25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


வேளாண்மை

Sep 15, 2026

வெண்டைச்செடி.

வெண்டைச் செடிநன்றாகவளரவெச்சமையும்வெப்பமானகாலநிலையும்தேவை. நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது வண்டல் மண் இதற்கு மிகவும் உகந்தது. ஜூன் முதல் ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி முதல் மார்ச் மாதங்கள் வெண்டை பயிரிட ஏற்ற பருவங்கள் ஆகும். விதைப்பதற்கு முன் விதைகளை 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.அனைத்து வகை மண்ணிலும் வெண்டை வளரும். எனினும், களிமண் கலந்த செம்மண் நிலம் மிகச் சிறந்தது.பிப்ரவரி-மார்ச் மற்றும் ஜூன்-ஆகஸ்ட் மாதங்கள் விதைப்புக்கு உகந்தவை.ஒரு ஏக்கருக்கு சுமார் 3 முதல் 4 கிலோ விதைகள் தேவைப்படும்.செடிகளுக்கு இடையே 45 செ.மீ மற்றும் வரிசைகளுக்கு இடையே 30 செ.மீ இடைவெளி விட்டு விதைகளை நட வேண்டும். விதைத்தவுடன் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதன்பிறகு நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை நீர் விடலாம்.உழவு செய்யும்போது தொழுஉரம் இட வேண்டும். பூக்கும் மற்றும் காய் காய்க்கும் பருவத்தில் தேவையானளவு தழைச்சத்து உரங்களை அளிக்க வேண்டும். விதைத்த 45 நாட்களில் வெண்டைக்காய் அறுவடைக்கு வரும்.காய்கள் பிஞ்சாக இருக்கும்போதே தினந்தோறும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பறிக்க வேண்டும்

Sep 08, 2026

மாடித்தோட்டத்தில் அவரைக்காய் பயிரிடும் முறை.

GrowBags அல்லதுThotti.அடியுரமாக இட மணல்,தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.விதைகள்,நீர் தெளிக்க பூவாளி தெளிப்பான்,பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்.தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு இட்டு தொட்டியை நிரப்ப வேண்டும். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும். செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.நோய் தாக்காத ஆரோக்கியமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். அவரையில் செடி அவரை, கொடி அவரை உள்ளன. செடி அவரைக்கு 3 விதைகள் வரை ஒரு தொட்டியில் ஊன்றலாம். கொடி அவரைக்கு 3 முதல் 4 விதைகள் வரை ஊன்றலாம்.விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்ற வேண்டும்.மாடித்தோட்டத்தில் பந்தல் போடுவது சுலபமான வேலை. அதற்கு நான்கு சாக்குகளில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். பின்னர் இதில் கயிறு/கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும்.செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில்போட்டுகிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும்செயல்படும்.கொடி அவரையில் வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றும். செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒரு முறை கிளறி விட வேண்டும். பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.பஞ்சகாவ்யா50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பைகளில் ஊற்ற வேண்டும். இது சிறந்த நோய் தடுப்பானாக செயல்படும்.காய்களை முற்றி விடாமல் சரியான பருவத்தில் இருநாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும். இது 3 முதல் நான்கு மாதம் வரை பலன் கொடுக்கும்.

Sep 01, 2026

மாடித் தோட்டத்தில் கேரட் வளர்ப்பது எப்படி?

மாடித் தோட்டத்தில் கேரட் வளர்ப்பது மிகவும் எளிது. சரியான மண், போதிய சூரிய ஒளி மற்றும் முறையான நீர்ப்பாசனம் இருந்தால், வீட்டிலேயே சுவையான, சத்தான கேரட்டை அறுவடை செய்யலாம்.தொட்டி தேர்வு.குறைந்தது 12–15 அங்குல ஆழமுள்ள தொட்டி அல்லது க்ரோ பேக் பயன்படுத்தவும். அடிப்பகுதியில் நீர் வெளியேறும் துளைகள் இருக்க வேண்டும். மண் கலவை.40% செம்மண் 30% மணல் 30% தொழு உரம் அல்லது மண்புழு உரம் மண் மென்மையாகவும், கற்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். இதனால் கேரட் நேராக வளரும்.விதை விதைக்கும் முறை.விதைகளை ½ அங்குல ஆழத்தில் விதைக்கவும். ஒவ்வொரு விதைக்கும் 2–3 அங்குல இடைவெளி விடவும். விதைத்த பிறகு லேசாக மண்ணால் மூடி தண்ணீர் தெளிக்கவும். சூரிய ஒளி.தினமும் 5–6 மணி நேரம் நேரடி சூரிய ஒளி அவசியம். நீர்ப்பாசனம்.மண் எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் ஊற்றினால் வேர்கள் அழுகும். உரமிடுதல்.20–25 நாட்களுக்கு ஒருமுறை மண்புழு உரம் அல்லது இயற்கை உரம் சேர்க்கலாம். அதிக நைட்ரஜன் உரத்தை தவிர்க்கவும். பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு.வேப்பெண்ணெய் கரைசலை  10–15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம். களைகளை அகற்றி, காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யவும். அறுவடை.விதைத்த 70–90 நாட்களில் கேரட் அறுவடைக்கு தயாராகும். கேரட்டின் மேற்பகுதி மண்ணுக்கு வெளியே தெரிந்ததும் மெதுவாக பிடித்து எடுக்கலாம். பயன்கள்.வைட்டமின் A, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. வீட்டில் ரசாயனமின்றி சுத்தமான காய்கறி கிடைக்கும். சிறிய இடத்திலேயே அதிக மகசூல் பெற முடியும். குறிப்பு: மாடித் தோட்டத்தில் கேரட் சாகுபடிக்கு அகலத்தை விட ஆழமான தொட்டியைத் தேர்வு செய்வதே நல்ல மகசூலுக்கான முக்கிய ரகசியமாகும்.

Aug 25, 2026

வீட்டிலேயே உருளைக்கிழங்கு வளர்ப்பது எப்படி?.

வீட்டிலேயே உருளைக்கிழங்கு வளர்ப்பது எளிதானது. தோட்டம், தொட்டி அல்லது வளர்ப்பு பைகளில் கூட சாகுபடி செய்யலாம். கடையில் வாங்குவதை விட வீட்டில் விளையும் உருளைக்கிழங்கு சுவையாகவும், ரசாயனப் பயன்பாடு குறைவாகவும் இருக்கும்.வளர்ப்பு முறைகள்:முளை கொண்ட தரமான விதை உருளைக்கிழங்கைத் தேர்வு செய்யவும். நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் 3–4 அங்குல ஆழத்தில் நடவு செய்யவும். தினமும் 6–8 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்க வேண்டும். வாரத்திற்கு 2–3 முறை நீர் பாய்ச்சி, செடி வளரும்போது தண்டைச் சுற்றி மண் மேடு போடவும். பூச்சி, நோய் தாக்குதலைத் தவிர்க்க வேப்பெண்ணெய் போன்ற இயற்கை முறைகளைப் பயன்படுத்தலாம். அறுவடை & சேமிப்பு:70–150 நாட்களில், இலைகள் வாடிய பிறகு உருளைக்கிழங்கை அறுவடை செய்யலாம். குளிர்ச்சியான, இருண்ட மற்றும் காற்றோட்டமான இடத்தில் சேமித்தால் நீண்ட நாட்கள் தரம் குன்றாமல் இருக்கும்.

Aug 18, 2026

வீட்டிலேயே பட்டாணி வளர்ப்பது எப்படி?.

வீட்டில் பட்டாணி வளர்ப்பது எளிதானதுடன், சத்தான காய்கறியைப் பெற சிறந்த வழியாகும். நார்ச்சத்து, புரதம், வைட்டமின் C, K நிறைந்த பட்டாணி மண்ணின் வளத்தையும் அதிகரிக்கிறது.வளர்ப்பு குறிப்புகள்:குளிர்ச்சியான காலநிலையில் (7–21°C) வளர்ப்பது சிறந்தது. நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் விதைகளை 1 அங்குல ஆழத்தில் விதைக்கவும். ஏறும் வகை என்பதால் குச்சி அல்லது வலை ஆதரவு அமைக்கவும். மண்ணை ஈரப்பதமாக வைத்தாலும், அதிக நீர் தேங்க விடக்கூடாது. பூச்சி தாக்குதலைத் தவிர்க்க வேப்பெண்ணெய் பயன்படுத்தலாம். அறுவடை & சேமிப்பு:காய்கள் முழுமையாக வளர்ந்ததும் அறுவடை செய்யலாம். புதிய பட்டாணியை 5 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தலாம். நீண்டகால பயன்பாட்டிற்கு உறையவைக்கலாம்.தொடர்ச்சியாக 2–3 வாரங்களுக்கு ஒருமுறை விதைத்தால், ஆண்டு முழுவதும் புதிய பட்டாணி அறுவடை செய்ய முடியும்.

Aug 11, 2026

மாடித் தோட்டத்தில் வெண்டைக்காய் வளர்க்க

நல்ல சூரிய ஒளி படும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, காய்கறி விதை அல்லது நாற்றுகளைப் பயன்படுத்தி, கோகோபீட், மண்புழு உரம், கலந்த கலவையை நிரப்பி நடவு செய்து, தினமும் காலை மாலை தண்ணீர் ஊற்றி, மண் காய்ந்து விடாமல் பராமரித்தால் 4-5 நாட்களில் விதைகள் முளைத்து நல்ல விளைச்சல் கிடைக்கும். வெண்டைக்காய் வெப்பத்தை தாங்கும் என்பதால், மார்ச் மாதம் நடவு செய்ய ஏற்ற காலம். மாடித் தோட்டத்தில் வெண்டைக்காய் வளர்க்கும் முறை தேர்வு செய்தல்: மாடித் தோட்டத்தில் நல்ல சூரிய ஒளி கிடைக்கும் இடத்தைத் தேர்வு செய்யவும்.பயிர்: வெண்டைக்காய் விதைகள் அல்லது நாற்றுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.பயிர் செய்ய ஏற்ற காலம்: மார்ச் மாதங்கள் வெண்டைக்காய் நடவு செய்ய சிறந்தவை, ஏனெனில் இது வெப்பத்தை தாங்கும் பயிர்.மண் கலவை: கோகோபீட், மண்புழு உரம், மண் கலந்த கலவையைப் பயன்படுத்தலாம்.நடவு: விதைத்த 4-5 நாட்களில் விதைகள் முளைக்கத் தொடங்கும்.நீர்: செடிக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். எனவே, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் ஊற்ற வேண்டும். மண் காய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பராமரிப்பு: களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் மாடித் தோட்டத்தில் சுவையான வெண்டைக்காய்களை விளைவிக்கலாம்

Aug 04, 2026

ரோஜா செடி வளர்ப்பு.

ரோஜா செடியை கட்டிங்ஸில் இருந்து உருவாக்கலாம். நர்சரிக்கு சென்று நாட்டு ரோஜா செடியில் இருந்து ஒருகிளையை வெட்டி வாங்கவும்.பென்சிலின் அடர்த்தியில் ரோஜா கட்டிங்ஸ் இருப்பது அவசியம்.இந்த கட்டிங்ஸை வேர்கள் உற்பத்தி ஆனபிறகு செம்மண் கலவையில் சேர்த்து தொட்டியில் வளர்க்கலாம்.15 செ.மீநீளம் அதாவது சின்ன ஸ்கேல் அளவில் கட்டிங்ஸ் எடுத்து அடிபாகத்தை 45-50 டிகிரி அளவில் கூர்மையாக வெட்டவும்.இப்போது ஒருமூடி தேன் எடுத்துக் கொண்டு கூர்மைபடுத்திய ரோஜா கட்டிங்ஸை அதில் மூழ்கி எடுக்கவும்.வேர்கள் நன்றாக வளரகற்றாழை ஜெல் அல்லது தேன் பயன்படுத்தலாம். இதே போல 4-5 கட்டிங்ஸ் தயாரிக்கவும்.இதைமண் புழு உரத்தில் கொஞ்சம் இடைவெளிவிட்டு வைத்து காற்று புகாதவாறு பிளாஸ்டிக் போட்டு மூடி உரத்திற்கும் பிளாஸ்டிக்கிற்கும் உள்ள இடைவெளியில் தண்ணீர் ஊற்றவும்.நிழலான இடத்தில் வளர்த்தால்20 நாட்களில் வேர் பிடித்துவிடும். ஐந்து கட்டிங்ஸில் மூன்றாவது நன்கு வேர்கள் பிடித்து தயாராகிவிடும்.ரோஜா செடிக்கு மண் கலவை.பத்து அங்குல மண்தொட்டியில் உதிரியான செம்மண் 50 விழுக்காடு, கோகோபீட் 25 விழுக்காடு, இயற்கை உரம் 25 விழுக்காடு நிரப்பி வேர் பிடித்த கட்டிங்ஸ் வைக்கவும்.கோகோபீட் என்பது தென்னைநார் கழிவு ஆகும்.தொட்டியில் நான்கு - ஐந்து ஓடைகள் இருந்தால் தண்ணீர் சரியாக வெளியேற்றப்பட்டு வேர் அழுகல் நோய் தவிர்க்கப்படும்.இயற்கை உரம் என்பது மாட்டு சாணம் உரம் அல்லது மண்புழு உரம் பயன்படுத்தலாம்.15-20 நாட்களுக்கு ஒருமுறை டிஏபி உரம் பயன்படுத்தலாம். இதை செடியில் நேரடியாக பயன்படுத்தாமல் வேர் பகுதியை சுற்றி கொஞ்சம் மண் தோண்டி அதில் போடவும்.செடிக்கு தண்ணீர் ஊற்ற அரிசி கழுவும் தண்ணீர் பயன்படுத்தலாம்இலைகள் வளர ஆரம்பித்த சில நாட்களில் அதன் நுனிகள் காய்ந்து நிறம் மாறி கருப்பாக மாறும். அப்போது இலைகளை வெட்டி விடவும். புதிய இலைகளையும் வெட்டி விடுங்கள்.இதற்கு அரைஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் சின்ன ஷாம்பு பாக்கெட்டுடன் கலந்து ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு மாற்றி வாரத்திற்கு ஒரு முறை தெளித்து வாருங்கள்.தினமும் 6 மணிநேரம் மாடியில் ரோஜா செடி மீது வெயில் படும் படி வளர்க்கவும்.மொட்டுக்கள் வைத்த பிறகு அதில் கருப்பு நிறத்தில் பூச்சிகள் வளரும் முட்டையிடும்.இதைதடுத்திட வேப்ப எண்ணெய்யை கொஞ்சம் ஷாம்புவுடன் கலந்து ஸ்பிரே பாட்டிலுக்கு மாற்றி செடி மீது அடிக்கவும்.2-3 நாட்களில் பூச்சிகள் ஓடிவிடும். நன்கு கவனிப்புடன் ரோஜா செடி வளர்த்து வந்தால் தோட்டம் போல பூத்து குலுங்கும்.

Jul 28, 2026

பாகற்காய் கொடியை வளர்க்க....

பாகற்காய் கொடியை செழிப்பாக வளர்க்க, நல்ல வடிகால் வசதியுள்ள மணல் வண்டல் மண்ணில், ஜனவரி-ஜூலை மாதங்களில் விதைகளை விதைக்க வேண்டும். போதுமான வெயில் (6-8 மணி நேரம்) அவசியம். விதைகள் முளைத்த 15-20 நாட்களில் கொடிகள் படர பந்தல் அமைக்க வேண்டும். ஈரப்பதமான மண் மற்றும் வாரத்திற்கு இருமுறை நீர் ஊற்றுவது, அதிக மகசூல் பெற, இலைப்பேன் மற்றும் கொடி அழுகல் நோயைத் தடுக்க உதவும். பாகற்காய்வளர்க்கும் முறைமண் மற்றும் பருவம்: நல்ல அங்ககச்சத்து கொண்டமண்ணில், சூடான, ஈரப்பதமானகாலநிலை (ஜனவரி - ஜூலை) சிறந்தது.விதைப்பு: விதைகளை 1 மீட்டர்இடைவெளியில், பார்ஓரத்தில் விதைத்து, மண்ணால்மூடி நீர்தெளிக்க வேண்டும்.பந்தல்அமைக்க:கொடிகள்படர ஆரம்பிக்கும்போது, சுமார்1.5 முதல்2 மாதங்களுக்குள்பந்தல் அமைத்து, கயிறுகளைப்பயன்படுத்தி கொடிகளைமேலேற்ற வேண்டும்.பராமரிப்பு:நீர்: மண் எப்போதும்ஈரப்பதமாக இருக்கும்படி, ஆனால்நீர் தேங்காமல்பார்த்துக்கொள்ள வேண்டும்.உரம்: கரிம உரங்கள்அல்லது தொழுஉரம் (Compost) இடுவதுசிறந்தது.அறுவடை: நடவு செய்த 60-70 நாட்களில், பாகற்காய்பிஞ்சு நிலையில் (முழுமையாகமுதிர்வதற்கு முன்) இருக்கும்போதுஅறுவடை செய்யலாம், அப்போதுதான்ருசியாக இருக்கும். கூடுதல் குறிப்புகள்:பாகற்காய்செடிக்கு, 10 லிட்டர்கொள்ளளவு கொண்டபெரிய தொட்டிகள்அல்லது பைகளைமாடி தோட்டத்தில்பயன்படுத்தலாம்.வளர்ச்சியின்ஆரம்ப கட்டங்களில்கயிறுகளில் கொடிகளைக்கட்டிவிடுவது, அதுபந்தலில் ஏறுவதற்குஉதவும். 

Jul 21, 2026

வெற்றிலை கொடி வளர்ப்பதற்கான வழிமுறைகள்:

வெற்றிலை கொடியை (Piper betle) நிழலான, ஈரப்பதமான சூழலில், நன்கு வடிகால் வசதியுள்ள மண்ணில் தண்டு வெட்டுதல் (Cutting) அல்லது பதியம் மூலம் எளிதாக வளர்க்கலாம். 30-45 செ.மீ நீளமுள்ள முற்றிய தண்டு பகுதியை எடுத்து, தொட்டியில் அல்லது நிலத்தில், ஈரப்பதம் குறையாமல், நேரடி சூரிய ஒளி படாதவாறு நட்டு, உயிருள்ள ஆதரவு மரங்கள் அல்லது பந்தல் அமைத்து வளர்ப்பது சிறந்தது.வெற்றிலை கொடி வளர்ப்பதற்கான வழிமுறைகள்:இடம் தேர்வு: கொடிக்கு 50% முதல் 75% வரை நிழல் தேவைப்படும். அதிக வெயில் இலைகளை எரித்துவிடும்.மண் மற்றும் நடவு: செம்மண் அல்லது மண்புழு உரம் கலந்த வளமான மண் ஏற்றது. தண்டு பகுதியின் கணுக்களில் இருந்து வேர் வரும் என்பதால், கணுக்கள் மண்ணில் பதியுமாறு நட வேண்டும்.தண்ணீர் மேலாண்மை: மண் எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும், ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது, இல்லையெனில் வேர் அழுகிவிடும். கோடையில் தினமும், மற்ற காலங்களில் மண் காய்ந்ததும் தண்ணீர் ஊற்றவும்.ஆதரவு: கொடி மேலே படர்வதற்கு பந்தல், தென்னை மட்டை, அல்லது ஏதாவது ஒரு மரத்தின் உதவியுடன் வளர்க்க வேண்டும்.உரமிடுதல்: செழிப்பான வளர்ச்சிக்கு கடலை புண்ணாக்கு, மண்புழு உரம், அல்லது தொழு உரம் இடலாம்.பராமரிப்பு: பனி மற்றும் அதிக குளிர் காலத்தில் இலைகளை காக்க நிழல்வலை பயன்படுத்தலாம். குறிப்பு: நிழல், ஈரப்பதம், வடிகால் வசதி - இந்த மூன்றும் வெற்றிலை கொடி செழிப்பாக வளர முக்கியமாகும்.

Jul 14, 2026

நித்திய கல்யாணி செடி வளர்க்கும் முறை.

மாடித் தோட்டத்தில் நித்திய கல்யாணி(Vinca) செடியை எளிதாக வளர்க்க, வடிகால் வசதியுள்ள தொட்டியில் தேங்காய் நார் கழிவு, மண்புழு உரம் மற்றும் மணல் கலந்த மண்ணைப் பயன்படுத்தவும். அதிக சூரிய ஒளி(6-8 மணிநேரம்) தேவைப்படும் இந்தச் செடிக்கு, மண்ணின் மேற்பரப்பு காய்ந்ததும் நீர் ஊற்றினால் போதும். பூக்கள் அதிகம் பூக்க, அவ்வப்போது மண்புழு உரம் இட்டு பராமரிக்கலாம். தொட்டி மற்றும் மண்: சிறியது முதல் நடுத்தர அளவிலான தொட்டிகள்(10-12 இன்ச்) போதுமானது. சாதாரண தோட்ட மண், செம்மண் அல்லது தேங்காய் நார் கழிவு(Cocopeat) கலந்த மண்ணில் நன்றாக வளரும்.சூரிய ஒளி: நித்திய கல்யாணி செடிக்கு முழுமையான சூரிய ஒளி தேவை. மாடியில் அதிக வெயில் படும் இடத்தில் வைத்தால் தான் பூக்கள் அதிகமாக பூக்கும்.நீர் மேலாண்மை: தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. மண்ணின் மேல் அடுக்கு காய்ந்த பிறகு தண்ணீர் ஊற்றினால் போதும். அதிக நீர் ஊற்றினால் வேர் அழுகிவிடும்.உரம்: மாதத்திற்கு ஒருமுறை மண்புழு உரம் அல்லது தொழு உரம் அளிப்பது ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அதிக பூக்களுக்கும் உதவும்.பராமரிப்பு: செடி நன்கு அடர்த்தியாக வளர, நுனி கிளைகளை அவ்வப்போது கிள்ளி விடலாம்(Pruning). இது புதிய கிளைகளை உண்டாக்கி பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.நோய்பூச்சி கட்டுப்பாடு: பொதுவாக பூச்சிகள் தாக்காது. சில நேரங்களில் செம்பேன் பாதிப்பு இருந்தால் வேப்ப எண்ணெய் கரைசல் தெளிக்கலாம். இந்த மருத்துவக் குணங்கள் நிறைந்த செடியை, மிகக் குறைந்த பராமரிப்பில் மாடித் தோட்டத்தில் வளர்க்கலாம். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 17 18

AD's



More News