25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


முதல் பக்க கட்டுரை

Aug 01, 2025

ஒன்றே குலம் ஒருவனே தேவன் .

நாம் எந்த மண்ணில் பிறக்கிறோமோ ,அந்த சூழ்நிலைக்கும், பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு நடத்தும் மதத்துடனும், கலாச்சாரத்துடனும் ஒன்றுபட்டு ஏற்றுக்கொண்டு வாழ்கின்றோம்."நாம் நம்முடைய பண்பு, கலாச்சாரங்கள், உணவுப்பழக்கங்கள் தான் மிக உயர்ந்தது என்றும், சரியானது என்றும் நினைக்கிறோம். இதுதான் சரி மற்ற மதங்கள் மற்றவர்களுடைய கருத்துக்கள் இவற்றை ஏளனமாகவும், அலட்சியமாகவும் எடைபோடுகின்றோம். இதிலிருந்தே தெரிகின்றது. அவரவர்களுடைய மதங்களைப் பற்றி தெளிவாகத் தெரியாமலேயே அலட்சியப்படுத்துகிறோம் என்று.எல்லோரும் ஒன்றுதான். அவர்களுடைய சௌகரியப்படி கோவில், மாஸ்க், சர்ச், புத்த, ஜைன போன்ற வழிபாடுகளில் ஈடுபடுவது அவர்களுடைய சொந்த விஷயம். அதில் தலையிடுவதில் நமக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது. கலாச்சாரம், உணவு, உடை விஷயத்தில் நம்மைப் போலவே இருக்க வேண்டும் என்று சொல்வதும் சரியாக இருக்காது. நாம் அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்தான். நமக்கு ஒரே தெய்வம் தான். அவரவர்களுடைய சூழ்நிலைக்கும் மனநிலைக்கும் ஏற்ப வெவ்வேறு விதங்களில் கடவுளை வழிபடுகின்றனர்.  எந்த முறையில் வழிபாடு செய்தாலும் கடைசியில் நாடுவது, நம்முடைய வயிற்றுப் பசியையும், நம்மையும் காப்பாற்றும் நமக்கும் அப்பாற்பட்ட ஒரு தெய்வசக்தியைத் தான்.ஏரியின் அருகே உள்ளவர்கள் மீனை சைவ உணவாக ஏற்றுக்கொள்கின்றனர். தைவான் நாட்டுக்காரர்கள், சீனர்கள் கடல் பாசத்தையும், பாம்பையும் சுவைபட சாப்பிடுவார்கள். நமக்கு முகம் கோணலாகிறது என்றால் ,அவர்கள் நம்முடைய சாப்பாட்டைக் கண்டு முகத்தை சுழித்துக் கொள்கின்றனர்.பாய்வீட்டுப் பிரியாணி, ஐயர்வீட்டு வெண்பொங்கல், உழவர் வீட்டுக் கூழ், டேவிட் பேக்கரி கேக், செட்டிநாடு வெள்ளையப்பம் இவற்றை சாப்பிடும்பொழுது நம்முடைய நாக்கு ஜாதி, மதம் பார்த்ததுண்டா? வித்தியாசங்களால் பார்ப்பது நம் மனம் தானே !.அவரவர்களுடைய வேலையைச் செய்து  கொண்டு, நமக்கு நம்முடையது, சரியானது, அவர்களுக்கு அவர்களுடையது சரியானது என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்தால் ஜாதிச் சண்டை எங்கே? மதக் கலவரம் எங்கே?நம்மாளுப்பா! என்று அனைவரையும் நினைப்பதே பரந்த மனப்பான்மை. மனிதனுக்கு மனிதன் வேற்றுமை பாராட்டாமல் உதவுவது அன்பானதொரு சமுதாயத்தை உருவாக்கும்.குணா பாஸ்கர் ராஜா, 

Jul 01, 2025

சின்ன விஷயம் .

 சின்னக் குழந்தைகள் சண்டை போடுகின்றனர். ரஜினி, ஜாக்கி, செராப் ஸ்டைலில் சண்டை போடுகிறார்கள். ரசிக்கின்றனர், பல பெரியவர்கள், 'சண்டை போடுகிறான் பாரு', 'சூப்பரா போடுகிறான்' என்று ரசித்து சந்தோஷப் படுகின்றனர். பெற்றோர்கள் ஊக்குவித்ததால் அக்குழந்தை மனதில் பயமின்மையால் அதே சண்டையை பள்ளியில் பெஞ்ச் மீது தாவிக் குதித்து தன் மண்டையை உடைத்துக் கொண்டு 'கோமா' நிலையடைந்து படுக்கையில் இருக்கிறான். சின்ன விஷயந்தானே என்று அலட்சியப் படுத்தியதின் பின் விளைவு எப்படி இருக்குய்யா! காலில் துருப்பிடித்த இரும்புக் கம்பிகுத்திவிட்டது. சின்ன காயம் தானே போகட்டும். துடைச்சி மண்ணை தெளித்து ஒட்டிக்கொள் என்று விட்டு விடுகின்றனர். அந்தக் குழந்தையின் காலில் புரை ஏறி விட்டது. தாங்க முடியாத வலியுடன் டாக்டரிடம் செல்கின்றனர். டாக்டர் பார்க்கிறார். ஏய்யா! நீ படிச்சவன் தானே? புண் வந்து 2 மாசமாக இருக்கு இப்போ சொல்றியே! முன்னமே வர வேண்டியது தானே! இன்னும் ஒரு வாரம் ஆகியிருந்தால் காலையே எடுக்க வேண்டியிருக்கும். 'இப்பவாவது வந்து தொலைஞ்சியே' என்று ஏசும் டாக்டர்களைப் பார்த்திருக்கிறோம். சின்ன விஷயம் தானே என்று அலட்சியப் படுத்தியதின் பின் விளைவுகளைப் பார்த்தீங்களா? எப்பேற்பட்ட விபத்தினைக் கொண்டு வருகிறது. வேறு சில சின்ன விஷயங்கள் எத்தனை நன்மைகளை உண்டாக்குகிறது என்று பார்க்கலாமா? ஆலமரவிதை சின்னதாக ரவை சைஸ்ஸீக்குத் தான் இருக்கும். அதை ஊன்றி வைத்தால் மெதுவாக குச்சி மாதிரி வளர்ந்து சின்ன கிளைவிட்டு அதிலிருந்து மற்றொரு கிளைவிட்டு அப்படி, இப்படி வளர்ந்து விழுதுகளுடன் கூடிய மரமாக மாறி கம்பீரமாக நிற்கிறது. அப்பொழுது கொஞ்சம் சிந்தித்தோமானால் அந்த இத்துணூண்டு விதையை விதைத்து தண்ணீர் விட்டதின் பின்விளைவைப் பார்த்தால் ரெம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். அம்மரங்கள் பறவைகளின் சரணாலயமாகவும், குரங்குகளின் இருப்பிடமாகவும் திகழும். அதைவிட ஒருபடி மேல் சென்று கல்யாணச் சமையலும், கல்யாணமும் அம்மர நிழலில் அமோகமாக நடைபெறுவதை நாம் கண்கூடாக கிராமங்களில் பார்க்கிறோம். அந்தச் சின்ன விதை எத்தனை - பேருக்கு இருப்பிடமாகவும், நிழல் தருவதாகவும் இருக்கிறது. ஒரு பெரியவர் வெளியூருக்குச் செல்ல எந்த பஸ்ஸில் ஏறுவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் 26 வயது மதிக்கத்தக்க வாலிபன் அப்பெரியவரிடம் ஐயா எங்கே போகணும் என்று கேட்டு, அவர் செல்ல வேண்டிய பஸ்ஸில் ஏற்றி பஸ்ஸில் உட்கார வைத்து விட்டு வெளியில் செல்கிறான். அந்த 10 நிமிட உதவி அப்பெரியவருக்கு எவ்வளவோ சந்தோஷத்தைக் - கொடுத்து 'மஹாராசா' 'நீ நல்லாயிருக்கணும்' என்று வாழ்த்துகிறார். அந்தச் சின்ன உதவி (தர்மம்) சொர்க்கத்தை விட மேலானதாகிறது. நன்றாகப் படிக்கும் ஊமைப் பையனுக்கு பெரிய படிப்பு படிப்பதற்கு வசதியில்லை. யாரிடம் கேட்பது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான். ஒருவர் தன்னால் முடியாது என்று தெரிந்தும் தனக்குத் தெரிந்த தனவான்களிடம் எடுத்துரைத்து அக்குழந்தை மேலும் படிப்பைத் தொடர்வதற்கான பண உதவியைச் சேர்த்துக் கொடுக்கிறார். தன்னிடம் இல்லை. இன்னொருத்தரிடம் சொல்வது சின்ன விஷயம் தான். அதனுடைய பின் விளைவு, அச்சிறுவனுக்கு மிகப் பெரிய கல்வி செல்வம் கிடைப்பதற்கு முக்கிய காரண கர்த்தாவாகிறார்.சின்ன விஷயம் தானே என்று அலட்சியப் படுத்தாமல் கவனித்துச் செய்யலாமே!  இதைப்படிப்பது சின்ன விஷயம் தான். ஆனால் எத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கிறது இல்லையா! 

May 31, 2025

தர்ம சிந்தனை

தர்மம் செய்தல் என்பது பணம் இருந்தால்தான் செய்ய முடியும். 1 ஆம் தேதி சம்பளம் வாங்குவதற்குள் 30 ஆம் தேதி வரை சிரமப்பட்டு ஓட்டுகின்ற குடும்பத்தினர் தர்மசிந்தனையாவது தர்மமாவது என்று விட்டு விடுகின்றனர். 'தனக்குப் போகத் தானம் செய் என்பதை கெட்டியாக பிடித்துக் கொள்கின்றனர். இது தவறான எண்ணம் ஆகும்.தர்மம் என்பது பணத்தால்தான் முடியும் என்பதே கிடையாது. மனதால் தான் உள்ளது. எது தர்மம் என்று தெரியாமலே பலர் இருக்கின்றனர். உன் வீட்டின் அருகில் ஒரு தர்மசிந்தனை உள்ளவன் மரக் கன்றுகளை நட்டு வைக்கிறான் அதற்கு நாம் தண்ணீர் ஊற்றினால் அது தர்மம். அவன்தானே வைத்தான் என்று நாம் திருப்பிப் பார்க்காமல் இருப்பது அதர்மம். ஒருமுதியவர் கஷ்டப்பட்டு பாரத்தை சுமந்து சென்று கொண்டிருக்கிறார், அவரைப் பார்த்துக் கொண்டே அதே வழியில் செல்லும் இளைஞன் ,அந்த பாரத்தை அவன் செல்லும் வழி வரையாவது தூக்கினால் அது தர்மம்.என்னதான் உனக்கு கஷ்டம் இருப்பினும் பணத்தால் முடியாவிட்டால் மனதளவில் என்ன முடியுமோ அதைச் செய்தால், அது பெரிய தர்மம். பிறருக்கு உதவும் மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். கணவனை இழந்த பெண் தன் குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறாள் என்றால், அந்த தெருவில் உள்ள அனைவரும் அவளுடைய ஜீவனத்திற்கு தங்களால் ஆன பல உதவிகளைச் செய்தால், அந்த நன்றி கலந்த பார்வையினால்  ஏற்படும்  திருப்திக்கு ஆயிரம் கோடி கொட்டிக் கொடுக்கலாம். பிரதி பலன்களை எதிர்பார்க்காமல் உதவ வேண்டும் என்ற தர்மசிந்தனைகளை நம்மிடம் கூடக்கூட நம்முடைய ஆத்மா சுத்தமடைகின்றது. ஆத்மா சுத்தமடைய அடைய உங்களுடைய எண்ணங்களும் நல்ல எண்ணங்களாக பிரகாசிக்கும். பகைவனாக இருந்தாலும் தர்மம் செய்தால் நாமும் பகைமை மறந்து விடுவோம். அவர்களும் நம்மிடம் அபரிதமான பாசக்கரம் நீட்டுவார்கள். கெடுதல் செய்தவர் நம்மைப் பார்த்து உங்களுக்கு நான் தீமை செய்தேனே என்று வெட்கப்படும் அளவிற்கு நன்மை செய்ய வேண்டும். தர்மத்தை ஜாதி, மதம், பேதம், நேரம், குணம், தரம் என்று பார்க்காமல் செய்வது தெய்வ சேவைக்கு சமமானது. 

Apr 30, 2025

சமுதாயம் முன்னேறுகின்றதா?

நாம் எங்கே செல்கிறோம் என்று தெரியாமலே பல விஷயங்களில் முன்னேறுவதும் ,பின்தங்குவதும் சகஜமாகிவிட்டது. முன்பைவிட இப்பொழுது எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம் என்று கூறினாலும் எப்படி? என்ற கேள்வி எழுகின்றது. விஞ்ஞான முன்னேற்றம் ஒரு பக்கம் இருந்தாலும் மனிதனுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன முன்னேற்றம். முன்பு 200ரூ சம்பளத்தில் சுபிட்சமாக வாழ்க்கை நடத்தி மிச்சம் வைத்து சந்தோஷித்த ,அதே மக்கள் இன்று 20,000 ரூபாய் கிடைத்தாலும் ஏதோ ஒன்று குறைகின்றது என்று தான் கூறுகின்றார்கள்.சாதாரணமாகஒருவீடுஎன்றுஎடுத்துக்கொள்வோம்.இன்றையதேவைகள்? முதலில்கரண்ட், பேன், ரேடியோ, பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, டி.வி. ஏ.சி., டெக், மைக்ரோ வேவ் ஓவன், சைக்கிள், ஸ்கூட்டர், கார் ஒரு காரல்ல 2 கார், சொகுசான மாளிகை, பாரின் டூர் இப்படி அடுக்கிக் கொண்டே செல்கிறோம். இதெல்லாம் இருப்பினும் புதிய வரவு செல்போன், ஹோம் தியேட்டர் என்று ஆரம்பித்து இளைய சமுதாயத்தினர் வீட்டிற்கு உள்ளே வரும்பொழுது கேட் திறக்க ஆளில்லை என்று ஆட்டோமேட்டிக்காக திறக்கும் வசதியை வெளிநாடுகளைப்போல நாமும் ரிமோட் வைத்துத் திறக்க வேண்டும்  என்று அசை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வசதிகளெல்லாம் நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்தத்தானே? புதிய வரவுகளால் கிடைக்கும் நேர மிச்சத்தை நாம் உழைத்து முன்னேற உபயோகப்படுத்த வேண்டும். விஞ்ஞான முன்னேற்றத்தின் வசதிகளையெல்லாம் சுலபத்தவணைகளில் வாங்கி ( EMI ) அதனால் கிடைக்கும் நேர மிச்சத்தை என்ன செய்கின்றனர்.  இளைஞர்கள்,  பெண்கள்  தங்களது கடமைகளை மறந்து லேட்டஸ்ட் சினிமா, பல விதமான ஹோட்டல் சாப்பாடுகளை சாப்பிடுவது, பிரண்ட்ஷிப் வட்டாரங்களை பெருக்குவதாகக் கூறிக் கொண்டு கிளப், பார்ட்டி, என்று அலைகின்றனர். இவர்கள் இப்படி என்றால் பெரியவர்கள்  செல்போன்,  டி.வி., என்ற போதை வஸ்துவிற்கு அடிமையாகிவிட்டனர். டி.வி. என்பது பொழுது போக்கிற்கான நிகழ்ச்சிதான். அதை முழு நேர தொழிலாக மிச்சமாகும் நேரத்தை வீணாக்கி, சமுதாயப் பேரழிவிற்கு வழிவகுக்கின்றனர்.  நம்முடைய டென்ஷனைக் குறைக்க நாம் டி.வி, செல்போனை பொழுது போக்காக எடுத்துக் கொண்டாலும் ,அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றவற்றை விட்டு விட வேண்டும். இளைஞர்களிலிருந்து முதியோர் வரை சுண்டி இழுக்கும், கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பை ரெம்பவே குறைக்க வேண்டும். இவற்றில் காண்பிக்கப்படும் வன்முறை, வக்கிரம், தீவிரவாதம் போன்றவற்றின் கொடூரமான பாதிப்பை மக்கள் அறிய முடிகின்றது.. உலகத்தில் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. அந்தக் காலத்தில் யசோதை கிருஷ்ண பரமாத்மாவின் வாயில் உலகத்தை அப்படியே பார்த்த மாதிரி நம் எல்லோர் வீட்டிலும் டி.வி. பெட்டியில் உலக நிகழ்ச்சி அனைத்தையும் பார்க்கிறோம். கிருஷ்ணர் எப்படி தீயசக்தியை அழித்தும், நியாயத்தை நிலைநாட்டியும் வாழ்ந்து காட்டினார். சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால் குடும்ப ஓற்றுமை, கலாச்சார பண்பு, அன்பு மட்டும் போதாது.நேரத்தை முறையாகப் பயன்படுத்துவது நம்முடைய முன்னேற்றத்தில் 50% பங்கு கொள்கின்றது. அதனால் இயந்திர கதியில் எந்த நேரமும் ,நேரத்தை -வீணாக்காமல் வேலை, வேலை என்றால் என்ன ஆகும்? மன நிம்மதியும் பாதிக்கப்படும். எந்த ஒரு செயலையும் காலம், இடம், நேரம்  அறிந்து  நம் சமுதாயத்தை நாம் முன்னேற்ற மடையச் செய்ய வேண்டும். 

Mar 31, 2025

குடும்பம் ஒரு கோவில் .

ஒரு குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு வீட்டில் உள்ள ஒவ்வொருவருடைய நடவடிக்கையும், சரியான அளவில் இருக்க வேண்டும். முக்கியமாகவிட்டுக்கொடுத்துச்செல்லவேண்டும்.குடும்பத்தில்உள்ளமாமனார், மாமியார், தாய்,தந்தை, மகன், மகள், மருமகன், மருமகள், சகோதர, சகோதரிகள் தனக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதற்குத் தகுந்தாற் போல் நடந்து கொள்ள வேண்டும். வரம்பு மீறும் பொழுதுதான் பிரச்சனை ஏற்படுகின்றது.மாமியார் தான் மருமகளாக இருக்கும்பொழுது ,நம் மாமியார் இப்படி நடந்து கொண்டால் நன்றாக இருக்குமே ,என்று நினைத்ததை தன் மருமகளிடம் காண்பிக்க வேண்டும். அதைத் தவிர்த்து தான் பட்ட கஷ்டத்தைப் போல மருமகளும் படட்டும் என்று நினைப்பது கூடாது. மருமகள் நாமும் ஒரு நாள் மாமியாராப் போகிறோம் என்று நினைவில் வைத்துக் கொண்டு ,நம் மருமகள் தவறாக நடந்து கொண்டால் கஷ்டம்தானே! நாத்தானாரும் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்குச் சென்றால்.....என்று பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.. குடும்ப உறுப்பினர்களிடையே ஒருவருக்கொருவர், பொருளாதார நிலைமையைச் சுட்டிக் காட்டி சுடு சொற்களாகவும், மரியாதை குறைவாக நடந்து கொண்டால் காலப்போக்கில் பொருளாதாரத்திற்காக நம்மால் அவமதிக்கப்பட்டவர்கள் செல்வத்திலும், செழிப்பிலும் நம்மைவிட மிஞ்சும் நேரம் வரும். ஆனால் நம்மால் செய்யப்பட்ட அவமானம் ஒருகாலும் மறையவே மறையாது.நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றால், குடும்பத்து அங்கத்தினர்களின் எல்லோருடைய நிலைமையிலும், நாம் இருப்பதாக பாவித்துக் கொண்டு ,எந்த ஒரு வார்த்தையையும் ,அவசரகதியில் கொட்டிவிடாமல் யோசித்து, அவரவர்கள் இருக்க வேண்டிய இடத்தில், வரம்பை மீறாமல் நடந்து கொண்டால் குடும்பம் ஒரு கோவில்தான். இல்லாவிட்டால் தறி கெட்டு ஓடும் ரேஸ் குதிரையைப் போல், நம் குடும்ப கெளரவம் பறைசாற்றப்படும். குடும்பம் என்ற கோவிலை காப்பாற்றும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. 

Feb 28, 2025

காற்றுக்கென்னவேலி

இவ்வுலகில் நாம் காணும் அனைத்துப் பொருள்களும், உயிர், உயிரற்ற எல்லாமே பஞ்ச பூதங்களால் ஆனவையே. பஞ்ச பூதங்கள் என்றால் பேய், பிசாசு, முனிஎன்றுபலர்தவறாகநினைத்துக்கொண்டிருக்கின்றனர்.ஆகாயம், காற்று, நீர்,நெருப்பு, பூமி, இவை ஐந்தும் பஞ்சபூதங்கள்.இந்தபஞ்சபூதங்கள்யாரையும்வித்தியாசம்பார்ப்பதில்லை.எல்லாவற்றிற்கும் தன் குணத்தைக் காட்டிக் கொண்டே செல்கின்றது.காற்று தென்றலாக வீசும் பொழுது பணக்காரனுக்கு மட்டும் வீசி விட்டு மற்றவர்களை விட்டு விடுமோ? அதற்கு ஏழை, பணக்காரன், நண்பன், விரோதி என்ற பாகுபாடே கிடையாதே. புயல்காற்று அடிக்கும் போதும் சமமாகத்தான் அனைத்தையும் அழிக்கும். காற்று தன் கடமையைச்‘’சிவனே’ என்று கறாராகச் செய்கிறது. எல்லா பஞ்சபூதங்களின் வேலையும் அது தானே! ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் மனித மனங்களுக்கு மாத்திரம் தான். ஏற்றத்தையும், தாழ்வையும் தன்னாலே உண்டு பண்ணி ,அதற்குண்டான துக்கத்தை அனுபவித்துக் கொண்டு ‘நிம்மதியே இல்லை’ என்று அலைகிறோம். வசதி படைத்தவர்களுக்கு ஒரு மரியாதை கொடுக்கின்றனர். ஏழைகளை அலட்சியப்படுத்துகின்றனர். இந்த பாகுபாடு பகுத்தறியும் ஆற்றல் உடைய நமக்கு, ஏன்? இந்த கீழ்த்தரமான குணம்.பஞ்ச பூதங்களின் இணைப்பினால் ஆன நமக்கு அதனுடைய மேலான குணம் இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன? சுயநலம் தான். நான், எனது என்ற கர்வம், புகழ் மயக்கம் ஆகிய மனித குணங்கள், நம்மை மிருகங்களாக்கி விடுகின்றன.மனிதர்களாகிய நாம் அன்புடன் நம்மைச் சுற்றியுள்ள அனைவரிடமும்தென்றல்காற்றாகவும், கண் எதிரே அநியாயங்கள் நடக்கும் பொழுது அதை அழிக்கும் புயலாகவும் மாறலாம்.துரோபதியை அவமானப்படுத்தும் பொழுது நடுச்சபையில் பீஷ்மர், திருதராஷ்டினர்,துரோணர்,யாருமே தட்டிக் கேட்காமல் இருக்கப்போய்தான் குருஷேத்திரப் போர் முண்டது. முளையிலேயே கிள்ளி எறிந்தால் இந்தப்போர் வந்திருக்காதல்லவா?மனிதாபிமானத்துடன் தட்டிக் கேட்கவேண்டும். வன்முறையில் அல்ல!' 

Jan 31, 2025

'மரமண்டை மனிதா'

நாம் வணங்கும் கடவுளை நாம் பார்க்க முடியாது. அளவிட முடியாத சக்தியாக எங்கும் நிறைந்திருக்கிறார் கடவுள். கண்கூடாக பார்க்கும் கடவுள் சூரியன். அதே போல் முற்காலத்தில் உருவ வழிபாடு இல்லாமல் முன்னோர்கள் எல்லாம் மரம், நீர், காற்று, மழை, நிலம், பசு இவைகளை தெய்வமாக வணங்கி வந்தனர். தன் நலமற்ற மரம் நமக்குக் கொடுக்கும்  பொருள்களை  அளவிடமுடியாது. உதாரணத்திற்கு தென்னை மரம் எடுத்துக் கொள்வோம். இம்மரத்தின் தென்னஞ்சருகு கிடுகு மேய, ஓலை பல் தேய்க்க, பூ திருமண வீட்டில் மங்களகரமாகவும், தேங்காய், மட்டை, இளநீர் ஏன் தான் காய்ந்து போனாலும் குடிசை வீட்டிற்கு நிலையாகவும், அதுவும் ரொம்ப நாள் ஆகிவிட்டால் எரிக்க என்று தான் அழிந்து போகும்வரை தன்னை தியாகம் செய்து கொண்டே இருக்கின்றது.காட்டுப்பாதையில் மனிதர்கள் நடமாட்டம்  “மரங்கள் ஜாக்கிரதை “. என்ற அளவிற்கு மரங்களை மனிதர்கள் சூரையாடுகின்றனர் . மரங்கள் அழுகின்றன, தன்னை வெட்டுவதை நினைத்து அல்ல, எதிர்கால சந்ததிகளை நினைத்து.சந்தனமரத்தை வெட்டி சாய்த்தாலும் துக்கப்பட்டு மணம் வீசாமல் இருப்பதில்லை. அடர்ந்த காடுகள் நிறைந்த நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு இயற்கை வளம் மிகுந்து இருந்தது. சுதந்திரம் வாங்கிய பின்பு மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற இல்லாமல் சிந்தனையே காடுகளின் செல்வங்களை பணத்திற்காக சூறையாடிவிட்டனர். மரம் இல்லையேல் 'மழையில்லை' என்பதை நீண்ட இடைவெளிக்குப் பின் உண்மையிலியே  உணர்ந்த பின்புதான்  மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்பட்டுள்ளது. பல வருடங்களாக மரம் வெட்டுவதை எதிர்க்கும் 'மண்டல்'  கிராமத்தைச் சேர்ந்த மக்கள் 'சிப்கோ' (தழுவிக்கொள்) என்ற அமைப்பை 1973ம் ஆண்டு ஏற்படுத்தி உள்ளனர். மரங்களை வெட்ட யார் வந்தாலும் மரத்தைத் தழுவிக் கொண்டு யாரும் விடுவதில்லை. வெட்ட வருபவர்களும் திகைத்துப்போய் திரும்பிச் சென்றதால் கிட்டத்தட்ட 1 லட்சம் மரங்களை இவர்கள் பாதுகாத்துள்ளனர்." நாம் இப்படி செய்யாமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்படுவதைவிட இனிமேலாவது திருமணநாள், பிறந்த நாள், பண்டிகை நாட்கள் முன்னோர்கள் திதிநாட்கள் ஆகிய நாட்களில் மரங்களை மலைகளிலோ, ஊரிலோ, காடுகளிலோ வைத்து மரம் நிறைந்த பொன் விளையும் பூமியாக நம் ஊரை நாம் மாற்ற அனைவரும் ஒன்று சேரலாமே! தன்னலமற்ற தியாகிகளான மரங்களை - கடவுளாகப் போற்றி வணங்காவிட்டாலும், அதை மதித்து மரியாதை செய்யலாமே! இனிமேல் யாராவது மரமண்டை என்றால் வருத்தப்படக்கூடாது. நம்மை பிறர் நலனில் அக்கறை கொண்ட மரத்திற்கு ஒப்பிடுகின்றார்களே என்று சந்தோஷம்தான் படவேண்டும்.

Dec 31, 2024

இன்பமயமான புது வருடப் பிறப்பில் நல்லதொரு சமுதாயம் உருவாக உறுதி கொள்வோம்

HAPPY NEW NEAR' என்று வாழ்த்துவதும், கூவுவதும் மட்டும் போதுமோ ? நம்முடைய கலாச்சாரம். பண்பாடுகள் எங்கே சென்று கொண்டு இருக்கிறது. பார்த்தால் பயங்கரமாக, இளம் வாரிசுகள் அன்பிற்காக ஏங்கி, அன்பு என்றால் என்ன ? என்ற கேள்விக்கு பதில் தெரியாத இளம் தலைமுறையினர் உருவாகின்றனர்.பயங்கரவாதம் எங்கே உருவாகிறது. அன்போ, கருணையோ இல்லாத ஒரு சமூகம் தான் இந்த சமுதாயம் உருவாக நாமும் ஒரு காரணமாகிறோம். எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே தான் அன்றாட வாழ்க்கையும் போய்க் கொண்டிருக்கிறது. ரோட்டில் நடக்கும்போது, ட்ரைவிங் செய்யும் போது 2 வீலரில் செல்லும் பொழுது, சமைக்கும் பொழுது, தூங்கும் பொழுது, குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பொழுது. கல்யாண வீட்டிலோ, துக்க வீட்டிலோ எல்லோரும் சேரும் பொழுது செல்போன் தான். செல்போன் என்னும் போதை நம்மை சிறிது சிறிதாக விழுங்கிக் கொண்டிருக்கிறது. செல்போன் அவசியம் தான். தேவையானதற்கு மட்டும் தான் .அதே உலகமாக மாறும் பொழுது மனநலம். உடல்நலம் நம் குழந்தைகளின் எதிர்காலம் எல்லாமே பாதிக்கப்படுகிறது.நம் குழந்தைகள் நம் எதிர்கால இந்தியாவை, பாதுகாக்கும் சொத்துக்கள் அந்த சொத்தானது, செல்போனால் செத்து மடிவது, நாட்டில் பயங்கரதவாதத்தை உருவாக்கும் என்பதில் எள்ளளவு கூட சந்தேகமில்லை. நம் குழந்தைகளிடம் தினமும் அரை மணி நேரமாவது பேச வேண்டும்.நம் குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும். எப்படி நம் வீட்டிற்கு வரும் உறவினர்களை வரவேற்க வேண்டும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை .எது கிடைத்தாலும் பகிர்ந்து சாப்பிடுவது. கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் மனப்பான்மை .அன்றாடம் சிறிது நேரம் நம்மைக் காக்கும் கடவுளுக்கு நன்றிதெரிவிக்கும் வகையில், நம்மை மிஞ்சிய காணமுடியாத சக்திக்கு நன்றிகூறும் பழக்கம்,ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு பார்ப்பதை தவிர்ப்பது ,அனைவரையும் சமமாக பாவிப்பது, நம் வீட்டில் வேலை செய்யும் அனைவரிடமும் அன்பு பாராட்டுவது, அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே என்ற எண்ணம், நம் குழந்தைகளின் மனதில் ஆழப்பதிய வேண்டும். எதிர் தரப்பதில் தவறு செய்தாலும், அதை எடுத்துக் கூறி அவர்களுக்கு எடுத்துரைப்பது போன்ற பழக்கங்களை ஏற்படுத்துவது நமது கடமை.பசங்களை கோடை பயிற்சி வகுப்பு எதிலும் சேர்க்கலையா ? பயிற்சி வகுப்பில் சேர்த்தா, பசங்க நிறைய நாலெட்ஜ் கெயின் பண்ணுவாங்க. அதை 'மிஸ்' பண்ணீட்டாங்களே, ஸ்கூல் திறந்ததுன்னா, இதே மாதிரி வாய்ப்பு கிடைக்காதுனு சொல்பவர்கள் பலர். கோடை பயிற்சி வகுப்பு சேர்ந்து தான் பசங்க அறிவை வளர்த்துக்கணும்னு இல்லை. பள்ளி சமயத்தில் கூட நேரம் கிடைக்கும் போது, இதுபோல சின்ன, சின்ன, பயிற்சி வகுப்பில் சேர்க்கலாம்.ஆனால் படிக்கின்ற பிள்ளைகளுக்கு இதைப் போல தொடர்ந்து விடுமுறை கிடைப்பது கஷ்டம், அந்த சமயத்திலும், அவங்களை இப்படி அடைச்சு வைக்காமல், விடுமுறையை அனுபவிக்க விடணும், "முதலில்  உறவுகளின் அருமையை தெரிஞ்சுக்கணும், அண்ணன் பிள்ளைகள், அக்கா பிள்ளைகள், தாத்தா. பாட்டின்னு உறவுகள் சூழ, அவங்க இருக்கக் கூடிய வாய்ப்பைத் தரணும், பாசத்தைப் பகிர்ந்து வாழ கற்றுக் கொடுக்கணும்,தனி தீவாக எதிலும் அவங்களை கலந்துக்க விடாமல் படிப்பு, படிப்புன்னு ஒரு வட்டத்துக்குள் அடைச்சு வளர்த்தா, நாளைக்கு பெரியவங்க ஆனதும், உறவுகளின் உண்மையான நெருக்கமும், பாசமும் கிடைக்காமல் விலகிப் போயிடுவாங்க. அந்தக் காலத்தில் விடுமுறை வந்தாச்சுன்னா, எல்லாரும் தாத்தா, பாட்டி, வீடு தேடி ஓடுவோம் அண்ணன். தம்பி. அக்கா, தங்கைன்னு குறைந்தது. வீட்டிற்கு நாலு பேராவது இருப்போம். இப்ப அப்படியில்லை வீட்டிற்கு ஒன்று, இல்லைன்னா இரண்டு பேர் தான் இருக்காங்க.அவங்களையும் இப்படி படிப்பு படிப்புன்னு, எதிலும் கலந்துக்க விடாமல் சின்ன கூட்டுக்குள் அடைச்சு வளர்க்கிறோம்.நாம் அந்தக் காலத்தில் உறவுகளோடு சேர்ந்து இருந்து அனுபவித்த சந்தோஷத்தில் பாதியாவது, நம் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டாமா ?படிப்பை மட்டுமில்லை. வாழும் கலையை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்.|இப்படி அனைவரிடமும் அன்பு செய்யும் பொழுது யாருக்குமே மற்றவரிடம் சண்டை போடுவது, அவர்களை எதிர்த்து வசை பாடுவது என்ற செயலுக்கு இடமே இருக்காது. எங்கு அநியாயம் நடப்பினும் தட்டிக் கேட்கும் தைரியமும் இருக்க வேண்டும். பணம் சம்பாதிப்பது அவசியம், பணத்தின் மீது உள்ள பேராசையை தவிர்ப்பது நமக்கு நல்லது என்று சொல்லி வளர்க்க வேண்டும்.விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பகிர்ந்து கொள்ளுதல், செல்போனை தவிர்ப்பது, பெரியவர்களை மதிக்கும் பழக்கம் வந்து விட்டால் எங்கே சண்டை, எங்கே விவாகரத்து, சொத்து பிரிக்கும் பொழுது வரும் சண்டை எல்லாமே போய் விடுமே கொஞ்சம் சிந்தியுங்கள்.குழந்தைகள் வளரும் பொழுது அன்றாடம் அவர்களுடைய நடவடிக்கைகளை கண்டிப்பாக கவனிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகளின் முகம் வாட விடாதீர்கள்.நம் குழந்தைகளின் படிப்பிலோ, செயலிலோ, மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள் .அவரவர்கள் வழியில் விட்டால் அவர்கள் ஒருநாள் நிச்சயமாக பிரகாசிப்பார்கள் அப்படிச் செய்ததால்தான் செஸ் சாம்பியன் குகேஷ் 18 வயதிலேயே உலக சாம்பயினாக உருவாகி உள்ளார்.புது வருடம் பிறந்ததிலிருந்து ஸ்வீட் சாப்பிடமாட்டேன் தினமும் நடைப்பயிற்சி செய்வேன் இந்த மாதத்திலிருந்து சிறு சேமிப்பை செய்ய ஆரம்பிப்பேன் என்று மனதில் நினைத்தால் மட்டும் போதாது அதை கடைபிடித்தால் நமக்கு தானே நல்லது.இப்படி ஒரு சமுதாயம் உருவாகுமா ? என்று யோசிக்காமல் செயல்படத் தொடங்கினால் இந்த வருடம் மட்டும் அல்ல. இனி வரும் வருடங்கள் எல்லாம் இன்பமயமான HAPPY NEW YEAR தான்.

Nov 29, 2024

சிதறிய கவளச் சோறு

 நாம் பிறந்து வளர்ந்து பின்பு நம் குழந்தைகளுக்காக , சேர்த்து வைக்க பலவாறு பாடுபடுகிறோம். உழைப்பு, முயற்சி என்று அயராது பாடுபட்டு பலவிதமான தடைகளில் இருந்து, மூழ்கி எழுந்து என்ற தொடர்கதைதான் வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையை வெறுக்காமல் பார்த்துக் கொள்வது நம்முடைய நம்பிக்கை தான். சரி, நம் வாரிசுகளுக்கு நல்ல படிப்பு,வீடு,நிலம் என்று எல்லா வசதிகளையும் சிறப்பாகவே  செய்திருக்கிறோம். பேரன், பேத்திகளுடன் நன்றாகவே, சந்தோஷமாகவே இருக்கிறோம். ஆனாலும் ஒரு நெருடல் நம்மை அறியாமல் ஏதோ ஒரு மூலையில் ஒன்றை செய்யத் தவற விட்டது போல ஒரு தவிப்பு.  இந்த உலகத்தில் பிறந்து எத்தனை அனுபவித்து விட்டோம் .இந்த மண்ணிற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். நாம் சம்பாதிக்கும் பணத்தில் நமக்கு முடிந்த அளவு “ இந்தாப்பா இதை வைத்து பிழைத்துக்கொள் என்று ஒரு தொகையை கொடுக்கிறோம்”. நிலம்,வீடு, வாகனத்திற்காக அரசாங்கம் வரி வசூலிக்கின்றது. அந்த ஊரில் பஞ்சம், வெள்ளம், வந்துவிட்டால் அங்கே போய் வரி வசூல் செய்ய மாட்டார்கள். விட்டுவிடுவார்கள். நடப்பு தெரியாமல் வரி கட்டித்தான் ஆகவேண்டும் என்றால் எப்படி முடியும். அதைப்போல  கஷ்டத்திற்காக, கொடுக்கும் பொருளை ஒருக்காலும் திருப்பிக்  கேட்கக்கூடாது. விட்டுவிடவேண்டும்.  யானைக்கு கவளம் கவளமாக உணவைக் கொடுக்கிறான் யானைப்பாகன். யானையின் வாயைத் திறக்கச்சொல்லி கவளத்தை 'டபக்' 'டபக்' கென்று போட அது அசை போடுகின்றது. அப்படிச் செய்யும் பொழுது ஒரு கவளம் சோறு, கீழே தவறுதலாக விழுந்து சிதறி விடுகின்றது. அந்த சிதறிய கவளச் சோறு லட்சக்கணக்கான எறும்புகளுக்கு ஒரு வேளை உணவாகிறது. எறும்புகளுக்கு திருப்தி யானைக்கும் திருப்தி தானே!. ஒரு கவளம் சோறு வீணாவதால் யானைக்கு எந்த விதத்திலும் நஷ்டம் இல்லை.நாம் சம்பாதித்த பணத்தில் ஒரு அளவு ரூபாயை இயலாதவர்களுக்கு, செலவு செய்வதினால் கொடுப்பவர்களுக்கு நிறைவு. வாங்குபவர்களுக்கு தங்களுடைய இயலாமைக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.நாம் ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் பொழுது யாராவது தேடி வந்து உதவி செய்தால் எவ்வளவு மனநிறைவு கிடைக்குமோ ,அதைவிட பலமடங்கு நமக்கும் திருப்தி ஏற்படும்.ஒரு மனிதனுக்கு நாம் செய்யும் உதவி ஒரு தலைமுறையினை நிமிர்ந்து நடக்கச் செய்யும். உதவி பெற்று நல்ல நிலைமையில் இருப்பவர்கள், நல்ல மனிதர்களின் அரவணைப்பில் கிடைத்த வெற்றியை, தானும் கொடுத்து மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான். 

Oct 31, 2024

தலைமுறை மாற்றங்கள்

மனிதன் தோன்றிய காலத்திலிருந்து ஒவ்வொரு தலைமுறையிலும் பல மாற்றங்கள் மாறி, மாறி வருவது கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மைதான். கொள்ளுத்தாத்தா காலத்தில் எல்லாம் ஆண் ஆதிக்கம் அதிகமாகவே இருந்திருக்கிறது அதாவது ஆண்கள் எதைச் செய்தாலும் பெண்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.பாட்டி, தாத்தா காலத்தில் மாமியார் சொன்னதைத்தான் கேட்க வேண்டும். அது சரியோ, தவறோ எதுவானாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பா எல்லாம் என்னதான் புத்திசாலித்தனமாகச் சொன்னாலும் அதைத் தாத்தா ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி மறுப்பவர்கள் வீட்டை விட்டு விரட்டப்படுவார்கள்.இந்த மாதிரி அடிமை வாழ்வு வாழ்ந்த தலைமுறையினர் தன் குழந்தைகளை இந்த மாதிரி வளர்க்கக் கூடாது என்று மாறத் துவங்கினர். தன்னுடைய கனவுகள் என்று மாறத் துவங்கினர். தன்னுடைய கனவுகள் எல்லாம், அப்பா, அம்மாவின் அதிகாரத்தால் தவிடு பொடியாகி விட்டதின் ஆதங்கம் இப்படி சிந்திக்க வைத்திருக்கலாம். திருமண விஷயமானாலும் சரி இந்த வியாபார, விவசாய விஷயமானாலும் சரி இந்த நிலைமைதான். அப்பா வந்தால் எழுந்து நின்று கைகட்டி தலை குனிந்து அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருந்த காலமெல்லாம் 'ஹாய் டாடி என்று சொல்லும் காலமாகிவிட்டது. இப்பொழுது.தனது மனைவிகள் அம்மாக்களின் அதிகாரத்தால் கட்டுப்படுவதைப் பார்த்து ஆண்களும் சரி, பெண்களும் சரி, இந்த நிலை மாறவேண்டும். என்று ஏங்கத் தொடங்கினர். விளைவு இன்று எல்லாவற்றிலும் சுதந்திர தாகம் ஏற்பட்டு பிள்ளைகளுக்கு எது சரியென்று பட்டதோ அதைச் செய்யட்டும் மருமகளா அவள் இஷ்டத்திற்கு இருக்கட்டும். பெண்களை அடிமைப் படுத்தவே கூடாது என்று ஆண்களுக்கு  சரி சம அந்தஸ்தைக் கொண்டு பெண்களும் சரி, ஆண்களும் சரி முடிவெடுப்பது என்பது அவர்களாகவே எடுத்துக் கொள்கின்றனர்.படிப்பு விஷயத்தில் இந்த சுதந்திரத்தை கொடுப்பவர்கள் எல்லாம் திருமண விஷயத்தில், தன் குழந்தைகள் எடுக்கும் முடிவை சிலர் ஆதரிக்கின்றனர். பலர் எதிர்க்கின்றனர். அதுவும் பெண்கள் எல்லோருமே தனக்கு வாய்க்கும் கணவர் ,பணக்காரனாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பில் பலர் கம்ப்யூட்டரில் சாட் பண்ணி அடுத்த பக்கம் பணக்காரர் என்று எண்ணி வாழ்க்கையில் ஏமாந்து விடுகின்றனர். உடனே விவாகரத்து தான். முந்தைய காலத்தில் வேண்டாம். பிடிக்கவில்லை என்றால் நடுத்தெருதான் கதி. ஆனால் இப்பொழுது பெண்கள் தான் பெற்ற கல்வியினால் ,சொந்தக்காலில் துணிந்து நிற்கின்றனர். இது பெரிய கலாச்சார சீரழிவாக இருந்தாலும், வேதனைப்பட்டே காலத்தைத் தள்ளாமல் நிம்மதிதான் வேண்டும் என முடிவெடுக்கின்றனர்.பெரிய தொழில் அதிபர்கள் எல்லாம் அவர்களுடைய வெற்றிக்கு காரணம் ,தொழில் நடக்கும் இடத்தில் காலை 7 மணிக்கே தொழிலாளர்கள் வருமுன் அந்த இடத்திற்கு செல்வது முக்கியமாக காரணமாக இருந்திருக்கிறது. அவர்களுடைய வாரிசுகள் ஒன்பது 10 மணிக்கு எழுந்து ரெடியாகச் செல்கின்றனர். இது இவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. கம்ப்யூட்டர் காலம் எல்லாமே, கம்ப்யூட்டர் பார்த்துக்கும் பையன் ஒரு தட்டு, தட்டி, ஸ்டாக்கிலிருந்து, உற்பத்தி எவ்வளவு ஆகி இருக்கிறது. எத்தனை ஆட்கள் வேலை செய்திருக்கின்றனர். வரவு என்ன ? செலவு என்ன ? கேமரா மூலம் தொழிலாளர்கள் உற்பத்தி நேரத்தில் இத்தனை மணிக்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை துல்லியமாகக் கணக்கிட்டு ,எதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆராய்கின்றனர். முற்காலத்தில் ஒரு மாதம் கணிக்க வேண்டிய வேலையை ஒரு மணி நேரத்தில் முடித்து விட்டு, போய் கொண்டே இருக்கிறார்கள்.கலாச்சார சீரழிவுகள் அதிகரிக்கும் இக்காலத்தில், மனிதர்களின் பண்பாடு குழிதோண்டி புதைக்கப்பட்டு விடும் என்பது இக்கால வாரிசுகளுக்கு வயோதிக காலத்தில் தான் தெரியவரும். எல்லோருக்குமே கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தான் .வயது திரும்பி வருமா ? இளைய சமுதாயத்தினருக்கு இவர்கள் அறிவுரை சொன்னால் ஏற்பார்களா ? ஆனால் முந்தைய தலைமுறையினருக்கு கதி கலங்குகிறது. இந்த மாதிரியான தலைமுறை மாற்றங்களை நாம் தவிர்க்க முடியாது. வேகமாக முன்னேறி வரும் பலவித மாற்றங்களினால், நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு, மாறிக் கொண்டே இருக்கும் இந்த “தலைமுறை மாற்றங்கள்"  

1 2 3 4

AD's



More News