பிரிட்ஜில் சேமித்து வைத்தாலும் சமைக்கும்போது பிரஷ்ஷாக போடுவது போல இருக்காது. தினமும் கடையில் சென்று வாங்கி வரவும் முடியாது. அதனால் வீட்டிலேயே சிறியதாய் ஒரு பூந்தொட்டியிலேயே ஓரிரு நாட்களிலேயே வளர்த்து விட முடியும். தினமும் நமக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டும் பறித்து கமகமவென சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு நாம்செய்ய வேண்டியது மிக எளிமையாள வேலை தான். ஒரு தொட்டியில் மண்ணை சரியான ஈரப்பதத்தில் இருக்கும்படி எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு டீஸ்பூன் அளவுக்கு காய்ந்த மல்லி விதைகளைத் தூவி விட்டு, அதன் மேல் நீர் தெளித்து விட்டால் போதும். தண்ணீரை ஊற்றக் கூடாது. தெளித்து தான் விட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் போதும். ஒரே வாரத்தில் தளதளவென வளர்ந்து நிற்கும். இதேபோல தான் புதினாவும். புதினாவை நாம் கடைகளில் வாங்கி வந்து பயன்படுத்திவிட்டு, அந்த தண்டுப்பகுதியை கீழே தூக்கி எறியாமல் அதை சிறிய தொட்டியில் ஊன்றிவிட்டால் போதும். பிரஷ்ஷான புதினா ஓரிரு நாட்களிலேயே நமக்கு கிடைத்துவிடும்.
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலிருந்து விளைய வைக்கும் காய்கறிகள் வரை நச்சுக்களை தான் கலப்படம் செய்கின்றனர். பூச்சிகொல்லி, செயற்கை உரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.காய்கறிகளில் மிக முக்கியமானது இந்த கேரட். இந்த கேரட்டை நிறைய பேர்களுக்கு பச்சையாக சாப்பிட பிடிக்கும். ஆனால் செயற்கை உரங்கள் மூலம் விளைவித்த காய்கறிகளை பச்சையாக உட்கொண்டால் கண்டிப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே இந்த ருசியான கேரட்டை வீட்டிலேயே வளரச் செய்ய நம்மால் முடியும்.ஒரு தொட்டியில் மண்ணை நிரப்பியோ அல்லது நேரடியாக நிலத்திலோ இதை வளர்க்கலாம். இப்பொழுது கேரட் விதைகளை இந்த மண்ணினுள் வைத்து மூடி விடுங்கள். கேரட் விதைகள் எளிதாக மார்க்கெட்டில் கூட கிடைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்கு பிறகு நீங்கள் ரெம்ப பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கேரட் சீக்கிரமாக வளர ஆரம்பித்து விடும். 2-3 நாட்களுக்கு ஒருமுறை என தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்த 30 நாட்களில் பாருங்கள் உங்கள் வீட்டு தோட்டத்தில் கண்ணை கவரும் கேரட் ரெடியாகி இருக்கும்..
.சமையலறையில் தினந்தோறும் பயன்படுத்தும் பொருள் தக்காளி. சமையலுக்கு பயன்படுத்த கூடிய இந்த அத்தியாவசியமான பொருளை, நம் வீட்டில் வளர்த்து, நம் வீட்டுத் தொட்டியில் இருந்து, அறுவடை செய்து, சமைத்தால் எப்படி இருக்கும்? அதிகமாக சிரமப்பட வேண்டாம். சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சிறிய தொட்டியிலேயே, ஒரு தக்காளி செடியை வளர்க்க லாம்.பழுத்த நாட்டு தக்காளி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை வட்ட வடிவில் நறுக்கிக் கொண்டால்,4 லிருந்து5 பீஸ் கிடைக்கும். அதை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு தொட்டியை எடுத்துக்கொள்ளவேண்டும். பிளாஸ்டிக் தொட்டியாக இருந்தாலும் சரி. மண்தொட்டியாக இருந்தாலும் சரி. அந்தத் தொட்டியில், முதலில் அடிபாகத்தில், உங்கள் வீட்டில் தேங்காய் உரிக்கும் நார் இருந்தால், அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். அதன்பின்பு60 சதவிகிதம் கருப்பு மண் இருந்தால் எடுத்துக் கொள்ளலாம் அல்லது செம்மண் எடுத்துக்கொள்ளுங்கள்.40% மண்புழு உரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து தொட்டியில் சேர்க்கவேண்டும். தொட்டியில் சேர்க்கபோகும் மண் உதிரி உதிரியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பாக நீங்கள் வெட்டி வைத்திருக்கும் வட்டவடிவ தக்காளி துண்டுகளை, கொஞ்சம் இடைவெளி வைத்து தொட்டியில் அடுக்கி விடுங்கள். தக்காளியில் இருக்கும் விதை தனியாக வந்திருந்தால் அந்த விதையையும் சேர்த்து இந்த தொட்டியிலேயே போட்டுவிடுங்கள். இந்த தக்காளி வெளியே தெரியாத அளவிற்கு, மேலே ஒரு லேயர் அளவு கருப்பு மண்ணை தூவி விடுங்கள். தடிமனாக தூவி விட்டு விடக்கூடாது. ஒரு இன்ச் அளவு தடிமனாக தூவினால் மட்டும் போதும். தூவிவிட்டு, அந்த மண்ணை, கைகளால் போட்டு அமைக்கக் கூடாது. அதன் பின்பாக மேலே இருக்கும் மண் நன்றாக நனையும் அளவிற்கு தண்ணீரை ஸ்பிரே செய்ய வேண்டும். அதாவது தெளிக்க வேண்டுமே தவிர, ஒரே இடத்தில் தண்ணீரை ஊற்றி விடக்கூடாது. - தினமும் காலை மாலை இரண்டு வேளையும் தண்ணீர் தெளிக்க வேண்டும். கொஞ்ச நேரம் இந்த தொட்டியை வெயிலில் வைப்பது நல்லது. பத்து நாட்களில் நன்றாக துளிர்விட ஆரம்பித்துவிடும். பதினைந்தாவது நாள் துளிர்விட்ட அந்த தக்காளிச் செடியை, வேரோடு சேதமடையாமல் எடுத்து மற்றொரு தொட்டிக்கு மாற்றி பதியம் போட்டு வைத்துக் கொள்ளலாம். ஒரே தொட்டியில் நிறைய செடிகள் வேரூன்றி வருவது கஷ்டமாக இருக்கும் என்பதால் தொட்டியை மாற்றி வைப்பது நல்லது. புதிய தொட்டியின் செடியின் வேர் உள்ளே செல்லும் அளவிற்கு, பள்ளம் தோண்டி, வேரோடு பிடுங்கிய ஒரு செடியைப் பதியம் போட்டு விட்டீர்கள் என்றால், அந்த செடி மீண்டும் வேரூன்றி வளர ஆரம்பித்துவிடும். குறைந்தது 50 லிருந்து 55 நாட்களுக்குள் செடி ஓரளவிற்கு நன்றாக வளர்ந்துவிடும். பூ வைக்க தொடங்கிவிடும். பத்து நாட்களுக்கு ஒருமுறை ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரையும், மண்புழு உரத்தையும் இந்த செடிக்கு சேர்த்து வருவது அதிகப்படியான பூ விட்டு, அதிகப்படியான காய் காய்த்து, அதிகப்படியான தக்காளி பழங்களை அறுவடை செய்ய உதவியாக இருக்கும். செடி வைத்த90 நாட்களில் சரியான ஊட்டச்சத்து செடிக்கு கிடைத்திருந்தால், நீங்கள் தக்காளி பழங்களை அறுவடை செய்யலாம். ஒரு சில பேரது வீட்டில் செடி பக்கவாட்டில் வளர்ந்து, கீழே தாழ்வாக தொங்கும். அப்படிப்பட்ட கிளைகளை நாம் தூக்கி நிறுத்தி, ஒரு கயிறால் கட்டவேண்டும். அதாவது உங்கள் தொட்டியிலேயே கட்டையை சொருகி வைத்து, அந்த கட்டையில், முட்டுக்கொடுத்து கிளைகளை இலேசாக கட்டி விடுங்கள். அப்போது உங்களது கிளைகள் கீழே சாயாமல் இருக்கும். உங்கள் வீட்டில் இரண்டு தொட்டி, ஒரு தக்காளி இருந்தால், மட்டும் போதும். இதை எல்லாவற்றையும் விட செடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், நீங்கள் வைக்கும் செடியானது, நீங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே வளரும்
வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்றும் செல்வ செழிப்புடனும் எப்போதும் வாழ வேண்டும் என்ற நம்பிக்கையில் மணி பிளாண்டை வீட்டில் வளர்கின்றனர்.ஒழுங்கான பராமரிப்பு இல்லையேல் நீண்ட காலம் வாழாது.. மணி பிளாண்ட் கன்றுகளை மண்ணுடன் சேர்த்து வளர்க்க வேண்டும்.வளர்ச்சி அதிகமானாலும் ஒரு சில மணிநேரத்தில் குறையும். இச்சந்தர்ப்பத்தில் எப்சம் உப்பை சேர்க்கவும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால் அதை வெட்டி விட வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே புதிய இலைகள் ஆரோக்கியதுடன் வளர்ச்சி பெறும்.வேகமாக வளர வேண்டுமென்றால், 4 மாதங்களுக்கு ஒரு முறை மண்ணைத் தோண்டி உரம் சேர்த்து வந்தால் வேகமாக வளரவைக்கவும்.நேரடியாக சூரிய ஒளிப்படும் வகையில் வைக்க கூடாது. இவ்வாறு வைத்திருந்தால் அதன் இலைகள் கருகி விடும்.ஈரமான மண் அதிகமாக தேவை. அது தினசரி தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்கிறது. எனவே பருவத்திற்கு ஏற்ப தண்ணீர் கொடுக்க வேண்டும்.
தென்னைசாகுபடி செய்யும் விவசாயி கள் முன்னெச்சரிக்கைக்காக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்த,வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிற முட்டைகளை, சுழல் வடிவில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள் மெழுகுப் பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளம்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளின் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. சுமார்20,30 நாள்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவை காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளில் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதோடு, தேன் போன்ற திரவக் கழிவுகளையும் வெளியேற்றுவதால், கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும் பூசணம் படர்ந்து காணப்படும்.வெள்ளை ஈக்களானது, தென்னை மரங்களைத் தவிர, வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் தாக்குதல் ஏற்படுத்துகிறது. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈமேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையானது பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மஞ்சள் நிறம், வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் ஆனஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை(நீளம்5 அடி அகலம்11/2 அடி) ஏக்கருக்கு10 என்ற எண்ணிக்கையில்,5-6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டிவைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.மஞ்சள் விளக்குப் பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னந்தோப்புகளில் அமைத்து மாலை 6 முதல் இரவு 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் தெளிப்பான்களைக் கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலமாகவும் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்.வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது பொறிவண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் அதிகளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தைப் பெருமளவு குறைக்கிறது.என்கார்ஸியா ஒட்டுண்ணிகளானது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையங்களின் வாயிலாக, தென்னை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.கிரைசோபெர்லா இரை விழுங்கிகள், தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபெர்லா இரை விழுங்கிகளின் முட்டைகளை விடுதல் நல்ல பயனளிக்கும்.இந்த இரை விழுங்கிகளின் முட்டைகள் அடங்கிய அட்டையானது, திருச்சி மாவட்டத்தில் செயல்படும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களின் வாயிலாக, தென்னை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.அதிகளவு பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கும்போது நன்மை செய்யும் உயிரினங்கள் அழிந்து விடுவதால், ரசாயன பூச்சிக்கொல்லிகளைக் கண்டிப்பாக தவிர்த்து நன்மை செய்யும் உயிரினங்கள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சாலச் சிறந்ததாகும்.
அனைத்து வீடுகளிலும் செம்பருத்தி செடி வளர்த்து வருவோம். செம்பருத்தி செடி அழகிற்காக மட்டுமில்லாமல் அதில் எண்ணற்ற பயன்களும் உள்ளது. அதாவது, செம்பருத்தி இலையம் பூவும் நம் முடியின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள ஒன்று. எனவே இந்த செடியை நாம் அதிகமாக வீடுகளில் வளர்த்து வருவோம். தேவையான பொருட்கள்:வாழை பூ மடல் – 4வெல்லம் – 50 கிராம் டீ தூள் – 1 ஸ்பூன் காஃபி தூள் – 1 ஸ்பூன் வாழைப்பழ தோல் – 6செம்பருத்தி செடியை நடவு செய்யும்போது அதற்கு அடியுரமாக தொழுஉரம் கலந்த மண்கலவையை இட வேண்டும்..செடி நன்றாக வளர்ந்தும் அதிக பூக்கள் பூக்க ஒரு பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் தண்ணீர்எடுத்துகொள்ளுங்கள். அதில் வாழைப்பூ மடல்,1 ஸ்பூன் டீ தூள்,1 ஸ்பூன் காஃபி தூள் மற்றும் வாழைப்பழத் தோல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.இதனை நன்றாக மூடி 4 நாட்கள் வரை அப்படியே வைத்து விடுங்கள். 4 நாட்கள் கழித்து இந்த தண்ணீரை வடிகட்டி செம்பருத்தி செடிக்கு15 நாட்களுக்கு ஒருமுறை கொடுத்து வந்தால் செம்பருத்தி செடி அதிகமாக பூக்க தொடங்கும்.இவ்வாறு செய்து வருவதன் மூலம் பூக்காத செம்பருத்தி செடியிலும் அதிக மொட்டுகள் வைத்து பூக்க தொடங்கும்..
கத்தரிக்காய் செடி வைத்த45 நாட்களில் பூக்கள் வைக்க தொடங்கும் இந்த பூக்களைஉதிராமல்காய்களாகமாற்றஇந்நேரத்தில்அமிலத்தன்மை நிறைந்த கரைசலை கொடுக்க வேண்டும்.புளித்த மோருடன் தேங்காய் பால் கலந்து கத்தரிக்காய் செடியின் மீது தெளிக்க வேண்டும். கரைசலாககத்தரிக்காய் செடியின் மீது தெளிக்க வேண்டும்தேமோர் கரைசல், மீன் அமினோ அமிலம், மோர் பெருங்காயத்தூள் கரைசல் என உங்களிடம் எந்த கரைசல் உள்ளதோ அதனை தெளிக்கலாம்.இவ்வாறு நீங்கள் கத்தரிக்காய் செடி பூக்கள் பூக்கும் நேரத்தில் தெளிப்பதன் மூலம் பூத்த பூக்கள் அனைத்தையும் காய்களாக மாற்றலாம்., காய்கறி கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீரை அதன் வேர்பகுதிகளில் ஊற்றி வேண்டும்.மண்புழு உரத்தினை அதன் வேர்பகுதிக்கு மேல் போட்டு கிளறி விடுவதன் மூலம் கத்தரிக்காய் செடி செழித்து வளரும்.கத்தரிக்காய் பெரியதாகவும் பூச்சி இல்லாமலும் வளர கடலை புண்ணாக்கு மற்றும் வேப்ப புண்ணாக்கு கலந்த கரைசலை கொடுக்க வேண்டும்முதலில் 5% கடலை புண்ணாக்கு மற்றும்25% வேப்பம் புண்ணாக்கை எடுத்து கொள்ளுங்கள் இதனை ஒரு வாளியில் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளுங்கள்.இது நன்கு ஊறிய பிறகு இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல் கரைத்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் செடியில் புழுக்கள், எறும்புகள் போன்றவை வராமல் இருக்கும்
தமிழர்களின்பாரம்பரியஉணவுமுறைகளில்பயன்படுத்தப்படும்காய்கனிகளில் பூசணி வகைகளுக்கு தனியிடம் உண்டு. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளிலும் ஹோட்டல்கள் போன்ற அதிகளவில் உணவுதயாரிக்கும் இடங்களில் பூசணிவகைகளைப் புறந்தள்ள முடியாது.சாம்பல்பூசணியில் கோ 1, கோ 2 ஆகிய ரகங்கள்உள்ளன.நல்லஆழமான இருமண்பாட்டு நிலத்தில்சாம்பல் பூசணி நன்குவளரும்.மானாவாரியில்பயிரிட களிமண் கலந்தநிலம் சிறந்தது.சாம்பல்பூசணியின் வளர்ச்சிக்குஅதிக குளிரில்லாத, ஓரளவுவெப்பமான பருவநிலைமிகவும் உகந்தது.சிறந்தமகசூலுக்கு காரஅமிலத் தன்மை 6.5 – 7.5 இருத்தல் வேண்டும்.ஜனவரி, ஜூலை மாதங்களில் விதைக்கலாம்.விதையளவு:ஹெக்டேருக்கு 2.5 கிலோ விதைகள் தேவை.விதைக்கும்முன்னர் கிலோ விதைக்கு 2 லிட்டர் தண்ணீர் என்றவிகிதத்தில் அரைமணிநேரம் ஊறவைத்து, 6 நாள்கள்வைத்திருந்து பிறகுவிதைக்க வேண்டும்.நிலத்தை 3 முதல் 4 முறை நன்குஉழுத பின்னர் 2 மீட்டர்இடைவெளியில் 60 செ.மீ. அகலமுள்ள நீண்டவாய்க்கால்கள் அமைக்கவேண்டும்.இந்தவாய்க்கால்களை ஒட்டி 1.5 மீட்டர் இடைவெளியில் 30 செ.மீ. நீள, அகல, ஆழக் குழி பறிக்கவேண்டும்.2 x 1.5 மீட்டர் (வரிசைக்கு வரிசை 2 மீட்டர் செடிக்குச் செடி 1.5 மீட்டர்) இடைவெளி விட்டுவிதைக்க வேண்டும்.குழிக்கு 3 – 6 விதைகள் நட்டு, முளைத்தவுடன் 3 செடிகளை மட்டும் வைத்துவிட்டுமற்றவற்றை நீக்கவேண்டும்.குழிஒன்றுக்கு 10 கிலோதொழு எரு மற்றும்கலப்பு உரம் (6:12:12) தழை: மணி: சாம்பல்சத்து), 100 கிராம் இட்டுநீர் பாய்ச்ச வேண்டும். 30 நாள்களுக்கு பின்புகுழிக்கு 10 கிராம்யூரியா என்ற அளவில்மேலுரம் இடவேண்டும்.இப்கோகாம்ப்ளக்ஸ், யூரியாபோன்ற உரங்களை வேளாண்துறையினரின் ஆலோசனைப்படிபயன்படுத்தலாம்.நீர் நிர்வாகம்:பூசணிவிதைகளை விதைக்கும் முன்குழிகளுக்கு நீர்பாய்ச்ச வேண்டும்.விதைத்தஅடுத்த நாள் கண்டிப்பாகநீருற்ற வேண்டும்.பிறகு 3-ம் நாள் உயிர்த்தண்ணீர் ஊற்ற வேண்டும்.முளைப்புத்திறன் வந்தவுடன் வாய்க்கால்களின் மூலம் வாரம்ஒருமுறை நீர் பாய்ச்சவேண்டும்.பின்செய்நேர்த்தி:செடிகளைச்சுற்றி 15 நாள்களுக்கு ஒருமுறைகளைக்கொத்தியால் களையெடுக்கவேண்டும்.கொடிகளைவாய்க்காலில் படரவிடாமல்அவ்வப்போது எடுத்துஇரண்டு வாய்க்கால்களுக்கு இடைப்பட்டநிலப்பரப்பில் படரச்செய்ய வேண்டும்.விளைச்சல்அதிகரிக்க விதைத்த 15 ஆம் நாளில் 10 லிட்டர்நீருக்கு 2.5 மில்லிஎன்ற அளவில் எதிரில்என்னும் வளர்ச்சி ஊக்கியைநான்குமுறை ஒருவார இடைவெளியில் தெளிக்கவேண்டும்.இதனால்கொடிகளில் பெண்பூக்கள் அதிகம் தோன்றி, அதிகக் காய்கள் பிடித்துவிளைச்சல் அதிகரிக்கும்.பயிர்ப் பாதுகாப்பு:பூசணியில்வண்டுகளின் தாக்குதலைக்கட்டுப்படுத்த மாலத்தியான் 1 மில்லி அல்லது டைமெத்தோயேட்ட 1 மில்லி அல்லது மீதைல்டெமட்டான் 1 மில்லிமருந்து இவற்றுள் ஏதேனும்ஒன்றுடன் 1 லிட்டர்தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.பழஈக்களைக் கட்டுப்படுத்தமாலத்தியான் 1 மில்லிமருந்தை 1 லிட்டர் நீரில்கலந்து தெளிக்க வேண்டும்.பழஈ தாக்கப்பட்ட பழங்களைச்சேகரித்து அழிக்கவேண்டும். பழ ஈக்களின் தாக்குதல்கோடைக்காலத்தில் குறைவாகவும், மழைக்காலங்களில் அதிகமாகவும்காணப்படும். எனவேஇதை அனுசரித்து பயிரிடவேண்டும்.எக்காரணத்தைக்கொண்டும், டிடிசி, பிஎச்சி, கந்தகம், தாமிரத்தைக்கொண்ட பூச்சி, பூசணக்கொல்லிமருந்துகளைத் தெளிக்கக்கூடாது.இது, கொடிக்கு ஆபத்தைவிளைவிக்கும். சாம்பல்நோயைக்கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1 சதம் மருந்தைத் தெளிக்கவேண்டும்.அறுவடை:காய்கள்முற்றிய நிலையை அவற்றின்மேல் பரப்பில் உருவாகும்சாம்பல்போன்ற பொருள்உதிரத் தொடங்குவதிலிருந்து கண்டுபிடிக்கலாம்.விதைத்த 90ஆம் நாளிலிருந்து காய்களைஅறுவடை செய்யலாம்.சாதாரண வெப்ப நிலையில்காய்களை நல்ல காற்றோட்டமானஅறைகளில் ஒன்றின்மேல்ஒன்றாக அடுக்காமல் இடைவெளியிட்டுசேமிப்பதன் மூலம் 4முதல் 5 மாதங்கள்வரை பாதுகாக்கலாம்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை பட்டத்தில் மானாவாரி பயிராக கோ.4,மார்டன் ஆகியசூரியகாந்தி இரகங்களும் வீரியஒட்டு இரகங்களில் கே.பி.எஸ். எச்.1, கே.பி.எஸ்.எச்.44, டி.சி.எஸ்.எச்.1 ஆகியவை சூரியகாந்தி இரகங்களும் ஏற்றவை.மார்கழி பட்டத்தில் இறவைப் பயிராக பயிரிட கோ.4, மார்டன் ஆகிய இரகங்களும் வீரிய ஒட்டு இரகங்களில் கே.பி.எஸ்.எச்.1, கே.பி.எஸ்.எச்.44, எம்.எஸ்.எப். எச்.17 ஆகியவை ஏற்றவை.விதையளவு : கிலோ / ஹெக்டேர்.இரகங்கள் – மானாவாரி 7, இறவை 6வீரியஒட்டு இரகங்கள் – மானாவாரி 5, இறவை 4விதை நேர்த்திஒருகிலோ விதைக்கு2 கிராம்கார்பன்டைசிம் அல்லது4 கிராம் டிரைகோடெர்மா விரிடிகொண்டு பூஞ்சாண விதைநேர்த்தி செய்யவும்.விதைப்பதற்குமுன் ஒரு ஹெக்டேருக்கானவிதைகளை 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம்மற்றும் 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா கொண்டுவிதை நேர்த்தி செய்து 15 நிமிடங்கள் நிழலில்உலர வைத்து விதைக்கவும்.விதைப்புஒருகுழிக்கு இரண்டுவிதை என்ற அளவில்3 செ.மீ. ஆழத்தில்பாரின் பக்கவாட்டில் விதைக்கவும்.பின்பு10ஆம் நாள் செழிப்பாகஉள்ள ஒரு செடியைநிறுத்தி, மற்றதை களைத்துவிடவும்.பயிர்இடைவெளி: வீரிய ஒட்டுஇரகங்கள் – 60 செ.மீ. x 30 செ.மீ., இரகங்கள் – 45 செ.மீ. x 30 செ.மீ.களை நிர்வாகம்ப்ளுக்குளோரலின் விதைத்த5 ஆம்நாள் அல்லது பென்டிமெத்தலின் விதைத்த3 ஆம்நாள்2 லிட்டர்/ ஹெக்டேருக்குதெளித்தபின் நீர்பாய்ச்சுதல்வேண்டும்.களைக்கொல்லிஇட்டபின் 30-35 ஆம்நாளில் ஒரு கைகளை எடுக்க வேண்டும். களைக்கொல்லி பயன்படுத்தாதநிலையில் விதைத்த 15 மற்றும் 30 ஆம் நாள்கை களை எடுக்கவேண்டும்.உர நிர்வாகம்ஹெக்டேருக்கு 12.5 டன் தொழு உரம்அடியுழவில் இடவும்.இரசாயனஉரங்களில் வீரியஒட்டு இரகங்களுக்கு இறவையில்ஹெக்டேருக்கு 60:90:60 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும் மானாவாரியில் ஹெக்டேருக்கு40:50:40 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும் இடவும்.இரகங்களுக்குஇறவையில் ஹெக்டேருக்கு60:30:30 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும், மானாவாரியில் ஹெக்டேருக்கு40:50:40 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும் இடவும்.உயிர் உரம் இடுதல்ஹெக்டேருக்கு 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம்மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியாவை 25 கிலோதொழு உரம் மற்றும் 25 கிலோ மணலுடன் கலந்துவிதைக்கு முன்இடவும்.நுண்ணூட்ட உரம் இடுதல்எக்டேருக்கு 12.5 கிலோ சூரியகாந்தி நுண்ணூட்ட உரக் கலவையை 40 கிலோமணலுடன் கலந்து விதைப்பதற்குமுன் சாலில் இடவும்.மணிகள் பிடிக்க பின்பற்ற வேண்டிய உத்திகள்இடைக்காலபூக்கும் பருவத்தில்மகரந்த சேர்க்கைக்காக காலை9.00 மணி முதல்11.00 மணிக்குள்கையில் மெல்லிய துணிகொண்டு பூவின் மேல்பாகத்தைஇரண்டு நாட்களுக்கு ஒருமுறைமெதுவாக ஒவ்வொரு பூக்கொண்டையும்தேய்க்க வேண்டும்.எட்டிலிருந்துபத்து நாட்களுக்கு ஐந்துமுறை இவ்வாறு செய்யவேண்டும். அல்லதுஅருகருகே உள்ளபூக்கொண்டைகளை ஒன்றோடுஒன்று முகம் சேர்த்துஇலேசாக தேய்க்க வேண்டும்.ஹெக்டேருக்கு,5 தேனிப்பெட்டி வைப்பதால் மகரந்த சேர்க்கை ஏற்பட்டுவிதை பிடிப்பு அதிகரிக்கும். கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் ரோஜா பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூத்து குலுங்க ஒரே ஒரு கிளாஸ் இதை ஊற்றுங்க போதும்..தேவையான பொருட்கள்:1. எப்சம் சால்ட் - 2 டேபிள் ஸ்பூன்2. சோயா பீன்ஸ் - 43.மஞ்சள்தூள் - 1 டேபிள் ஸ்பூன்4 தண்ணீர்-1கிளாஸ்10 நாளில் பூக்காத ரோஜா செடியினையும் பூக்க வைப்பதற்கு இந்த டிப்ஸ்ட்ரை பண்ணுங்கசெய்முறை:-ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் 4 சோயா பீன்ஸையும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நாம் எடுத்து வைத்துள்ள 1 கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.பிறகு அதனுடன் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் எப்சம் சால்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.இதனை வாரத்திற்கு ஒரு நாள் என தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் ரோஜா செடியில் அதிக பூக்கள் பூக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.ரோஜாச்செடியில் அதிக பூக்கள் பூத்து குலுங்க: தேவையான பொருட்கள்:தண்ணீர் - 1/2 லிட்டர் வாழைப்பழம் தோல் - 3 காபி தூள் - 1 ஸ்பூன் டீ தூள் - 3 ஸ்பூன் தயிர் - 1/2 கப்செய்முறை-:1/2 லிட்டர் தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும்.தண்ணீர் நன்றாக கொதித்ததும், அதில் வாழைப்பழ தோல்களை சிறிதாக நறுக்கி போடவும்.வாழப்பழ தோல் நன்றாக வேகும் வரை கொதிக்கவிடவும் அதனுடன் எடுத்துவைத்துள்ள காபி தூள் மற்றும் டீ தூள்களை சேர்த்துக்கொள்ளவும்.நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை அனைத்து விட்டு கலவையை ஆற விடவும்பின்பு கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது, அதனுடன் தயிரை கலக்கவும்..தயிரை கலந்த பின்னர் அந்த பாத்திரத்தில் இருந்து ஆவி வெளியே செல்லாதவாறு நன்றாக 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.24 மணி நேரத்திற்கு பிறகு இதனை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும். பின்னர் இந்த கலவையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரத்திற்கு ஒரு முறை உங்களது ரோஸ் செடிக்கு தெளிப்பதால் உங்கள் செடிகளில் அதிகம் பூக்கள் பூக்கும்.