25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


' கிளாடி யோலஸ் ' மலர் சாகுபடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

' கிளாடி யோலஸ் ' மலர் சாகுபடி.

தமிழ்நாட்டில் சில கிராமங்களில்விவசாயிகள்அதிகஅளவில் 'கிளாடியோலஸ்' மலர்சாகுபடிசெய்துஉள்நாட்டிலும், வெளிநாடுகளுக் கும் ஏற்றுமதி செய்து அதிக அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். நல்ல வருமா னம் தரும் கிளாடியோலஸ் மலர் சாகுபடி பற்றி அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்வது அவசியம்.

கிளாடியோலஸ் மலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிக அளவில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. மேலும், தென் இந்தியாவில் பெங்களூருவில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்பட்டது. தற்போது தமிழகத் தில் பசுமை குடில்கள் மற்றும் தோட்டங் களில் சாகுபடி செய்யப்படுகிறது. கிளாடி யோலஸ் மலர்கள் கரணைகள் மூலமாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மலர் வெங்காயம் மற்றும் பூண்டு குடும்பத்தை சேர்ந்தது.

கிளாடியோலஸ் மலர்களை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் நல்ல வடிகால் வசதி கொண்ட நிலத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தண் ணீர் தேங்கி நிற்கும் களிமண் நிலங்களில் கிளாடியோலஸ் நன்றாக வளராது. இது மழை மற்றும் பனி காலங்களில் 15 முதல்20 செல்சியஸ் வரை வெப்பம் கொண்ட பகுதிகளில் இளம் பருவத்தில் நன்றாக வளரும் தன்மை கொண்டது. 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமானா லும் செடியின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது. எனவே தமிழகத்தில் தற்போது அதிக அளவில் மலர் சாகுபடி செய்யப்படும் மதுரை, திண்டுக்கல், கடலூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயி கள் அதிக அளவில் கிளாடியோலஸ் மலர் சாகுபடியில் ஈடுபட முடியும்.

சாகுபடி முறை

கிளாடியோலஸ் மலர் சாகுபடி செய்ய தேர்வு செய்யப்படும் நிலத்தின் கார அமிலத்தன்மை 6 முதல் 7 வரை இருத்தல் வேண்டும். இவ்வாறு இடத்தை தேர்வு செய்த பின் வெப்ப பகுதிகளில் கிளாடி யோலஸ் 2 முதல் 4 இலைகள் விடும் தருணத்தில் 12 முதல் 17 நாட்கள் வரை தொடர்ந்து நீர் பாசனம் செய்ய வேண்டி யது அவசியம்.

பின்னர் சாகுபடியில் களைகளை கட் டுப்படுத்த களையெடுக்க வேண்டும். ஒன்று முதல் ஐந்து பூங்கொத்துகள் தோன்றும் தருணத்தில் விவசாயிகள் கிளாடியோலஸ் மலர் அறுவடை காலத்தை அடைந்து விட்டதை தெரிந்து கொள்ளலாம்.

பதப்படுத்துதல்

கிளாடியோலஸ் மலர்களை அறுவடை செய்த பின் கரணைகளை மீண்டும் தோண்டி எடுத்து பெவிஸ்டின் பூஞ்சை கொல்லி மருந்தில் நன்றாக நனைத்து பதப்படுத்துதல் வேண்டும். கிளாடியோலஸ் கரணைகளை குளிர் பதனிடும் முறையில் பதப்படுத்த ஈரமான சாக்குப் பைகள் அல்லது மரப் பெட்டிகளில் வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News