25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் இயற்கை உணவு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் இயற்கை உணவு

இலை, தழைகளை உண்டு வாழும் விலங்குகள் அவற்றின் உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நுண்ணூட்ட சத்துக்களையும் இலை, தழைகளில் இருந்து பெறுகின்றன. மனிதர்கள் பெரும்பாலும் காய்கறிகளை சமைத்து உண்பதால் அவற்றில் இருக்கும் சத்துக்கள் பெரும்பாலும் வீணாகி விடுகின்றன.

இதற்கு மாற்றாக, தற்போது உலகின் பல நாடுகளிலும் செடிகளின் இளந்தளிர்களை 'சாலட்' போன்ற வடிவில் உணவாக உட்கொள்ளும் கலாசாரம் பரவி வருகிறது. இதற்கென்று, குறிப் பிட்ட காய்கறிகள், தானியங்களை சிறிய தட்டுகளில் வளர்த்து அவை முளை விடும் பருவத்தில் அந்த இளம் தளிர்களை சேகரித்து உணவாக எடுத்துக்கொள்கின்றனர். இதனை 'மைக்ரோ கிரீன்' என்று அழைக்கின்றனர். கோவில் விழாக்களில் சுமந்துசெல்லப்படும் முளைப்பாரி வகை தாவர வளர்ப்பு முறை என்று சொல்லலாம். மைக்ரோ கிரீன் முறையில் வளர்க்கப்படும் தாவரங்கள் வீடுகளில் வளர்க்கப்படும்போது அவற்றுக்கு எந்த விதமான பூச்சி மருந்துகளும் பயன்படுத்துவது இல்லை.

அறுவடை செய்யப்படும் இளம் தளிர்களில் செறிவூட்டப்பட்ட சுவைகள் நிரம்பி இருப்பதுடன், உண்ணவும் மென்மையாக இருக்கிறது. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அஸ் கார்பிக் அமிலம் உள்பட பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்ப தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இவை மனித உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது என்று இயற்கை உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இதயநோய், வகை-2 நீரிழிவு நோய், சில புற்றுநோய்கள் மற்றும் உடல் பருமன் போன்றவை வரும் அபாயத்தை மைக்ரோ கிரீன் வகை உணவுகள் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News