தலைமுறை மாற்றங்கள்
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து ஒவ்வொரு தலைமுறையிலும் பல மாற்றங்கள் மாறி, மாறி வருவது கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மைதான். கொள்ளுத்தாத்தா காலத்தில் எல்லாம் ஆண் ஆதிக்கம் அதிகமாகவே இருந்திருக்கிறது அதாவது ஆண்கள் எதைச் செய்தாலும் பெண்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
பாட்டி, தாத்தா காலத்தில் மாமியார் சொன்னதைத்தான் கேட்க வேண்டும். அது சரியோ, தவறோ எதுவானாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பா எல்லாம் என்னதான் புத்திசாலித்தனமாகச் சொன்னாலும் அதைத் தாத்தா ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி மறுப்பவர்கள் வீட்டை விட்டு விரட்டப்படுவார்கள்.
இந்த மாதிரி அடிமை வாழ்வு வாழ்ந்த தலைமுறையினர் தன் குழந்தைகளை இந்த மாதிரி வளர்க்கக் கூடாது என்று மாறத் துவங்கினர். தன்னுடைய கனவுகள் என்று மாறத் துவங்கினர். தன்னுடைய கனவுகள் எல்லாம், அப்பா, அம்மாவின் அதிகாரத்தால் தவிடு பொடியாகி விட்டதின் ஆதங்கம் இப்படி சிந்திக்க வைத்திருக்கலாம். திருமண விஷயமானாலும் சரி இந்த வியாபார, விவசாய விஷயமானாலும் சரி இந்த நிலைமைதான். அப்பா வந்தால் எழுந்து நின்று கைகட்டி தலை குனிந்து அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருந்த காலமெல்லாம் 'ஹாய் டாடி என்று சொல்லும் காலமாகிவிட்டது. இப்பொழுது.
தனது மனைவிகள் அம்மாக்களின் அதிகாரத்தால் கட்டுப்படுவதைப் பார்த்து ஆண்களும் சரி, பெண்களும் சரி, இந்த நிலை மாறவேண்டும். என்று ஏங்கத் தொடங்கினர். விளைவு இன்று எல்லாவற்றிலும் சுதந்திர தாகம் ஏற்பட்டு பிள்ளைகளுக்கு எது சரியென்று பட்டதோ அதைச் செய்யட்டும் மருமகளா அவள் இஷ்டத்திற்கு இருக்கட்டும். பெண்களை அடிமைப் படுத்தவே கூடாது என்று ஆண்களுக்கு சரி சம அந்தஸ்தைக் கொண்டு பெண்களும் சரி, ஆண்களும் சரி முடிவெடுப்பது என்பது அவர்களாகவே எடுத்துக் கொள்கின்றனர்.
படிப்பு விஷயத்தில் இந்த சுதந்திரத்தை கொடுப்பவர்கள் எல்லாம் திருமண விஷயத்தில், தன் குழந்தைகள் எடுக்கும் முடிவை சிலர் ஆதரிக்கின்றனர். பலர் எதிர்க்கின்றனர். அதுவும் பெண்கள் எல்லோருமே தனக்கு வாய்க்கும் கணவர் ,பணக்காரனாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பில் பலர் கம்ப்யூட்டரில் சாட் பண்ணி அடுத்த பக்கம் பணக்காரர் என்று எண்ணி வாழ்க்கையில் ஏமாந்து விடுகின்றனர். உடனே விவாகரத்து தான். முந்தைய காலத்தில் வேண்டாம். பிடிக்கவில்லை என்றால் நடுத்தெருதான் கதி. ஆனால் இப்பொழுது பெண்கள் தான் பெற்ற கல்வியினால் ,சொந்தக்காலில் துணிந்து நிற்கின்றனர். இது பெரிய கலாச்சார சீரழிவாக இருந்தாலும், வேதனைப்பட்டே காலத்தைத் தள்ளாமல் நிம்மதிதான் வேண்டும் என முடிவெடுக்கின்றனர்.
பெரிய தொழில் அதிபர்கள் எல்லாம் அவர்களுடைய வெற்றிக்கு காரணம் ,தொழில் நடக்கும் இடத்தில் காலை 7 மணிக்கே தொழிலாளர்கள் வருமுன் அந்த இடத்திற்கு செல்வது முக்கியமாக காரணமாக இருந்திருக்கிறது. அவர்களுடைய வாரிசுகள் ஒன்பது 10 மணிக்கு எழுந்து ரெடியாகச் செல்கின்றனர். இது இவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. கம்ப்யூட்டர் காலம் எல்லாமே, கம்ப்யூட்டர் பார்த்துக்கும் பையன் ஒரு தட்டு, தட்டி, ஸ்டாக்கிலிருந்து, உற்பத்தி எவ்வளவு ஆகி இருக்கிறது. எத்தனை ஆட்கள் வேலை செய்திருக்கின்றனர். வரவு என்ன ? செலவு என்ன ? கேமரா மூலம் தொழிலாளர்கள் உற்பத்தி நேரத்தில் இத்தனை மணிக்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை துல்லியமாகக் கணக்கிட்டு ,எதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆராய்கின்றனர். முற்காலத்தில் ஒரு மாதம் கணிக்க வேண்டிய வேலையை ஒரு மணி நேரத்தில் முடித்து விட்டு, போய் கொண்டே இருக்கிறார்கள்.
கலாச்சார சீரழிவுகள் அதிகரிக்கும் இக்காலத்தில், மனிதர்களின் பண்பாடு குழிதோண்டி புதைக்கப்பட்டு விடும் என்பது இக்கால வாரிசுகளுக்கு வயோதிக காலத்தில் தான் தெரியவரும். எல்லோருக்குமே கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தான் .வயது திரும்பி வருமா ? இளைய சமுதாயத்தினருக்கு இவர்கள் அறிவுரை சொன்னால் ஏற்பார்களா ? ஆனால் முந்தைய தலைமுறையினருக்கு கதி கலங்குகிறது. இந்த மாதிரியான தலைமுறை மாற்றங்களை நாம் தவிர்க்க முடியாது. வேகமாக முன்னேறி வரும் பலவித மாற்றங்களினால், நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு, மாறிக் கொண்டே இருக்கும் இந்த “தலைமுறை மாற்றங்கள்"
0
Leave a Reply