ஷீத்தல் தேவி உலக பாரா வில்வித்தையில் இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறினார்.
உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப், தென் கொரியாவின் குவான்ஜு நகரில், பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு போட்டி நடந்தன. இதற்கான தகுதிச்சுற்றில் 2வது இடம் பெற்ற இந்தியாவின் ஷீத்தல் தேவி, அரையிறுதியில் பிரிட்டனின் ஜோடீ கிரின்ஹாமை எதிர்கொண்டார்.
ஷீத்தல் தேவி 145-140 என்ற கணக்கில் வெற்றி பெற்று, உலக பாராசாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறினார்.
இந்தியாவின் தோமன் குமார், மற்றொரு அரையிறுதியில் 144-143 என சகவீரர் ஷ்யாம் சுந்தரை வீழ்த்தினார். பைனலில் (நாளை) ராகேஷ் குமார், தோமன் குமார் மோத உள்ளனர். ஷ்யாம் சுந்தர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மெக்குயினை சந்திக்க உள்ளார்.
0
Leave a Reply