25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


வேளாண்மை

Nov 11, 2025

பச்சை மிளகாய் வளர்ப்பு.

பச்சை மிளகாய் வளர்ப்பு முறையில், முதலில் தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்து, தொட்டியில்1 அங்குல ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். பின், தினமும்5-6 மணி நேரம் சூரிய ஒளி படும் இடத்தில் தொட்டியை வைக்க வேண்டும். தொடர்ந்து செடியைக் கவனித்து, தேவையான அளவு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். சரியான முறையில் பயிரிட்டால்90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். தரமான பச்சை மிளகாய் விதைகளைத் தேர்ந்தெடுக்கவும்.தொட்டியில், இயற்கை உரங்களைச் சேர்த்து, மண்ணைத் தயார் செய்யவும்.விதைகளை 1 அங்குல ஆழத்தில் நடவும்.செடிக்கு தினமும்5-6 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்கச் செய்யவும்.போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, மண்ணை ஈரப்பதமாக வைத்திருக்கவும்.களைச்செடிகளை அவ்வப்போது நீக்கவும்.தேவைக்கேற்ப இயற்கை உரங்களை இடவும்.இலை சுருட்டல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த,புளித்த மோர் அல்லது இயற்கை பூச்சிக்கொல்லிகளைபயன்படுத்தவும்.50-60 நாட்களில், மிளகாய்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். 

Nov 04, 2025

வீட்டின் அறைகளில் காற்றை தூய்மையாக்கும் தாவரங்கள்.

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் 'இங்கிலீஷ் ஐவி’ வஎன்ற சிறிய வகை செடி, காற்றில் கலந்திருக்கும் மனித கண்களுக்கு புலப்படாத கிருமிகளை ஈர்த்து அழிக்கும் திறன் கொண்டதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த தாவரத் தின் அறிவியல் பெயர் ஹெடேரா ஹெலிக்ஸ் என்பதாகும்.இதனை அறையில் வளர்க்கும்போது, காற்றில் உள்ள பூச்சி மற்றும் சிறிய உயிரினங்களின் கழிவுகளை கிரகித்துக் கொள் கிறது. இந்த செடி சுமார் 12 மணி நேரத்தில், ஒரு அறையில் இருக்கும் பல்வேறு நச்சு கிருமிகளை 94 சதவீதம் வரை வெளி யேற்றி காற்றை சுத்தப்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இது வீடுகளில் எஞ்சும் உணவுகளில் படரும் பாக்டீரியா போன்ற தொற்றுகளை கூட ஈர்த்து அறையின் காற்றை தூய் மையாக்குகிறதாம்..அதே வேளையில், இந்த செடி குழந்தைகள் மற்றும் சிறிய வீட்டு விலங்குகளுக்கு நச்சை ஏற்படுத்தும் என்பதால், இதனை கவனமாக பராமரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.இதே போல், வீட்டில் சுத்தமான காற்றை அளிக்கும் சிறந்த செடிகளாக அலோவெரா என்ற கற்றாழை, ஸ்நேக் பிளான்ட் என்ற பாம்பு செடி, சிலந்தி என்ற ஸ்பைடர் செடி, மணி பிளான்ட், பீஸ் லில்லி, ரப்பர் செடி, மூங்கில், கோல்டன் பொத்தோஸ், ஆகி யவையும் உள்ளன. இவை அறைகளில் உள்ள காற்று மாசுக்களை குறைத்து, உள்கட்டிடத்தை நல்ல முறையில் வைக்க உதவுகின்றன என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

Oct 28, 2025

வெற்றிலை கொடிகளை நடுவதற்கு ...

கொடியில் இலைகளும், கணுப்பகுதியும் இருக்க வேண்டும். பூஞ்சைகள் இருக்கக் கூடாது. சிலர் வேர்ப்பகுதியை நட்டு வைப்பார்கள். அது சில நாட்களில் வாடி விடும். செடியின் நுனி அல்லது நடுப்பகுதியை நட்டு வைக்க வேண்டும் முதலில் கணுப்பகுதி முழுகுகிற அளவுக்கு நல்ல தண்ணீரை ஊற்றி நாலைந்து நாட்களுக்கு தண்ணீரை மாற்ற வேண்டும். வெள்ளை புள்ளி போல வேர் தோன்ற ஆரம்பிக்கும். தண்ணீரில் வைத்த 25 ஆவது நாளில் வேர்கள் ஊடுருவி வந்த பிறகு, மண்ணில் நட்டு வையுங்கள். மேற்பகுதியில் இலைகள் இருந்தால் நீக்கி விடவும் அப்போதுதான் பூஞ்சை பிடிக்காமல் செழித்து வளரும்.

Oct 21, 2025

எலுமிச்சை புல் சாகுபடி

எலுமிச்சை புல் மருத்துவ ரீதியாக பயன்படுவதால் நல்ல விலை கிடைக்கிறது. எனவே இதனை சாகுபடி செய்து லாபம் பெறலாம்.ஓ.டி.-19, ஓ.டி.-408,ஆர்.ஆர்.எல் -39, பிரகதி, பிரமன், சி.கே.பி. - 25, கிருஷ்ணா மற்றும் காவிரி ஆகியவை பிரபலமான ரகங்களாக பயிரிடப்படு கின்றன.மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 என்ற அளவில் இருப்பதுடன்.மணல் கலந்த களிமண் நிலம் நிலம் ஏற் றது. அதிக மழைப்பொழிவு, ஈரப்பதத் துடன் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல சூழ்நிலை களில் நன்றாக வளரும்.இதை சந்துகள் மூலம் பரப்பலாம். ஒரு இடத்தில் 60 x 30 செ.மீ இடை வெளியில் சுமார் 55,600 சந்துகளை நடலாம். மேலும், 60 X 45 செ.மீ இடைவெளியில் ஒரு எக்டேருக்கு 37,000 சந்துகளை நடலாம். எக்டே ருக்கு 4 கிலோ என்ற அளவில் விதைகள் மூலம் பரப்பலாம், அக்டோபர் -நவம்பர் மாதங்களில் நாற்றுகளை வளர்த்து நடவு செய்ய வேண்டும். 'எக்டேருக்கு தொழு உரம் 20 -25 டன் என்ற அளவுக்கு அடி உரமாக இடவும். எக்டேருக்கு 50 கிலோ தழைச்சத்து பாதி நட வின் போதும், நடவு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு மீதியையும் இடவும். 7- 15 நாட்கள் இடைவெளியில் கூடுதல் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். தேவைப்படும் போது களை எடுக்க வேண்டும்.பொதுவாக, பூச்சிகள் மற்றும் நோய்கள் தாவரத்தை பாதிக்காது. ஏதேனும் உறிஞ்சும் பூச்சி இருந்தால் மீத்தில் டெமட்டான் 25 இ.சி. அல்லது டைமெத்தோயேட் 30 இ.சி. தெளிக்கவும். கம்பளிப்பூச்சி தாக்கினால் போசலோன் 35 இ.சி. தெளிக்கவும்.நடவு செய்த 90 நாட்களில் இலைகளை முதலில் அறுவடை செய்யவும், பின்னர் 75 - 90 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யவும். தரை மட்டத்தில் இருந்து 10 -15 செ.மீ உயரம்விட்டு புதரை வெட்ட வேண் டும். எக்டேருக்கு 20 - 30 டன் கிடைக்கும். மருத்துவ பயன்பாட்டுக்காக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறார்கள். நல்ல வருவாய் கிடைக்கும்.

Oct 14, 2025

மிளகாயை தாக்கும் நோய்களும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்....

மிளகாயைதாக்கும்நோய்களில் முக்கியமானது 'கொல்லிட்டோட்ரைக்கம்காப்சிசை' பூசணங்களால்வரக்கூடிய 'ஆந்த்ராக்னோஸ்'. நுனிக்கருகல், பழ அழுகல், பூ உதிர்தல், இலைப்புள்ளி போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.நுனிக்கருகல் அறிகுறி கிளைகள் நுனியிலிருந்து ஆரம்பித்து பின்னோக்கி கருக ஆரம்பிக்கும். நாளடைவில் ஒரு சில கிளைகள் அல்லது செடியின் மேற்பாகம் முழுவதும் கரிந்து காய்ந்து விடும். கிளைகள் ஈரக்கசிவுடன் பழுப்பு நிறத்தில் காணப்படும்.சில நாட்களில் இப்பகுதி சாம்பல் கலந்த வெண்மை அல்லது வைக் கோல் நிறத்தில் மாறும். நோயின் தீவிரம் அதிகமாகும் போது சில கிளைகள் அல்லது செடி முழுவதும் மடிந்து விடும். நோய் தாக்காத கிளைகளில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் தரம் குறைந்த காய்கள் தோன்றும்நோய் தாக்கிய இலைகளில் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் நீரில் நனைந்த புள்ளிகள் பெரிதாகி ஒன்றி ணைந்து இலைகளை உதிரச் செய்யும். நோயினால் பாதிக்கப்பட்ட பூக்கள்' காய்ந்து உதிர்ந்து விடும். பூக்காம்புகள் சுருங்கி பூங்கொத்து வாடி விடும்.பழங்களில் அழுகல் அறிகுறி தென்படும். ஒன்றிரண்டு சிறிய கரிய நிறப்புள்ளிகள் தோலின் மேல் தோன் றும். இவை விரிவடைந்து நீள்வட்ட வடிவ புள்ளிகளாக மாறும். புள்ளிகள் உட்குழிந்தும் கருமை கலந்த சாம்பல் அல்லது வைக்கோல் நிறமாகவும் புள் ளியைச் சுற்றி ஒரு மெல்லிய கருமை நிற வளையம் காணப்படும். பழங்களி னுள்ளும் விதைகளின் மேலும் பூசண வளர்ச்சி காணப்படும். நோய்த் தாக்கப்பட்ட பழங்கள் எளிதில் உதிர்ந்துவிடும்.நிலத்தில் கிடக்கும்  நோய் தாக்கிய இலைகள், பழங்கள், செடியின் பாகங்களில் இப் பூசண ம் நீண்ட காலம் உயிர்வாழும். தாக்கப்பட்ட பழங்களிலுள்ள விதைகள் மூலமாக வும் காற்று, மழைத்துளிகள் மூலம் நோய் வேகமாகப் பரவும். பல நாட்கள் அதிக பனி பெய்யும் போது நோயின் தீவிரம் அதிகமாகும். டிசம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் நடவு செய்யும் பயிர்களை தாக்கி சேதப்படுத்துகிறது.நோய் தாக்காத தரமானப் பழங்களி லிருந்து விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பயிர் சுழற்சி செய்வதன் மூலம் மண்ணில் நோய்க் கிருமிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். சரியான இடைவெளியில் நடவு செய் வதால் பயிர்களுக்கு இடையே நல்ல காற்றோட்டம், காற்றின் ஈரப்பதம் சரி யான அளவில் கிடைப்பதால் நோய்ப் பரவல் குறையும்.நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் நோய் தாக்கிய பழங்கள், இலை, கிளைகளை அகற்றி எரிக்க வேண்டும். நோய் தாக் கிய பழங்களை தனியாக அறுவடை செய்து சேமித்து வைக்க வேண்டும்.விதைப்பதற்கு 24 மணி நேரம் முன் பாக ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது காப்டான் அல்லது 2 கிராம் செரசான் கலந்த பின் விதைக்க வேண்டும்.ஏக்கருக்கு 300 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் சினப் அல்லது மான்கோ செப் அல்லது 750 கிராம் தாமிர ஆக்ஸி குளோரைட் கலந்து 15 நாட்கள் இடை வெளியில் 3 முதல் 4 முறை தெளிக்க வேண்டும்.

Oct 07, 2025

நெற்பயிரை தாக்கும் நெல் குலை  நோய்களை கட் டுப்படுத்த…..

நெல் குலை நோய் என்பது நெற்ப யிரை தாக்கும் ஒரு நோயாகும். நெற்ப யிரை பல்வேறு பூச்சி கள் தாக்குவதால் இந்த நோய் ஏற்படு கிறதுநெற்பயிரில் தண்டு,கணுப்பகுதி, கழுத்துப்பகுதி, கதிர் ஆகிய அனைத்திலும் பூசன தாக்குதல் காணப்படும். இலைகளின் மேல் பகுதி வெண்மை நிறத்தில் இருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்கள் கொண்ட கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்கள் உருவாகும். தீவிர தாக்குதலின் போது, பயிர் முழுவதும் * எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். கதிர் வெளிவந்தவுடன் பயிர்கள் சாய்ந்து விடும். இதையே 'குலை நோய்' என்கிறோம்.கழுத்து பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர் மணிகள் சுருங்கி, கதிர்கள் உடைந்து தொங்கி கொண்டிருக்கும். இவை 'கழுத்து குலை நோய் ஆகும். கணுக்கள் கருப்புநிறமாக மாறி உடைந்துவிடும். இதை 'கணு குலை நோய் என்கின்றனர். பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணு தாக்குதலும் ஏற்படுவதால், வெண் கதிர் அறிகுறி தோன்றும் கதிர்ப்பருவ நிலைக்கு முன்பே கழுத்துப்பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. ஆனால் கதிர்ப்பருவத்திற்கு பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானாலும், குறைந்த தரத்துடன் காணப்படும். கதிர் மற்றும் கதிர்க்கிளை களில் உள்ள புள்ளி கள் பழுப்பு நிறமாக அல்லது அடர் பழுப்பு நிறமாக இருக்கும். நெல் ரகங்களை பொருத்து, புள்ளிக ளின் அளவும், வடிவ மும் வேறுபடும்.இலை குலை நோய், கணுகுலை நோய், அதிர் குலை நோய்களை ஏற்படுத்தும் பூசண வித் துக்கள் ஆண்டு முழுவதும் காற்றில் இருக்கும். வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் போதும், காற்றின் ஈரப்பதம் 90 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக இருக்கும் போதும், அதிக அளவில் அம்மோனியம் சல்பேட், யூரியா போன்ற தழைச்சத்து உரங்கள் பயன்படுத்தப்படும் போது குலை நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.நோயற்ற பயிரில் இருந்து விதைகளை தேர்வு செய்ய வேண்டும். வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட ரகங்களை பயிர் செய்யலாம். பரிந்துரைப்படி விதை நேர்த்தி செய்ய வேண்டும். நோய் தாக்குதல் காணப்  பட்டால்தழை ச்சத்து உரம் தாமதமாக இடலாம். சூடோமோனஸ் ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் தெளித்து குலை நோய் தாக்குதலை குறைக்கலாம். 

Sep 30, 2025

கீரைகள் வளர்ப்பு.

கீரைகளை வளர்ப்பதற்கு, சரியான விதைகளைத் தேர்ந்தெடுத்து, நிலத்தைத் தயார் செய்து, சரியான இடைவெளியில் விதைகளை விதைக்க வேண்டும். விதைகளைத் தூவிய பின், மண்ணை மூடி, நன்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். கீரைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப, தொடர்ந்து தண்ணீர் ஊற்றி, களைகளை அகற்றி, உரமிட்டு பராமரிக்க வேண்டும். அறுவடைக்குத் தயாரானதும், கீரைகளை கவனமாகப் பறித்துக்கொள்ளலாம். கீரைகளை வளர்க்க, சூரிய ஒளி நன்கு கிடைக்கும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும். மாடித் தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டம் போன்ற இடங்களில் கீரைகளை வளர்க்கலாம்.கீரைகள் வளர, நன்கு உழுத, ஈரப்பதமான மண் தேவை. தொழு உரம் அல்லது மக்கிய எரு போன்றவற்றை மண்ணில் கலந்து, மண்ணைத் தயார் செய்ய வேண்டும்.முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பாலக்கீரை போன்ற பல்வேறு வகையான கீரை விதைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். விதைகளை1/2 அங்குலம் ஆழத்தில்,2 அங்குல இடைவெளியில் வரிசையாக விதைக்க வேண்டும். விதைகளை விதைத்த பிறகு, மண்ணை லேசாக மூடி, நன்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். கீரைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப, தொடர்ந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். களைகளை அவ்வப்போது நீக்க வேண்டும். தேவைப்பட்டால், இயற்கை உரங்களை இடலாம். கீரைகளில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட்டால், இயற்கை பூச்சிக்கொல்லிமருந்துகளைப் பயன்படுத்தலாம்அல்லது பாதிக்கப்பட்ட இலைகளை நீக்கலாம். கீரைகள் வளர்ந்ததும், அவற்றை கவனமாகப் பறித்துக்கொள்ளலாம். மாடித் தோட்டத்தில் கீரை வளர்ப்பதற்கு, தொட்டிகள் அல்லது பைகளில் மண்ணை நிரப்பி, விதைகளை விதைக்கலாம். தேவையான அளவு சூரிய ஒளி கிடைக்கும் வகையில், தொட்டிகளை சரியான இடத்தில் வைக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர் ஊற்றி, களைகளை அகற்றி, கீரைகளை பராமரிக்க வேண்டும். கீரை விதைகளை விதைக்கும் போது, விதைகளை மிக ஆழமாக விதைக்காமல், மேலோட்டமாக விதைக்க வேண்டும்.கீரைகளின் வளர்ச்சியைப் பொறுத்து, தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றவும்.இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், கீரைகளை ஆரோக்கியமாக வளர்க்கலாம். 

Sep 23, 2025

அன்னாசிப்பழம்  செடி வளர்ப்பு முறை.

அன்னாசிப்பழம் வளர்ப்பு முறைக்கு, சரியான மண், நீர்ப்பாசனம், மற்றும் சூரிய ஒளி மிகவும் அவசியம். அன்னாசிப்பழத்தின் மேல் பகுதியை வெட்டி, சில நாட்கள் உலர வைத்து, பின் தொட்டியில் அல்லது நிலத்தில் நடவு செய்யலாம். தொடர்ந்து போதுமான அளவு நீர்ப்பாசனம் செய்து, அதிக சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். அன்னாசிப்பழம் நன்கு வடிகால் வசதியுள்ள, அமிலத்தன்மை கொண்ட மண்ணில் நன்றாக வளரும்.தொட்டியில் வளர்க்கும்போது, மணல், களிமண் மற்றும் மட்கிய இலைகள் கலந்த கலவையை பயன்படுத்தலாம்.அன்னாசிப்பழத்தின் மேல் பகுதியை வெட்டி, அதன் அடிப்பகுதியில் உள்ள இலைகளை நீக்கி, சில நாட்கள் உலர வைக்கவும்.உலர்ந்த பகுதியை தொட்டியில் அல்லது நிலத்தில் நடவு செய்யவும்.மண்ணின் தன்மைக்கு ஏற்ப, அன்னாசிப்பழத்திற்கு போதுமான அளவு நீர்ப்பாசனம் அவசியம்.மண்ணின் மேற்பரப்பு காய்ந்தவுடன் நீர்ப்பாய்ச்சவும்.அன்னாசிப்பழம் தினமும் குறைந்தது 6-8 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வளர வேண்டும்.வெப்ப மண்டல பகுதிகளில் நன்கு வளரும்.அன்னாசிப்பழத்திற்கு, வளர்ச்சி பருவத்தில் உரமிடுவது அவசியமாகும்.தொழு உரம் அல்லது வேப்பம் புண்ணாக்கு போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தலாம்.அன்னாசி செடிகளில் களைகள் வராமல் அவ்வப்போது களைகளை அகற்ற வேண்டும்.அன்னாசிப்பழத்தைதாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை அவ்வப்போது கண்காணித்து, அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.அன்னாசிப்பழம் நன்கு கனிந்தவுடன், அதன் அடிப்பகுதி மஞ்சள் நிறமாக மாறும், அப்போது அறுவடை செய்யலாம். அன்னாசிப்பழம் வளர்ப்பு முறையில், அதிக கவனம் செலுத்தி, சரியான முறையில் பராமரித்தால், நல்ல விளைச்சலைப் பெறலாம்.அன்னாசிப்பழம் வளர்ப்பது குறித்த கூடுதல் தகவல்களை, வேளாண்மைத் துறையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அன்னாசிப்பழம்  செடி வளர்ப்பு முறை

Sep 16, 2025

ஒரே மாதத்தில் வருவாய் ஈட்ட தண்டுக்கீரை, முளைக்கீரையை  சாகுபடி செய்யலாம்.

கோ 1 முதல் 5 வரை என ரகங்களுக்கு நல்ல மண்ணும், மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்ட நில ம் உகந்தது. களிமண், முற்றிலும் கொண்ட நிலத்தை தவிர்க்க வேண்டும். உப்பு நீர் விதை முளைப்பு திறனை பாதிப்பதால் முளைக்கும் வரை நல்ல நீரும் பின் செடி வளர்ந்த பின் ஓரளவு உப்பு நீரும் உபயோகி க்கலாம் கீரைகள் அதிக சூரிய ஒளியில் அதிக  விளைச்சல் தரும். 25-30 டிகிரி செல்சியஸ்  என்ற வெப்பநிலையில்நன்குவளரும்.இதில் தானியக்கீரை ரகம் வெப்ப மண்டலத்திலும், குளிர் மண்டலத்திலும் பயிரிட ஏற்றது. ஆண்டு முழுவதும் கீரை பயிர் செய்யலாம்.நிலத்தை 3 முறை எக்டேருக்கு 25 டன்கள் மக்கிய தொழு எருவை கடைசி உழவின் போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும். பின் 2-க்கு 1.5 மீட்டர் என்ற அளவில் சம பாத்திகள்  மற்றும் பக்கத்தில் நீர் பாசனத்திற்கு வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். எக்டேருக்கு  அடி உரமாக 75 கிலோ தழைச்சத்து, 50 - கிலோ மணிச்சத்து, சாம்பல் சத்து 25 கிலோ உரங்களை அளிக்க வேண்டும்.விதைகள் மிகவும் சிறியவையாக இருப்பதால் சீராக விதைக்க விதையுடன் 2 கிலோ மணல் கலந்து பாத்திகளில் நேரடியாக தூவ வேண்டும்.பின் விதை களின் மேல் மண்அல்லது  மணலை மெல்லியபோர்வை  போல் தூவி மூடிவிட வேண்டும்.விதைத்தவுடன் பாத்திகளில்  நிதானமாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். பின் னர் விதைத்த 3-ம் நாள் தண்ணீர் விட வேண்டும். அதன் பின்னர்  ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைத்த 6 முதல்8 நாட்களில் விதைகள் முளைத்து விடும். பிறகு 12 முதல் 15 செ.மீ. இடைவெளியில் செடி  களை கலைத்து விடவும்.விதைத்த 21 நாட்களில் இருந்து அறுவடை  செய்யப்படுவதால் மருந்துகள் தெளிக்கக் கூடாது.முளைக்கீரையை விதைத்த 21 முதல்  25நாட்களில் வேருடன் பறிக்க வேண்டும். சிறிய செடி  களை 10 நாட்கள் இடைவெளியில்மற்றொரு  முறை அறுவடை செய்யலாம். மகசூல் எக்டே ருக்கு 10 டன்கள்.தண்டுக்கீரையை விதைத்த 35முதல் 40 நாட்களில் வேருடன் அல்லது கிளைகளை மட் டும் அறுவடை செய்யலாம்.மகசூல் எக்டேருக்கு  16 டன்கள் வரை கிடைக்கும்.

Sep 09, 2025

புரட்டாசி பட்டத்தில் வரகு சாகுபடி .

சிறுதானியங்களில் சிறந்த வரகு பயிரானது மண்ணிற்கும், மனிதனுக்கும் நன்மை தரும் பயிர்.வரகு பயிரானது வறட்சியை யும், வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடியது.  தமிழகத்தில் பிரதான சிறுதானியமாக  பயிரிடப்படுகிறது. அதிக காற்று, வறட்சி, கனமழை போன்ற கடினமான சூழ்நி லையிலும் வளரும் வரகு பயிரில் அதிக இரும்புச்சத்து,நார்ச்சத்து உள்ளது. மேலும் பறவைகள், விலங்குகளால் இப்பயிரை சேதப்படுத்தும் வாய்ப்பு குறைவு.மானாவாரியில் ஆடிப்பட் டம் (ஜூன், ஜூலை), புரட் டாசி பட்டமும் (செப்., அக்.,) இறவைக்கு அனைத்து பருவங் களும் ஏற்றது. மானாவாரிக்கு 350 முதல் 500 மி.மீ., வரை நீர் தேவைப்படும். கோடை உழவு செய்த நிலத்தில் ஒரு முறை டிராக் டரால் உழவேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் அல்லது ஒரு டன் மண்புழு உரம் இட்டு கொக்கி கலப்பையால் இருமுறை உழவேண்டும். இதனுடன் (4 800 கிராம் பாக்கெட்) அசோஸ் பைரில்லம் உயிர் உரத்தையும் பயன்படுத்தலாம்.விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன், ஒரு ஏக்க ருக்கு தேவையான 5 கிலோ விதைகளுடன் சூடோமோனஸ், 200 கிராம் 50 கிராம் அசோஸ்பைரில்லம் சேர்த்துகலந்து வைக்க வேண்டும். அந்த விதைகளுடன் இர இரண்டு பங்கு (10 கிலோ) மணலுடன் கலந்து விதைத்தால் விதைப்பு பரவலாக இருக்கும்.பயிர்களின் வளர்ச்சி சீராக இருக்கும். விதைத்த 15வது நாள் மற்றும் 45வது நாளில் கையால் களை எடுக்க வேண் டும். விதைத்த 20வது நாளில் பயிர்களின் எண்ணிக்கை ஒரே 5 இடத்தில் அதிகமாக இருந்தால் -பயிர் களைப்பு செய்யலாம்.மண் பரிசோதனை அடிப் படையில் ஏக்கருக்கு 55 கிலோ - சூப்பர் பாஸ்பேட்டை அடியுர - மாக இட வேண்டும். மேலும் அடியுரமாக ஏக்கருக்கு 19 கிலோ யூரியாவை இடவேண் டும். விதைத்த 45வது நாள் மேலுரமாக 19 கிலோ யூரியா இட வேண்டும். நுண்ணுா ட்டச்சத்து குறைபாட்டை போக்க ஏக்கருக்கு 5 கிலோ அளவு வேளாண் பல்கலையில் சிறுதானிய நுண்ணுணூட்டக் கல வையை 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தின் மேல் சீராக துாவ வேண்டும்.வரகு பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவு.குருத்து ஈதாக்குதல் ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு 100 மில்லி மீதைல் டெமட்டான் இ.சி., யை 200 லிட்டர் தண் ணீருடன் கலந்து விதைத்த முதல் 25ம் நாட்களில் தெளிக் கலாம். இலையுறை அழுகல் நோய் ஏற்பட்டால் பூப்பூக்கும் 45 வதுநாளில் ஏக்கருக்கு 400 கிராம்மான்கோசெட்மருந்தை 200 லிட்டர்தண்ணருடன்கலந்து தெளிக்கலாம்.110 நாட்களில் அறு டைக்கு தயாராகி விடும் பயிர்களில் மூன்றில் இரண்டு பங்கு முதிர்ச்சியடைந்தது அறுவடை செய்யலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News