25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உலக பாரா தடகள வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவுக்கு இம்முறை 6 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என, மொத்தம் 22 பதக்கம் கிடைத்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக பாரா தடகள வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவுக்கு இம்முறை 6 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என, மொத்தம் 22 பதக்கம் கிடைத்தது.

மாற்றுத்திறனாளி களுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் டில்லியில்,  பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் ('டி12') பைனலில், பந்தய துாரத்தை 24.46 வினாடியில்கடந்த இந்தியாவின் சிம்ரன் சம்ரா, வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இம்முறை இவர் கைப்பற்றிய 2வது பதக்கம். இவர், 100 மீ., ஓட்டத்தில் ('டி12') தங்கம் வென்றிருந்தார்.

 இந்தியாவின் பிரீத்தி பால்  பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் ('டி35') பைனலில் இலக்கை 14.33 வினாடியில் கடந்தவெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.இம்முறை 200 மீ., ஓட்டத்தில் ('டி35') வெண்கலம் வென்ற இவர், உலக தடகளத்தில் தனது 4வது பதக்கத்தை பெற்றார்

 இந்தியாவின் நவ்தீப் சிங், ஆண்களுக்கானஈட்டி எறிதல் ('எப்41') பைனலில், அதிகபட்சமாக 45.46 மீ., எறிந்து வெள்ளி வென்றார். இது, உலக தடகளத்தில் இவரது 2வது பதக்கம் ஆனது.. 

இந்தியாவின் சந்தீப் ஆண்களுக்கான 400 மீ.,  ஓட்டத்தின் ('டி44') பைனலில், இலக்கை 23.60 வினாடியில் கடந்து வெண்கலம் வென்றார்.

உலக பாரா தடகளம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தியாவுக்கு இம்முறை 6 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என, மொத்தம் 22 பதக்கம் கிடைத்தது. உலக பாரா தடகள வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவுக்கு 20 பதக்கங்களுக்கு மேல் கிடைத்துள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News