விளையாட்டு போட்டிகள் .26th SEPTEMBER 2025.
புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவின், ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்” என போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, உ.பி.. அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் 36-36 என சமநிலையில் இருந்தது. டை பிரேக்கரில் உ.பி., அணி 6-5 என வெற்றி பெற்றது.
(அக். 22-31, பஹ்ரைன்) ஆசிய யூத் விளையாட்டு குத்துச்சண்டை போட்டிக்கான 23 பேர் கொண்ட இந்திய அணியில் துருவ் கார்ப், உத்தம் சிங் ராகவ், குஷி சந்த், அஹானா சர்மா, சந்திரிகா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
(15, 17 வயது, அக். 21-26, சீனா) ஆசியபாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் தன்வி பத்ரி இடம் பெற்றுள்ளார். இவர், கடந்த ஆண்டு 15 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் ஒற்றையரில் தங்கம் வென்றிருந்தார்.
ஜூனியர் இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாசென்றுள்ள ,5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. கான் பெராவில் முதல் போட்டி இன்று நடக்கிறது.
0
Leave a Reply