25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வேளாண்மை

Feb 28, 2023

செடிகள் நன்கு செழிப்பாக வளர

 செடி தொட்டிகளில் நிறைய எறும்புகள் இருக்கும். எறும்புகள் செடியின் வளர்ச்சியை அழித்துவிடும். செடியில் சரியாக பூக்கள் பூக்காது, சரியாக காய்கள் காய்க்காது.எனவே செடி தொட்டியில் இருக்கும் எறும்புகளை விரட்ட ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ,மற்றும் ஒரு ஸ்பூன் பட்டை தூள், இரண்டையும் ஒன்றாக கலந்து ,செடியின் வேர் பகுதியில் தூவிவிடுங்கள். இவற்றின் வாசனையால் எறும்புகள் அனைத்தும் பயந்தோடிவிடும்.பூ செடிகள் மற்றும் காய்கறிகள் நன்கு செழிப்பாக வளர நுண்ணுயிர் பாகாடீரியாக்கள் மிகவும் பயன்படுகிறது. எனவே இரண்டு ஸ்பூன் ட்ரைக்கோ டெர்மா விரிடி மற்றும் இரண்டு ஸ்பூன் சூடோமோனஸ் ஆகியவற்றை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பானை பயன்படுத்தி செடிகள் மீது தண்ணீர் படும்படி தெளிக்கவும். இவ்வாறு மாதத்திற்கு ஒரு முறை செய்து வர செடிகள் செழிப்பாக வளரும்.

Feb 21, 2023

அதிகளவில் லாபம் பெற ஊடுபயிர்

ஒரு பயிரை மட்டும் உற்பத்தி செய்தால் அதிகளவில் லாபம் பெற முடியாது. எனவே, ஒரு மடங்கு நிலம், இரு மடங்கு உற்பத்தி, மும்மடங்கு லாபம் என்ற விகிதத்தில் ஒரு நிலத்தில் முக்கிய பயிர், ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் என்று சாகுபடி செய்தால் அதிகளவவில் லாபம் பெற முடியும்.ஊடுபயிர் என்பது பயிருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக, நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களை தடுக்க, ஈரப்பதம் காக்க, மண் வளத்தை அதிகரிக்க, ஊடுபயிர் சாகுபடி உதவுகிறது. ஊடுபயிரிலிருந்து40 சதவீதம் வருமானம் கிடைக்க வழி செய்கிறது.  ஊடு பயிர்களால் முக்கிய பயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. முக்கிய பயிருக்கு வரும் இடையூறுகளை(நோய்கள், பூச்சிகள்) தடுக்க பயன்படுகிறது. அதேநேரத்தில் குறைந்த இடத்தில் அதிக வருமானம் தருகிறது. அதன் இலை, தழைகள், கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகிறது. மேலும் நிலத்தின் மண் வளத்தை பேணி தழைச்சத்து, தன் வேர் முடிச்சுகளின் மூலம் கிரகித்து மண்ணை வளப்படுத்துகிறது.ஒவ்வொரு முக்கிய பயிருக்கும், ஒவ்வொரு விதமான ஊடுபயிர் சாகுபடி செய்யப்படுகிறது.  பருத்தியில் ஊடுபயிராக உளுந்து, பாசி, தட்டை, வெண்டை, கொத்தவரை சாகுபடி செய்யலாம்.வரப்பு பயிராக சூரியகாந்தி, செண்டு மல்லி சாகுபடி செய்யலாம். பருத்திக்கு முழுப்பயிர் பாதுகாப்பு அரணாக இவை இருக்கிறது. நிலக்கடலையில், துவரை, உளுந்து போன்றவைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.சூரியகாந்தி வயலை சுற்றி சோளம், கம்பு போன்றவற்றை வரப்பு பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம்.தென்னையில் ஊடுபயிராக சணப்பு, கொழுஞ்சி, கொக்கோ சாகுபடி செய்தால் அவை நிலத்திற்கு உரமாவதுடன் அதன் விதைகளை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்யலாம்

Feb 14, 2023

இயற்கை உரங்கள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்துதல்

இயற்கை உரங்கள் (Natural Compost) ஆன மண்புழு உரம், சாண எரு உரம், தொழுஉரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழைஉரம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.பயிர்கள் நன்கு செழித்து வளரஅதிக இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகளான  குணப்பசலம், தேங்காய்பால் மோர், அமிர்தக்கரைசல், பஞ்சகவ்யாஆகியவை பயன் படுத்த வேண்டும்.நம்முன்னோர்கள்ஒவ்வொருபயிருக்கும்இடைவெளியினைநெல்லுக்கு நண்டோட, கரும்புக்கு ஏரோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட என்னும் பழமொழிக்கு ஏற்ப வகுத்தனர்.

Feb 07, 2023

தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்துதல்

பயிர்களுக்கிடையேயானஇடைவெளிநம்முன்னோர்கள்ஒவ்வொருபயிருக்கும்இடைவெளியினைநெல்லுக்கு நண்டோட, கரும்புக்கு ஏரோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட என்னும் பழமொழிக்கு ஏற்பவகுத்தனர்.தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்துதல்ஒவ்வொரு தாவரத்திற்கு உயிர் நாடி என்பதுவிதை யாகும். எனவே விதைகளைதேர்தெடுக்கும் போது கவனமாக இருக்கவேண்டும்.  தரமான நாட்டு விதைகளைப் (Natural Seed) பயன்படுத்திஇயற்கை முறையில் வேளாண் செய்வதன் மூலம்அதிகமான விளைச்சலுடன் தரமான பொருட்களைப் பெறஇயலும்.

Jan 31, 2023

விளைச்சல் நன்றாக இருக்க நல்ல ஒரு உரம்

செடிகளுக்கு எல்லாம் நம் வீட்டில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தியது போக மீதி இருக்கும் காய்கறி கழிவுகளே நல்ல ஒரு இயற்கையான உரம். இவைகளை அப்படியே காய வைத்து உரமாக கொடுத்தாலும் அல்லது தண்ணீரில் போட்டு நொதிக்க விட்டு அதை தண்ணீருடன் கலந்து தெளித்தாலும் இந்த தண்ணீரில்அத்தனை சத்துக்கள் உள்ளது. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளை வைத்து தான் மிக மிக எளிமையாக இந்த உரத்தை தயார் செய்யலாம். இந்த உரம் தயாரிக்க 50 கிராம் கடுகு இருந்தால் போதும், 30 செடிகளுக்கு இதை பயன்படுத்தி உரம் கொடுக்கலாம்.  முதலில் கடுகை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்து வைத்து இந்த பவுடரை அரை லிட்டர் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து செடிகளுக்கு உரமாக கொடுக்க வேண்டும். இதை அப்படியே கலந்து கொடுக்கக் கூடாது.இந்த கடுகு உரத்தை கொடுப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அரை லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து வைத்து, இந்த தண்ணீர் நன்றாகநொதித்து  நுரை பொங்கி இருக்கும். அதன் பிறகு இந்த தண்ணீரை5 லிட்டர் தண்ணீரில் கலந்து அந்தத் தண்ணீரை செடிகளுக்கு ஸ்பிரே போல அடித்து விட வேண்டும்.  வேர்களுக்கு இந்த தண்ணீரை ஊற்றும் போது மண்ணில் கலந்து நல்ல ஒரு உரமாக மாறும்.இந்த உரத்தை தெளிப்பதற்கு முன் செடிகளில் உள்ள பழுத்த இலைகள், பூச்சி அரித்த இலைகள் ஆகியவற்றை நீக்கி விட வேண்டும். அது மட்டுமின்றி செடிகள் பூத்து முடித்துஇருந்தாலும் ,காய்கறி செடிகள் காய் வைத்து முடித்து இருந்தாலும், அதன் முனைகளை எல்லாம் நறுக்கி எடுத்து விட்ட பிறகு, இந்த உரத்தை ஊற்றினால் ,அடுத்த விளைச்சல் மிகவும் நன்றாக இருக்கும்.

Jan 24, 2023

சுழற்சிமுறையில் பயிர் செய்வதன் மூலம்நிலம் இழந்த வளத்தினை மீட்டெடுக்கலாம்.

விவசாயிகள் தங்களது விளை நிலங்களில்ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிரைவகைகளை சாகுபடி (Cultivation) செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் (Rotational) பயிர்களைத் தேர்வுசெய்து சாகுபடி செய்தால் கூடுதல்மகசூல் (Yield) கிடைக்கும். அதுமட்டுமல்லாது ஒரே மாதிரியான பயிரினைதொடர்ந்து பயிர் செய்வதால் நிலமானதுதனது வளத்தினை இழக்கிறது. எனவே பயிர்களை சுழற்சிமுறையில் பயிர் செய்வதன் மூலம்நிலம் இழந்த வளத்தினை மீட்டெடுக்கலாம். பயிர் செய்யும் நிலத்தின் தன்மை, நீரின் அளவுஆகியவற்றுக்கு ஏற்ப பயிர் சுழற்சிமுறையை மேற்கொள்ளலாம்.இயற்கை வேளாண்மையில் கலப்பு மற்றும் ஊடுபயிர்சாகுபடி (Intercropping Cultivation) செய்வதன்  மூலம் பயிர் மகசூல் (Yield) அதிகரிக்கிறது. இவ்வாறு செய்வதினால் களைச்செடிகளின் எண்ணிக்கை பெருமளவில் கட்டுபடுத்த பட்டு, பூச்சிகளின் தாக்குதலைவெகுவாக குறைக்கலாம்.செயற்கை உரங்களைப் பயன்படுத்தும் போது நன்மை செய்யும்பூச்சிகள் , தீமை செய்யும்பூச்சிகள் எவை என்று பாராமல்அனைத்தையும் அழித்து விடும். இயற்கைப்பூச்சிவிரட்டிகள் தீமை செய்யும் பூச்சிகளைவிரட்டும் பண்புடையது. மேலும் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிலும் இரசாயன கலப்பின்றி சுவையான ஆரோக்கியமானவற்றை உண்ணலாம். 

Jan 17, 2023

மாடித்தோட்டம்

.மாடித்தோட்டம் அமைப்பதற்கு முன் மொட்டைமாடியில்உள்ள தண்ணீர் வீட்டிற்குள் கசிந்துவிடாதபடி வாட்டர் ப்ரூப் பூச்சு கொண்டு பூசிதயார் செய்து கொள்ள வேண்டும்.ஆணி வேர் கொண்ட செடிகள் (மரங்கள்)ஆபத்தானவை. இவ்வகை செடிகள்தரையை துளைத்து கட்டிடத்தைசேதமடையச் செய்துவிடும். ஜல்லிவேர்கள்கொண்ட செடிகளே நாம் மாடித்தோட்டத்தில்வளர்ப்பதற்கு சிறந்தவை.நம்குழந்தைகளுக்கும் இதில் ஆர்வம்ஏற்படுகிறது. அவர்களும் நம்மிடமிருந்துநல்ல விசயங்களை கற்றுக்கொள்கிறார்கள்.விவசாயிகளின் உணர்வுகளையும், கஷ்டங்களையும் புரிந்து கொள்வதோடு இயற்கையோடு வாழ பழகிக் கொள்கிறார்கள். மேலும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதைவிட அதிகப்படியான உடற்பயிற்சி, சுத்தமான காற்றும் நம் வீட்டிலேயே கிடைக்கிறது. .மாடித்தோட்டம் அருமையானநண்பனாகவும், நமக்கு பெரும் மனஅமைதியையும் மற்றும்புத்துணர்ச்சியையும் தருகின்றது. நமக்கு வரும் பெரும்பாலானநோய்களை விரட்டுகிறது.நமது வீட்டை வெயிலின்வெட்கையிலிருந்து ஐந்து முதல் பத்து டிகிரிவரை குறைத்து இயற்கையான ஏசியாகசெயல்படுகிறது.அதிக வெயில், குளிர்மற்றும் இரைச்சலிலிருந்து வீட்டைபாதுகாக்கிறதுநாமே வளர்த்த சத்தான காய்கறிகள்,கீரைகள் பிரஷ்ஷாக கிடைக்கிறது. 

Jan 11, 2023

வீட்டில் செடிகள் வளா்வதற்கு சாியான வெப்பநிலை

வீட்டில் செடிகள் வளா்வதற்கு சாியான வெப்பநிலை வேண்டும். ஈரப்பதம், காற்று மற்றும் சூாிய வெளிச்சம் ஆகியவற்றின் அளவு செடிகளுக்கு செடிகள் வேறுபட்டு இருக்கும். வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக்கூடிய போ்ட் ஆஃப் பேரடைஸ் (Bird of Paradise), கட்-லீஃப் ஃபிலோடென்ட்ரான் (Cut-leaf Philodendron) அல்லது பெல்லா பால்ம் (Bella Palm) போன்ற தாவரங்களுக்கு குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் தேவைப்படும்.பொதுவாக தாவரங்களை ரேடியேட்டா்கள் அல்லது குளிரூட்டிகளுக்கு அருகில் வைப்பதைத் தவிா்ப்பது நல்லது. ஏனெனில் இவை மண்ணின் ஈரத்தை மிக வேகமாக உலர வைத்துவிடும். மேலும் கிழக்குத் திசையை நோக்கி இருக்கும் சன்னலுக்கு அருகில் செடிகளை வைப்பதை விட, மேற்கு திசையை நோக்கி இருக்கும் சன்னலுக்கு அருகில் செடிகளை வைத்தால் அவை வேகமாக வளரும். ஏனெனில் மேற்கு திசையை நோக்கி இருக்கும் சன்னலுக்கு அருகில் வைக்கப்படும் செடிகளுக்கு அதிகமான அளவு சூாிய ஒளி கிடைக்கும். குறைவான சூாிய வெளிச்சமே தேவைப்படும் செடிகளை, வடக்குத் திசையை நோக்கி இருக்கும் சன்னல்களுக்கு அருகில் வைப்பது நல்லது.

Jan 03, 2023

க்ரோ பேக் தொட்டி

மாடி தோட்டங்கள் அமைக்கும் வாடகைகுடியிருப்புக்காரர்கள் அதிக எடை கொண்ட தொட்டியையோ சிமெண்ட் தொட்டிகளையோ பயன்படுத்த வேண்டாம். வீட்டை காலிசெய்யும் போதும் அதை எளிதாக எடுத்து செல்லும் வகையில் அமைக்க திட்டமிடுங்கள். . சொந்த  வீடுகள் வைத்திருப்பவர்கள் கூட இதை பயன்படுத்தாமல்  குறைந்த எடை  உள்ள" க்ரோ பேக்"  என்று சொல்ல கூடியவற்றில் செடிகள் வைக்கலாம்.இதில் மண்ணுக்கு பலம் சேர்க்க எரு, மண்புழு உரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதனோடு தென்னை நார்க்கழிவுகள் கிடைக்கும். இதை பயன்படுத்தும் போது செடிகளுக்கு தேவையான தண்ணீரின் அளவு மிச்சமாகும். அளவுக்கு அதிகமான மழையோ வெயிலோ நேரிடையாக செடிகளை பாதிக்காமல் இருக்க மாடியில் க்ரீன்ஹவுஸ் செட் மட்டும் போட்டு கொள்ளலாம்.

Dec 20, 2022

மாடித்தோட்டம் விளைச்சல் அதிகரிக்க

மாடித்தோட்டத்தில் விளைச்சலை அதிகரிக்க நிலத்தின் ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்துவைக்க வேண்டும்.இந்த மண் கலவை தயரானதும் உடனே விதைக்க வேண்டாம். 7-10 நாட்கள் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும், அதன் பிறகு விதைப்பு செய்தால், நல்ல விளைச்சல் அதிகரிக்கலாம்.ரெடிமேடாக விற்கும் தேங்காய் நார்கட்டியை கூட வீட்டுத்தோட்டதிற்கு பயன்படுத்தலாம். தேங்காய்நார் கழிவுக் கட்டியை, பாலித்தின் பையினை திறந்து, உள்ளே வைக்க வேண்டும். அதில் 10 லிட்டர் அளவு நீரை ஊற்ற வேண்டும். நன்கு ஊறிய தேங்காய் நாருடன் 2 கிலோ தொழுஉரம், உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூச்சிக் கொல்லிகளை தலா 10 கிராம் என்ற அளவில் கலந்து நன்கு கிளறிவிட வேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News