25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

May 09, 2025

MAY 9th விளையாட்டு போட்டிகள்

 செஸ் ஆசிய 'கான்டினென்டல்' செஸ் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), 2வது சுற்றில் இந்தியாவின் இனியன், சீனாவின் ஷிசூவாங் மோதினர். இனியன் 53வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் முரளி கார்த்திகேயன், சீனாவின் லுலூ யபிங்கை வென்றார். இந்தியாவின் அபிஜீத் குப்தா, சகவீரர் செந்தில் மாறனை தோற்கடித்தார். இந்தியாவின் பிரனேஷ், சீனாவின் ஜியாங்ருய் காங்கை வீழ்த்தினார். இந்தியாவின் நிஹால் சரின், ரஷ்யாவின் நிகிதா மாட்டினியனை வென்றார்.மற்ற 2வது சுற்று போட்டிகளை இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, சேதுராமன், அஸ்வத், பிரணவ் ஆனந்த் உள்ளிட்டோர் 'டிரா' செய்தனர்.பெண்கள் பிரிவில் நடந்த 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் வந்திகா அகர்வால், பிரியங்கா, ரக்ஷிதா, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தனர்.   வில்வித்தை உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 சீனாவின் ஷாங்காய் நகரில் ரிகர்வ் ஆண் கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பார்த் சுஷாந்த், காலிறுதியில் தென் கொரியாவின் கிம் ஜேதியோக்கை சந்தித்தார். இதில், சுஷாந்த், 6-2 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அடானு 2-6 என தென் கொரிய வீரர் கிம் ஊஜினி டம் தோல்வியடைந்தார். அரையிறுதியில் சுஷாந்த்-ஊஜின் மோத உள்ளனர் பெண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, சீனாவின் லி ஜியாமனை எதிர் கொண்டார். இதில் தீபிகா குமாரி 6-2 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் தென் கொரியாவின் லிம் ஷியோனை சந்திக்க உள்ளார். டென்னிஸ்ஐ.டி.எப்., ஜார்ஜியாவில் நடக்கும் தொடரின், ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா 5-7, 3-6 என்ற கணக்கில் ஜார்ஜியாவின் சோபியாவிடம் தோல்வியடைந்தார். பாட்மின்டன் 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனதைபேயில்,  ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியா வின் ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையன் யாங் மோதினர். இதில், ஆயுஷ் 16-21, 21-19, 21-14 T வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சீனதைபேயின் யி-டிங் ஹுவாங் மோதி னர். உன்னதி 21-8, 19-21, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். 

May 08, 2025

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 6 கட்டமாக நடத்தப்பட்ட பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ்தொடரில், வைஷாலி 'டாப்-2' இடத்தில் உள்ளார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ்,6வது தொடர் ஆஸ்திரியாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் வைஷாலி(85 புள்ளி) பங்கேற்கிறார். முதல் சுற்றில் வைஷாலி, பல்கேரியாவின் சலிமோவாவை வென்றார்.இதில் 'டாப்-2' இடம் பெறுபவர்கள், கேண்டி டேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்க தகுதி பெறலாம்.இரண்டாவது சுற்றில் வைஷாலி, ஜார்ஜியாவின் லேலாவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் வைஷாலி. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இவர், போட்டியின் 39 வதுநகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டு சுற்று முடிவில் தலா இரு புள்ளி பெற்ற சீனாவின் டான்ஜோங்கி, வைஷாலி 'டாப்-2' இடத்தில் உள்ளனர். ஆண்கள் கிராண்ட் செஸ் தொடரின் 10வதுசீசன் 6 தொடர் முடிவில், புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறலாம்.இதன் இரண்டாவது தொடர் ருமேனியாவில் நடக்கிறது.இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்காவின் சோ வெஸ்லே, பேபியானோ காருணா உட்பட 10பேர் பங்கேற்கின்றனர்.முதல் சுற்றில் இந்திய வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மோதினர். இப்போட்டி முடிவில் 35 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. 

May 08, 2025

MAY 8TH விளையாட்டு போட்டிகள்

பாட்மின்டன் 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனதைபேயில்நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி மோதினர். இதில் ஆயுஷ் ஷெட்டி 21,16,15,21,21,17 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் 13,21,9,21 என இந்தோனேஷியாவின் முகமது ஜாகி உபைதில்லாவிடம் தோல்வியடைந்தார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சீனதைபேயின் லின் சிஹ்யுன் மோதினர்.உன்னதி 21-12, 21-7 என வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். வில்வித்தை உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 சீனாவின் ஷாங்காய் நகரில்பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு போட்டி காலிறுதியில் இந்தியாவின் மதுரா,ஜோதி மோதினர். இதில் மதுரா 142,141 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் ரிஷாப், டென்மார்க்கின் மதியாஸ் மோதினர். இப்போட்டி 147–147 என சமன் ஆனது. பின்நடந்த 'ஷூட் ஆப்பில்' ரிஷாப் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். பெண்களுக்கான பிரிவில் தீபிகாகுமாரி, அன்கிதா, அன்ஷிகா இடம்பெற்ற இந்திய அணி, நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்றது. இதில் மெக்சிகோவிடம், 'ஷூட் ஆப்' முறையில் 4-5 எனதோற்று வெளியேறியது. கிரிக்கெட் ஐந்து முறை கோப்பை வென்ற சென்னை அணி, இம்முறை சறுக்கியது. அடுத்த ஆண்டுக்கான சிறந்த அணியை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. எஞ்சிய போட்டிகளில் இளம்வீரர்களுக்குவாய்ப்பு அளிக்கப்படலாம். அஷ்வின், விஜய் சங்கர்,ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா போன்ற அனுபவ வீரர்கள் ஏமாற்றினர்.இளம் நட்சத்திரங்களான ஆயுஷ் மாத்ரே,டிவால்ட் பிரவிஸ், உர்வில் படேல் நம்பிக்கை தந்தனர். அதிரடியாக பேட் செய்து, சென்னை அணிக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருப்பதை உறுதி செய்தனர். 

May 07, 2025

7TH MAY  IPL MATCH .GUJARAT - MUMBAI.

 MAY  7-ம் தேதி  கொல்கத்தாவில், சென்னை, கொல்கத்தா, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 179/6, ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 183/8 ரன்கள் எடுத்தது, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக Noor Ahmad தேர்ந்தெடுக்கப்பட்டார். 

May 07, 2025

May 7 th விளையாட்டு போட்டிகள்

 .கிரிக்கெட் பெண்கள்  பெண்களுக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில்,. இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதுகின்றன.நேற்று இந்திய அணி தனது கடைசி லீக் போட்டி யில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது. தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 314/7 ரன் எடுத்து தோல்வியடைந்தது.முடிவில் 4 போட்டியில் 3 வெற்றியுடன் 6 புள்ளி பெற்ற இந்திய அணி பைனலுக்கு (மே 11) முன் னேறியது.வில்வித்தை சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2  சீனாவின் ஷாங்காய் நகரில் ,காம்பவுண்டு ஆண்கள் பிரிவில் அபிஷேக் வர்மா, ரிஷாப் யாதவ், ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற இந்திய அணி நேரடியாக காலிறு தியில் பங்கேற்றது. இதில் பிரிட்டனை 239-232 என வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் டென்மார்க்கை  எதிர்கொண்டது. முதல் இரு சுற்று முடி வில் 115-118 என பின் தங்கிய இந்தியா, கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட 232-231 என ' வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. பாட்மின்டன் 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனதைபேயில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சங்கர் முத்து சாமி மோதினர். ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-17, 21-18 என சீன தைபேயின் சியா ஹாவோ லீயை வீழ்த் தினார் .இந்தியாவின் தருண் 21-17, 19-21, 21-12 என ஜப்பானின் ஷோகோ ஒகாவாவை தோற்கடித்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, அனுபமா உபத்யயா மோதினர்.உன்னதி 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார். 

May 06, 2025

6 TH MAY  IPL MATCH .GUJARAT - MUMBAI

MAY 6-ம் தேதி  அகமதாபாத்தில், குஜராத், மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 155/8, ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 147/7 ரன்கள்  எடுத்தது,  கடைசி ஓவரில் மழை காரணமாக  (DLS METHOD) செய்யப்பட்டு குஜராத் அணி 3 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SHUBMAN GILL தேர்ந்தெடுக்கப்பட்டார். 

May 06, 2025

வில்வித்தை

 உலக கோப்பை வில்வித்தை 2 ஸ்டேஜ், சீனாவின் ஷாங்காய் நகரில் காம்பவுண்டு பிரிவில் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் தனி நபர் பிரிவில் இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா, 714 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்தார்.ரிஷாப் யாதவ் (713), 4வது, ஓஜாஸ் பிரவின் (707), 10வது இடம் பெற்றனர். ஒட்டுமொத்தமாக இந்திய அணி 2134 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது.பெண்கள் தனிநபர்  பிரிவில் இந்தியாவின் மதுரா, 708 புள்ளியுடன் மூன்றாவது இடம்பிடித்தார்.மற்ற இந்திய வீராங்கனைகள் ஜோதி (705) 6, சிகிதா (701), 11, ஆதித்தி (699) 13வது இடம் பெற்றனர்.இந்திய பெண்கள் அணி 2114 புள்ளியுடன்  முதலிடம் பெற்றது. நேரடியாக காலிறுதியில் பங்கேற்க உள்ளது.ஒற்றையர் தகுதிச் சுற்றில் அபிஷேக் வர்மா, மதுரா ஜோடி கலப்பு அணிகள் பிரிவில் 1422 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது. இரண்டாவது சுற்றில் நேரடியாக களமிறங்குகிறது .

May 06, 2025

'கேலோ இந் தியா யூத்' 7வது சீசன் விளையாட்டு போட்டிகள்.

'கேலோ இந் தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் பீஹாரில், நடக்கிறது. துப்பாக்கி சுடுதல், சைக்கிளிங் பந்தயம், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் மட்டும் டில்லியில் நடக்கின்றன.சைக்கிளிங் போட்டி.சைக்கிளிங் போட்டியில் ராஜஸ்தானின் ஹர்ஷித்தா, 500 மீ., டைம் டிரையல் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு  நேற்று தங்கம் கைப்பற்றினார். தமிழகத்தின் தபிதாவுக்கு வெண்கலம் கிடைத்தது.7.5 கி.மீ., ஸ்கிராச் ரேஸ் பிரிவில் ஹர்ஷித்தா, 11 நிமிடம், 50.973 வினாடி நேரத்தில் வந்து தங்கத்தை  வசப்படுத்தினார்.துப்பாக்கிசுடுதல்.துப்பாக்கிசுடுதல் போட்டியில் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் மயங்க் சவுத்ரி தங்கம் கைப்பற்றினார்.நீச்சல் போட்டிகயாவில் நடந்த நீச்சல் போட்டியில் தெலுங்கானா வின் வர்ஷித் (400 மீ., தனி நபர் மெட்லே), சுஹாஸ் (100 மீ., பேக்ஸ்டிரோக்), ஸ்ரீ நித்யா (100 மீ., பேக்ஸ் டிரோக்) என மூவரும் தங்கம் கைப்பற்றினார்கள்.  ஜூடோ போட்டிஜூடோ போட்டியில் திவ்யா (44 கிலோ), குஷ்பு (57 கிலோ) குஜராத் அணிக்கு முதல் இரு தங்கம் வென்று தந்தனர்.நடந்த போட்டிகளில் ராஜஸ்தான் அணி, 6 தங்கம், 2 வெள்ளி என 8 பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. : கர்நாடக அணி (5 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம்) இரண்டாவதாக உள்ளது. மஹாராஷ்டிரா (5 தங்கம். 6 வெள்ளி, 9 வெண்கலம்) மூன்றாவது இடத்தில் உள்ளது. டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, 5 இடம் முன்னேறி, 33வது இடம் பிடித்துள்ளார். கடந்த வாரம் நடந்த மாட்ரிட் டென்னிசில் போபண்ணா ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற் றுக்கு தகுதி பெற்றதால், இந்த முன்னேற்றம் கிடைத்தது. டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.45 வயதான போபண்ணா, மீண்டும் இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார். 

May 05, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட்

மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட் தொடர் பெங்களூருவில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதல் நான்கு போட்டியில் 'வென்ற இந்தியா, தொடரை கைப்பற்றியது.நேற்று, ஐந்தாவதுபோட்டியில் ,முதலில் 'பேட்' செய்த இந்திய அணி,20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்தது. இலங்கை அணி 15 ஓவரில், 88 ரன்னுக்கு 103 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு கோப்பையுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.இலங்கை அணிக்கு கோப்பையுடன், ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் நரேந்திர வென்றார். நாயகன் இந்தியாவின் மாங்கூர் தொடர் விருதை ரவிந்திர சான்டே கைப்பற்றினார். 

May 05, 2025

 'கேலோ இந்தியா யூத்' விளையாட்டுபோட்டிகள்  .

'கேலோ இந்தியா யூத்' விளையாட்டு 7வது சீசன்,பீஹாரில்,  துப்பாக்கி சுடுதல், சைக்கிள் பந்தயம், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் மட்டும் டில்லியில் நடக்கின்றன.துப்பாக்கி சுடுதல் .நேற்று, டில்லியில் நடந்த துப்பாக்கி சுடுதல் கலப்பு அணிகளுக்கான 10 மீ.,'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் ராஜஸ்தானின் பிராச்சி, மயங்க் சவுத்ரி ஜோடி, உ.பி.,யின் தேவ் பிரதாப், உர்வா சவுத்ரி ஜோடியை சந்தித்தது. போட்டி 15,15 என 'டை' ஆனது. பின் 'ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, இம்முறை முதல் தங்கத்தை கைப்பற்றியது..மூன்றாவது இடத்துக்கான போட்டியில் டில்லியின் ஹர்திக் பன்சால், நியாமிகா ராணா ஜோடி 1614 என ஹரியானாவின் பிரதிக் ஷியோகன்ட், கனக் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.நீச்சல் போட்டி.நீச்சல் போட்டியில் கர்நாடகா நட்சத்திரங்கள்,. நேற்று வழங்கப்பட்ட 7 தங்கப்பதக்கத்தில்,4 தட்டிச் சென்றனர். மஹாராஷ்டிரா, கேரளா, அசாம் அணிகளுக்கு தலா ஒரு தங்கம் கிடைத்தன..ஆண்களுக்கான வில்வித்தைஆண்களுக்கான வில்வித்தை தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு அரையிறுதியில் தமிழகத்தின் ஸ்மரன் சர்வேஷ் 6,2 என, உ.பி.,யின் விஷுவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.  

1 2 ... 127 128 129 130 131 132 133 ... 158 159

AD's



More News