25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வேளாண்மை

Dec 02, 2024

புதினாவை, சமையலுக்கு பயன்படுத்தி விட்டு, அந்த காம்பை தூக்கி வெளியே வீசிடாதீங்க! இப்படி, உங்க வீட்டு தொட்டியில் நட்டு வச்ச, சீக்கிரமே புதினா செடி வளர்ந்துவிடும் .

சமையலுக்காக, கடையிலிருந்து வாங்கி வரும், புதினாவிலிருந்து நம் வீட்டிலேயே, நம் வீட்டில் இருக்கும் சிறிய தொட்டியில் புதினா செடிகளை செழிப்பாக வளர வைத்து விட முடியும். இதுஒரு சுலபமான முறை தான். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.நான்கு இனுக்கு புதினாவை எடுத்துக் கொள்ளுங்கள் போதும். அந்த புதினா இனுக்கின், கீழ் பகுதியில் மட்டும் புதினா இலைகளை கிள்ளி எடுத்து கொள்ளுங்கள். அதாவது புதினா இனுக்கில், மேலே மட்டும் இரண்டு அடுக்கு இலைகள் இருந்தால் போதும். கீழ் பக்கமாக இருக்கும்2 அடுக்கு புதினா இலைகளை பறித்து விடுங்கள்(கீழே காம்பு மட்டும் இருக்க வேண்டும். மேலே புதினா இலைகள் லோடு சேர்த்த காம்பு இருக்க வேண்டும்.)ஒரு டம்ளரில், புதினா இலைகளின் காம்பு பகுதி மட்டும் நீரில் மூழ்கும் அளவிற்கு, தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் அந்த நான்கு புதினா இலைகளின் காம்பு பகுதியானது தண்ணீரில் மூழ்கியபடி, பத்து நாட்கள் இருக்க வேண்டும். அப்போது அந்த காம்பு பகுதியில், புதினா இனுக்கில், வேர் விட ஆரம்பித்து விடும். புதினாவின் காம்பு பகுதியானது தண்ணீருக்குள்ளேயே இருப்பதனால், புதினா இனுக்கின் மேல் பகுதியில், இருக்கும் இலைகள் வாடாமல் பச்சை பசேலென்ற தான் இருக்கும்.அந்த டம்ளரில் இருக்கும் தண்ணீரின் நிறம் மாறிவிட்டால் மட்டும், பழைய தண்ணீரை ஊற்றிவிட்டு புதிய தண்ணீர் போட்டு, மீண்டும் அந்த புதினா காம்புகளை தண்ணீரில் போட்டுவிடுங்கள். பத்து நாட்கள் கழித்து நன்றாக, புதினா காம்புகளில், வேர் விட்டிருக்கும். வேர் விட்ட அந்த 4 புதினா இனுக்குகளை எடுத்து, அகலமான மண் தொட்டியில், நான்கு திசைகளில், நான்கு ஓட்டையைப் (உங்கள் ஆள்காட்டி விரல் அளவுக்கு, ஒரு குச்சியை வைத்து ஓட்டை போட்டாலே போதும்.) போட்டு ஊன்றி விட வேண்டும்.நடுவில் ஒன்று! அதாவது, ஒரு புதினா இனுக்கை நடுவதற்கும், மற்றவர்களுக்கு புதினா இனுக்கை நடுவதற்கும், கொஞ்சம் இடைவெளி விட்டு விடுங்கள். அதன் பின்பு நன்றாக தண்ணீர் ஊற்றி விட வேண்டும். ஒரே வாரத்தில் அந்த வேரானது மண்ணில் ஊன்றி உங்களது புதினா செடி நன்றாக துளிர் விட ஆரம்பித்துவிடும். இரண்டு வாரங்கள் போதும். உங்கள் செடி நன்றாக வளர்வதை பார்க்கலாம்.மூன்றிலிருந்து நான்கு வாரம் முடிவதற்குள் நீங்கள் நட்டு வைத்த நான்கு புதினா இனுக்கு, அதிகப்படியான கிளைகளை விட்டு, படர்ந்து வளர ஆரம்பித்துவிடும். உங்கள் வீட்டில் அகலமான தொட்டி இருந்தால் இதை முயற்சி செய்து பாருங்கள்! தினமும் தேவையான அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். பச்சை பசேலென்ற புதினாவை, இனி கடையில் சென்று வாங்க வேண்டாம். உங்கள் வீட்டுத் தொட்டியில் பூச்சி மருந்து இல்லாமல், இயற்கையான முறையில் வளர வைத்து, பலனடையலாம்

Nov 25, 2024

சம்பங்கியில் நுாற்புழு தாக்கம்

சம்பங்கி, பாலியாந்தஸ் டியூபூரோசா என்ற தாவரவியல் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இம் மலர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான், சௌதி அரேபியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் இம்மலர்1667 எக்டர் நிலப்பரப்பில் ஆண்டுதோறும்19,815 டன் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவற்றின் ஓரடுக்கு மலர்கள் வாசனை அதிகம் கொண்டிருப்பதால், வாசனை மெழுகு உற்பத்தி செய்ய பயன்படுகின்றது. ஈரடுக்கு மலர்கள் கொய்மலராகவும், பூங்கொத்து தயாரிப்பதற்கும், பூஜாடியை அழகுபடுத்தவும் பயன்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இம்மலரில் நூற்புழுவின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. அவற்றுள் இலை நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழுக்கள் முக்கியமானதாக கருதப்படுகின்றன.இலை நூற்புழு(அப்கிலென்காய்டஸ் பெஸ்ஸியே), சம்பங்கி சாகுபடியில் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றது. இவற்றின் தாக்கம் இந்தியாவில் மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் காணப்படுகின்றது. இவை முதலில் ஹவாயில் பயிரிடப்பட்ட சம்பங்கியில் தென்பட்டது. நெல்லில் காணப்படும் 'வெள்ளை நுனி' அறிகுறியும் இந்த நூற்புழுவின் தாக்கத்தால் ஏற்பட்டவையாகும்.நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள்பூவின் தண்டு கடினமாகுதல், அதன் வளர்ச்சி குறைதல்இலைகளிலும் பூவின் இதழ்களிலும் பழுப்பு நிற கோடுகள் காணப்படுதல்தாக்குதலின் கடுமையான நிலையில், இலை, பூவின் இதழில் துரு போன்ற பழுப்பு நிற புள்ளிகள் தோன்றதல்பூவின் தண்டு அழுகுதல்பூங்கொத்தில் காணப்படும் பூவின்எண்ணிக்கைக் குறைதல்கட்டுப்படுத்தும் முறைகள்நடும் முன் கிழங்கினைக் கொதிக்கும் நீரில் (60-70° செல்சியஸ்) அல்லதுவேம்பு விதைக் கரைசலில் (4%) ஊறவைத்து பின் நடவு செய்ய வேண்டும்.கிழங்கு முளைத்த பிறகு, 3 முதல் 4 முறை இலை வழியாக குளோர்பைரிபாஸ் (0.5  மில்லி/ லிட்டர்) தெளிக்க வேண்டும்.இரண்டு மூன்றாண்டு செடியில், மேற்சொன்ன மருந்தினை ஏப்ரல் - மேமாதம் வரை மூன்று, நான்கு முறை, 15 முதல் 20 நாள்கள் இடைவெளியில் இலை வழியாக தெளிக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட செடிகளைவேருடன் பிடிங்கி அவற்றை எறிக்க வேண்டும்.நெல் வயலுக்கு பக்கத்து தோட்டத்தில் சம்பங்கி பயிரிடாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.நிலத்தை சுத்தமாக வைப்பதன் மூலம் இந்நூற்புழுவின் தாக்கத்தை முற்றிலுமாகக் குறைக்க முடியும்.வேர் முடிச்சு நூற்புழுவேர்முடிச்சு நூற்புழு (மெலாய்டோகைன் இன்காக்னிடா) தாக்குதல், இந்தியாவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களிலும் காணப்படுகின்றது.இவற்றின் தாக்குதலால் 13.25 சதம்செடியின் எடை, 9.87 சதம் பூக்களின் எண்ணிக்கை, 14.3 சதம்பூத்தண்டு எடை, 13.78 சதம் பூங்கொத்தின் எடை, 28.58 சதம்கிழங்கின் எண்ணிக்கை குறைகின்றது. மேலும், பூக்களின் தரம் அவற்றின் சந்தை விலையும் குறையும்.நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள்வேர் முடிச்சுகள் காணப்படுதல்இலைகள் மஞ்சள் நிறமாகி காய்ந்து காணப்படுதல்பூங்கொத்தின் விளைச்சல் குன்றுதல்பூக்களின் எண்ணிக்கையும், தரமும் குறைந்து காணப்படுதல்கட்டுப்படுத்தும் முறைகள்கார்போபியூரான் குருணை மருந்தினை செடி ஒன்றுக்கு 2 கிராம் வீதம் இடவேண்டும்.போரேட் 10 ஜி குருணை மருந்தை ஒரு எக்டருக்கு 10கிகிஎன்ற வீதத்தில் இடலாம்.கிழங்கினை நடும் முன், அவற்றை30to40 நிமிடம்டிரைசோபாஸ் கரைசலில்(2 மில்லி/ லிட்டர்) என்றஅளவில் ஊற வைக்க வேண்டும்.சம்பங்கி மலரைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக வருவாயைப் பெறலாம்.

Nov 18, 2024

தாவரங்களின் சிறப்புப் பெயர்கள்.

பழங்களின் அரசன்- மாம்பழம். இந்திய காடுகளின் அரசன்- தேக்கு. வாசனைப் பொருட்களின் ராணி -ஏலக்காய். ஏழை மனிதனின் உணவு ராகி மற்றும் -கேழ்வரகு. மருந்துகளின் ராணி- பென்சிலின். சூரியனின் மகள்- பருத்தி. ஏழைகளின் தேக்கு- மூங்கில். ஞானக் கீரை- தூதுவளை. சர்க்கரை நோயின் எதிரி -அவரைக்காய். 4 மணி தாவரம்- மல்லிகை. கீரைகளின் அரசன்- முருங்கைக் கீரை. ஞாபகசக்தியை கொடுப்பவன் -வல்லாரை. மருத்துவ இலை- துளசி.

Nov 11, 2024

கொத்தமல்லி வீட்டிலேயே வளர்க்கலாம்.

மல்லி விதைகளை இரண்டாக உடைத்துக் கொள்ளவும். முதல் நாள் இரவே இந்த விதைகளை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும், பின்னர் ஒரு மண்பானையில் மண்ணை நிரப்பி இந்த மல்லி விதைகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மண்ணை போட்டு மூடி விடவும். தினமும் செடிக்கு தண்ணீர் தெளித்து வரவேண்டும். அதிக வெயில் தேவையில்லை. நிழலில் வைத்து கூட வளர்க்கலாம். இவ்வாறு செய்தால் 10 நாட்களில் வீட்டிற்கு தேவையான கொத்தமல்லி செடி தழைத்து வளரும்.

Nov 11, 2024

மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் வீட்டுத்தோட்டம்

வீட்டில் தோட்டம் அமைத்து காய்கறி செடிகள். பூச்செடிகள் வளர்ப்பதற்குஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு மன நலனை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீட்டில் தோட்டம் வளர்ப்பது மன மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.'செடிகளை பராமரிப்பது. அதனுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்கும், மன நிலையை மேம்படுத்தவும் செய்யும். செடிகள் சூழ்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்து முக்கியமான விஷயங்களை பற்றி விவாதிப்பது, சிந்திப்பது படைப்பாற்றல் திறனை 45 சதவீதம் அதிகரிக்க செய்யும் என்பது இங்கி லாந்தை சேர்ந்த எக்ஸிடெர் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந் துள்ளது.தனிமை சூழலில் வசிப்பவர்கள் செடிகளை வளர்த்து பராமரிப்பது தனிமை உணர்வை போக்கும். மனச்சோர்வை விரட்டும். மன மகிழ்ச்சியையும் அதிகரிக்க வழிவகுக்கும். பசுமை சூழ்ந்த இடத்தில் ஓய்வு எடுப்பது மூளையில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி மன நிம்மதியாக உணர வைக்கும். மகிழ்ச்சியான மன நிலையை யும் உண்டாக்கும். ஈரப்பதமுள்ள மண்ணில் கைகளை புதைத்து தோட்ட வேலை செய்யும் போது நரம்பு மண்டலத்திலும் அமைதியான உணர்வை ஏற்படுத்தும். மன நலனில் மாற்றங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சியான சூழலையும் உணர வைக்கும்.

Nov 04, 2024

மழையை அறிவிக்கும் புன்னை மரம்

மண்ணுக்கும் மனிதனுக்கும் நன்மைகள் செய்ய இயற்கை மரங்கள்.இன்றைக்கு, நகர விரிவாக்கம் சாலை உருவாக்கம் என்ற பெயரில் மரங்கள் வீழ்த்தப்படுகின்றன. இதனால், பல வகை மரங்கள் அழியும் நிலையில் உள்ளன.கடலோர பகுதிகளில் எங்கும் காணப்படும் புன்னை மரம் பொதுவாக அனைத்து வகை மண்ணிலும் வளரும். கடும் கோடையிலும் இதன் இலைகள் பசுமையாக கண்களுக்கு குளிர்ச்சி தரும். கோடையில் புன்னை மர நிழலில் அம ரும்போது புன்னை மரக் காற்றில் கலந்துள்ள அதிக அளவிலான பிராணவாயு சுவாசத்தை சீராக்கி மன அழுத்தத்தை போக்கி புத்துணர்வு பெற வைக்கும் என்கிறார்கள்தாவரவியலாளர்கள். புன்னை இலைகள் சளி, தலைவலி, கண் சூடு, வயிற்று வலி மற்றும் தோல் வியாதிகளை போக்கும் மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. புன்னை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் புங்க எண்ணெய் முற்காலத்தில் மக்கள் விளக்கு எரிக்க பயன்படுத்தினர். புன்னை மரத்தில் மலர்கள், அதிக அளவில் பூத்துக்குலுங்கினால் அந்தப் பகுதியில் நிச்சயம் மழைப்பொழிவு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறி யுள்ளனர்.புயலுக்கு சாயாத, பூச்சி அரிக்காத உறுதி தன்மை புன்னை மரங்களுக்கு உண்டு என்பதால் கப்பல் கட்டவும் புன்னை மரங்கள் பயன்பட்டன. பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதி, புன்னை மரங்களின் வனமாக இருந்ததால், அந்த ஊர் புன்னைநல்லூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

Oct 28, 2024

மாடித்தோட்ட பூச்சி தாக்குதலை சமாளிப்பது எப்படி?

மாடித் தோட்டத்தில் செடிகளின் வளர்ச்சி மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு, பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் வேறுபடும்.சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி, இலைப்பேன் போன்றவை செடிகளின் ஆரம்ப நிலை வளர்ச்சியை அதிகமாகப் பாதிக்கின்றன.இதைக் கட்டுப்படுத்த பூண்டு, இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் கரைசலைச் செடிகளின் மீது வாரத்துக்கு ஒருமுறை தெளித்து விடலாம்.பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் கரைசல் தயாரிக்கும் முறைபூண்டை (18 கிராம்) தோல் நீக்கிய பிறகு நன்கு பசைபோல் அரைத்துக்கொள்ள வேண்டும். இதேபோன்று மிளகாய் ஒன்பது கிராம் மற்றும் இஞ்சி ஒன்பது கிராம் ஆகியவற்றை அரைத்துக்கொண்டு, இவை மூன்றையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும்.இந்தக் கரைசலை இரண்டு தேக்கரண்டி காதிசோப் கரைசலுடன் சேர்த்து நன்கு கலக்கி வடிகட்டிய பிறகு, செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.காய் மற்றும் தண்டு துளைப்பான் பூச்சிகளின் தாக்குதலால் காய் மற்றும் பழங்கள் உண்பதற்கான தன்மையை இழந்துவிடுகின்றன.இதைத் தவிர்க்க நான்கு மில்லி வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் காதிசோப் கரைசலைச் சேர்த்துச் செடிகள் மீது தெளிக்க வேண்டும். இந்தக் கரைசல், இலை தின்னும் புழுக்களைக் கட்டுப்படுத்தும்.100 கிராம் சாணத்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கலக்கிக் கோணிப்பை மூலம் வடிகட்டிய பிறகு, மீண்டும் இக்கரைசலுடன் 500 மி.லி. தண்ணீர் சேர்த்து மீண்டும் வடிகட்ட வேண்டும். பிறகு கிடைக்கும் தெளிவான கரைசலைச் செடிகளின் மேல் தெளிக்கவும். இதுவும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.

Oct 21, 2024

பூச்சிகளை கட்டுப்படுத்தும் மஞ்சள், நீலநிறங்கள்.

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த இலை பேன்களை கண்காணிக்க ஏக்கருக்கு12 முதல்15 எண்ணிக்கையில் மஞ்சள் ஒட்டு பொறி பயன்படுத்தலாம். பசுமை குடில், நிழல் வலை கூடார பயிர்களுக்கு ஐந்து மீட்டருக்கு ஒரு மஞ்சள் ஒட்டு பொறியை செடி களின் கிடைமட்ட அள வில் காற்று வீசும் திசைக்கு எதிராக கட்ட வேண்டும். இதை வீட்டிலேயேஎளிமையாக தயாரிக்கலாம். சிறிய செவ்வக வடிவ அட்டை, பிளாஸ்டிக் அல்லது இரும்பு பெட்டி போன்றவற்றில் மஞ்சள் நிற பெயின்ட் பூச வேண்டும். அதன் மேல் கிரீஸ் அல்லது ஆமணக்கு எண் ணெய்யுடன் ஏதேனும் மருந்து கலந்து வயலில் வைத்தால் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கும். நீலநிற ஒட்டு பொறி கள் 'ட்ரிப்ஸ்' எனப்படும், இலை பேன்களை கவர்ந்து அழிக்கும். ஒட்டுப்பொறி களை நிலத்தில் நிறுவியபின் ஸ்பிரேயர் மூலம் தண் ணீரை தெளித்தால் இலை பேன் இடம் மாறி தாவும் போது ஒட்டுப்பொறியில் சிக்கி இறந்து விடும்.பூண்டு அல்லது சின்ன வெங்காய சாற்றின் மூலம் அனைத்து விதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளையும், பட்டாம்பூச்சி வகை பூச்சி களையும் கட்டுப்படுத் தலாம். இதில் இருந்து வரும் வாசம் பூச்சிகளால் தாங்கமுடியாது.

Oct 07, 2024

செங்குத்து தோட்டம்(Vertical Garden)

நகரங்களில் ஏற்படும் இட நெருக்கடிக்கு இந்த செங்குத்துத் தோட்டம் தீர்வாக அமையும். அதே சமயம் மக்கும் கழிவுகளுக்கும் இது தீர்வாக அமையும். பல்வேறு முறைகளை பார்த்ததில் இந்த பை முறை சற்று எளிமையாக இருப்பதோடு குறைந்த செலவில் இதனை உருவாக்க முடியும். சாதாரணமாக குறைந்த உயரத்தில் செடிகளை வளர்க்கும் போது அதிக பட்சம் 4 அல்லது 5 செடிகளை மட்டுமே வளர்க்க முடியும். உயரம் அதிகமான இந்த பையில் பக்கங்களில் துளை செய்து குறைந்தது 20 முதல் 25 செடிகள் வளர்க்கலாம். குறிப்பாக பாலக்கீரையை சிறப்பாக வளர்க்கமுடியும். உங்கள் பார்வைக்காக சில புகைப்படங்கள்.செங்குத்துத் தோட்டதிற்கு பை தயாராகிறதுஇளம் நாற்றுக்கள்நன்கு வளர்ந்த நிலையில் கீரைகள்மேற்பகுதியில் 4 அல்லது 5 செடிகள் மட்டுமே வளர்க்க இயலும்.செங்குத்து நிலையில் 20 முதல் 25 செடிகள் வளர்க்க இயலும்.

Sep 30, 2024

அதிர்ஷ்ட தாவரம் லக்கி பாம்பூவை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

புதிதாக வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரப்படி எந்த மூலையில் சமையல் அறை இருக்க வேண்டும், படுக்கை அறை எந்தப் பக்கம், வாட்டர் டேங்க் எந்தப்புறம் என ஒவ்வொன்றையும் சாஸ்திரப்படி பார்த்துப் பார்த்து அமைத்து வீட்டைக் கட்டுவது வழக்கமாக உள்ளது. வீட்டைக் கட்டி முடித்த பின் உள்அலங்காரமாக பல வகையான நவீன விளக்குகள், இருக்கைகள் என பலவற்றையும் வாங்கிப் பயன்படுத்துகின்றோம்.இதற்கிடையில் வீட்டிற்குள் குளிர்ச்சி தர, காற்று மாசை சுத்தப்படுத்த, அஷ்ட லட்சுமிகளையும் அழைத்து வர என பல்வேறு காரணங்களுக்காக, குறைந்த அளவு பராமரிப்பிலேயே நன்கு வளரக்கூடிய வாஸ்து செடிகளையும் அழகாக வரிசைப்படுத்தி வளர்த்து வருவது ட்ரெண்டிங்காக உள்ளது. அவ்வாறான செடிகளில் மிகுந்த அதிர்ஷ்டம் தரக்கூடியதாகக் கருதப்படுவது மூங்கில் செடி. இந்த லக்கி பாம்பூவை (Lucky Bamboo) வீட்டில் வளர்ப்பதால் நன்மைகள் லக்கி பாம்பூ எந்த சூழலையும் தாங்கி வளைந்து கொடுத்து வளரும் குணம் கொண்டது. இருக்கும் இடத்திற்கு அழகு தரக் கூடியது. வீட்டில் உள்ளவர்களின் வளமான வாழ்வுக்கும் இதன் வளர்ச்சிக்கும் தொடர்பு உள்ளதாக நம்பப்படும் அபூர்வ தாவரம் இது. குறைந்த அளவு பராமரிப்பிலேயே தான் இருக்கும் இடத்திற்கு நேர்த்தியான அழகும் நளினமும் சேர்க்க வல்லது.இந்த மூங்கில் பிளான்ட் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதோடு, வீட்டிற்கு உகந்த நேர்மறை சக்தியையும் அளிக்கக் கூடியது. இதை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பதால் வீடு நிறைவான சமநிலை பெற்றுத் திகழும்.இந்த செடிக்கு அவ்வப்போது சிறிது தண்ணீர் விட்டு குறைந்த வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைத்து, குறைந்த அளவு கவனிப்பு தந்தாலே அது நன்கு வளர்ந்து நிறைந்த நன்மைகளைத் தரும்.இந்த லக்கி பாம்பூ வெளிக்காற்றில் கலந்து வரும் மாசுக்களையும் கிருமிகளையும் வடிகட்டி சுத்தமான காற்றை மட்டும் வீட்டுக்குள் வர உதவும். இதனால் வீடு அதிகளவு ஆரோக்கியம் நிறைந்த காற்றினால் நிரப்பப்பட்டு வீட்டிற்குள் நல்லதொரு சூழல் உருவாகும்.இதன் அடர் பச்சை நிறம் கொண்ட தோற்றம் மனதை அமைதிப்படுத்தும்; மன அழுத்தத்தைக் குறைத்து உடலை தளர் நிலைக்குக் கொண்டு செல்லும். இதனால் ஒரு தெய்வீகமான அமைதி நிறைந்த சூழல் வீட்டிற்குள் உருவாகும் வாய்ப்பு உண்டாகும். எந்த மாதிரியான உள் அலங்காரத்திற்கும் உகந்தது லக்கி பாம்பூ. அதன் அழகும், நேர்த்தியும், பார்ப்போரைத் தன் பக்கம்  கவர்ந்திழுக்கும் குணமும் அது வீட்டினுள் எந்த இடத்தில் வைக்கப்பட்டாலும் அந்த இடத்தை அமைதியும் அழகும் நிறைந்ததாக மாற்றிவிடும்..நம் வீட்டிலும் அழகும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கும் லக்கி பாம்பூவை வளர்ப்போமே.!

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 16 17

AD's



More News