19 வயதுக்குட்பட் டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் அருணாச்சல பிரதேசத்தில், இந்தியா, 'நடப்பு சாம்பியன்' வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. பி பிரிவில்இடம் பெற்றுள்ள இந்தியா, நேபாளஅணிகள் நேற்று மோதின. போட்டியின் 28 வது நிமிடத்தில் நேபாள வீரர் தலையில் பட்டு வந்த பந்தை லாவகமாக கொண்டு சென்று, கோலாக மாற்றினார் இந்தியாவின் ரோஹன் சிங். இம்முறை சக வீரர் டேனி மெய்டெய் அடித்த பந்தை பெற்ற ஓமங் டோடம், கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் ரோஹன் சிங்(75வது நிமிடம்) மற்றொரு கோல் அடித்தார்.முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'பி' பிரிவில் 2 போட்டியிலும் வென்று, 6 புள்ளியுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் மாலத்தீவு அணியை (மே 16) சந்திக்க உள்ளது.
ஹாக்கிசிலியில் ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை தொடர் (டிச. 1-13) நடக்க உள்ளது. இந்திய அணி 6 நட்பு போட்டியில் அர்ஜென்டினா சென், பங்கேற்க உள்ளது. செஸ்ஆசிய சாம்பியன்ஷிப் தொடர்ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான பிரிவு 6வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா வெற்றி பெற்றார். 5.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். பாட்மின்டன் படும் வனில் தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடர். நேற்று இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் முதல் தகு திச்சுற்று போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக வீரர் சங்கர் முத்துசாமியை 21-15, 21-17 என வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன் னேபள்ளி, சீன தைபே வீரர் குவான் லினை 17-21, 21-19, 21-17 என போராடி வென்றார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தகு திச்சுற்று இரண்டாவது போட்டியில் இந்தியா வின் இரா சர்மா, தமன் வானிடம் 12-21, 18-21 என தோல்வியடைந்தார்.
பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியா, பாகிஸ்தான் போர் பதட்டம் காரணமாக ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது போர் முடிவுக்கு வந்திருப்பதால், மீண்டும் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி. சி.சி.ஐ.,) முடிவு செய்துள் ளது. நேற்று, புதிய அட்ட வணையை வெளியானது.மீதமுள்ள 17 போட்டிகள், பெங்களூரு, ஜெய்ப் பூர், டில்லி, லக்னோ, மும்பை, ஆமதாபாத் என 6 இடங்களில் நடக்கவுள்ளன. வரும் மே 17ல் பெங்களூருவில் நடக்கும் போட்டியில் பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. சமீபத்தில் பாதியில் கைவிடப்பட்ட பஞ்சாப், டில்லி அணிகளுக்கு இடையிலான போட்டி, மே 24ல் ஜெய்ப்பூரில் நடக்கவுள்ளது.தகுதிச் சுற்று-1, 'எலிமி னேட்டர்', தகுதிச் சுற்று-2 போட்டிகள் முறையே மே 29, 30, ஜூன் 1ல் நடக்கும். பைனல், ஜூன் 3ல் நடக்கவுள்ளது. இந்த நான்கு போட்டிகளுக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் கோலி 2016-19 காலக்கட்டத்தில் ரன் மழை பொழிந்தார். சமீபத்திய போட்டிகளில் 'ஆப்-ஸ்டம்ப்பிற்கு' வெளியே வீசும் பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். இவரது பலவீனம் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அம்பலமானது. இதையடுத்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்தார்.வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவரது சேவை, அணிக்கு தேவை என இந்திய கிரிக்கெட் போர்டு கருதியது. இதனால், ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டது.இந்த சமயத்தில் டெஸ்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் இருந்து கோலியும் நேற்று விடைபெற்றார். இது, இந்திய அணியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. டெஸ்ட் அரங்கில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் பட்டியலில் கோலி முதலிடம். இதுவரை 68 டெஸ்டில், 5864 ரன் (20 சதம், 18 அரைசதம்) குவித்துள்ளார். இந்திய கேப்டன் பட்டியலில் டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி பெற்றுத் தந்த விராத் கோலி முதலிடம். இவரது தலைமையிலான இந்திய அணி, 68 டெஸ்டில், 40 வெற்றி (58.82% வெற்றி சதவீதம்), 11 'டிரா', 17 தோல்வியை பதிவு செய்துள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் தோனி (27 வெற்றி, 60 டெஸ்ட்), கங்குலி (21 வெற்றி, 49 டெஸ்ட்) உள்ளனர். * கோலி தலைமையில் இந்திய அணி, 43 மாதம் (2016 அக்., -2020 மே) டெஸ்ட் அணி தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தில் இருந்தது
பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ் தொடர், சர்வதேச செஸ் கூட் டமைப்பு சார்பில் 6 கட்டமாக நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 'டாப்-2 இடம் பெறுபவர்கள், கேண்டிடேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்க தகுதி பெறலாம். இதன் கடைசி, 6வது தொடர் ஆஸ்திரியா வில் நடக்கிறது.இதன் 6வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, ஆஸ்திரியாவின் ஆல்கா படேல்கா மோதினர். இதன் 39 வது நகர்த்தலில் வைஷாலி வெற்றி பெற்றார். ஆறு சுற்று முடிவில் உக்ரைனின் அனா முஜிசக் (4.5) முதலிடத்தில் உள்ளார். சீனாவின் ஜு ஜினெர் (4.0), இந்திய வீராங்கனை வைஷாலி (4.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்
ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் இத்தாலியில் ,இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் 'சீனியர்' வீரர் போபண்ணா, செக் குடியரசின் ஆடம் பவ்லாசெக் ஜோடி, குரோஷியாவின் நிகோலா மெக்டிக், நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை போபண்ணா ஜோடி 4-6 என கோட்டை விட்டது. இரண்டாவது செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை போபண்ணா ஜோடி 7-6 என வசப்படுத்தியது. பின் நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' போபண்ணா ஜோடி 10-4 என எளிதாக வசப்படுத்தியது.ஒரு மணி நேரம், 44 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 4-6, 7-6, 10-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.
உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 2 சீனாவின் ஷாங்காய் நகரில் , பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு, அரையிறுதியில் இந்தியாவின் மதுரா,துருக்கி யின் ஹசல் போருனை 143-141 என வீழ்த்தினார்.பைனலில் மதுரா, அமெரிக்காவின் கார்சனை சந்தித்தார். மதுரா 139-138 என வெற்றி பெற்று, உலக கோப்பை வில்வித்தையில் முதல் தங்கம் கைப்பற்றினார். காம்பவுண்டு ஆண்கள் அணிகளுக்கான பைனலில் அபிஷேக் வர்மா, ரிஷாப் யாதவ், ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற இந்திய அணி, செபாஸ்டியன், லுாயிஸ், ரோட்ரிகோ அடங்கிய மெக்சிகோ அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 232-228 என வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.பெண்களுக்கான பைனலில் மதுரா, ஜோதி, சிகிதா இடம் பெற்ற இந்திய அணி, 222-234 என மெக்சிகோவிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. கலப்பு அணி போட்டியில் இந்தியாவின் மதுரா, அபிஷேக் ஜோடி, 144– 142 ,வெண்கலம் வசப்படுத்தியது. உலக கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ்-2' சீனாவின் ஷாங்காய் நகரில்,பெண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் - தீபிகா குமாரி, தென் கொரியாவின் லிம் சிஹியோன் -மோதினர். இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்தது.
ருமேனியாவில் கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசனில், இரண்டாவது தொடர், மூன்றாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் மோதினர். 33வது நகர்த்தலில் முந்தினார் பிரக்ஞானந்தா. 61வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்க ளுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர், 6 கட்டமாக நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் தமிழகத்தின் வைஷாலி பங்கேற்கிறார். இதன் 4வது சுற்றில் வைஷாலி, உக்ரைனின் மரியா முசிசுக் மோதினர். வைஷாலி, 35வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.நான்கு சுற்றுகளின் முடிவில் வைஷாலி, 3.0 புள் ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். உக்ரைனின் அனா முசீசுக் (3.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் வைஷாலி இந்தியா சார்பில் பங்கேற்கிறார். இதன் 5வது சுற்றில் வைஷாலி, சீனாவின் ஜினர் ஜு மோதினர். இதில் விளையாடிய வைஷாலி, 59வது நகர்த்தலில் தோல்வி யடைந்தார்.ஐந்து சுற்றுகளின் முடிவில் வைஷாலி, 3.0 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார்.ஐக்கிய அரபு எமி ரேட்சில் (யு.ஏ.இ.,) ஆசிய தனிநபர் 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. கார்த்திகேயன் 4 வது இடம் பிடித்தார்.
பாட்மின்டன் ஜப்பான் வீராங்கனை டோமோகா மியாசாகிதைபே ஓபன் ஒற்றையர் பைனலில் 21-12, 20-22, 21-14 என தாய்லாந்தின் பிட்சாமனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பளுதுாக்குதல் ஆசிய சாம்பியன்ஷிப் 64 கிலோ எடைப் பிரிவில் சீனாவில் இந்திய வீராங்கனை நிருபமா தேவி (206 கிலோ) 4வது இடம் பிடித்து வெண்கல வாய்ப்பை இழந்தார்
கொழும்புவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்றன. நேற்று, கொழும்புவில் நடந்த பைனலில் இந் தியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 'பேட டிங்' தேர்வு செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 342 ரன் எடுத்தது. முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலில் இந்திய பெண்கள் அணி இலங்கையை வீழ்த்தி, கோப்பை வென்றது.இலங்கை அணி 48.2 ஓவரில் 245 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வி யடைந்தது.