுமார், 12.31 வினாடியில் வந்து, வெள்ளி வென்றார்.400 மீ., (டி 11) போட்டியில் இந்தியாவின் மூர்த்தி பிரகதீஷ்வர ராஜா (01 நிமிடம், 01:59 வினாடி) இரண்டாவது இடம் பெற்றார்.ஈட்டி எறிதல் எப் 64 பிரிவில் இந்தியாவின் சுமித் அன்டில் அதிக பட்சம் 72.35 மீ., எறிந்து முதலிடம் பிடித்தார்.