காற்றுக்கென்னவேலி
இவ்வுலகில் நாம் காணும் அனைத்துப் பொருள்களும், உயிர், உயிரற்ற எல்லாமே பஞ்ச பூதங்களால் ஆனவையே. பஞ்ச பூதங்கள் என்றால் பேய், பிசாசு, முனிஎன்றுபலர்தவறாகநினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆகாயம், காற்று, நீர்,நெருப்பு, பூமி, இவை ஐந்தும் பஞ்சபூதங்கள்.இந்தபஞ்சபூதங்கள்யாரையும்வித்தியாசம்பார்ப்பதில்லை.எல்லாவற்றிற்கும் தன் குணத்தைக் காட்டிக் கொண்டே செல்கின்றது.
காற்று தென்றலாக வீசும் பொழுது பணக்காரனுக்கு மட்டும் வீசி விட்டு மற்றவர்களை விட்டு விடுமோ? அதற்கு ஏழை, பணக்காரன், நண்பன், விரோதி என்ற பாகுபாடே கிடையாதே. புயல்காற்று அடிக்கும் போதும் சமமாகத்தான் அனைத்தையும் அழிக்கும். காற்று தன் கடமையைச்‘’சிவனே’ என்று கறாராகச் செய்கிறது. எல்லா பஞ்சபூதங்களின் வேலையும் அது தானே!
ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் மனித மனங்களுக்கு மாத்திரம் தான். ஏற்றத்தையும், தாழ்வையும் தன்னாலே உண்டு பண்ணி ,அதற்குண்டான துக்கத்தை அனுபவித்துக் கொண்டு ‘நிம்மதியே இல்லை’ என்று அலைகிறோம்.
வசதி படைத்தவர்களுக்கு ஒரு மரியாதை கொடுக்கின்றனர். ஏழைகளை அலட்சியப்படுத்துகின்றனர். இந்த பாகுபாடு பகுத்தறியும் ஆற்றல் உடைய நமக்கு, ஏன்? இந்த கீழ்த்தரமான குணம்.
பஞ்ச பூதங்களின் இணைப்பினால் ஆன நமக்கு அதனுடைய மேலான குணம் இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன? சுயநலம் தான். நான், எனது என்ற கர்வம், புகழ் மயக்கம் ஆகிய மனித குணங்கள், நம்மை மிருகங்களாக்கி விடுகின்றன.
மனிதர்களாகிய நாம் அன்புடன் நம்மைச் சுற்றியுள்ள அனைவரிடமும்தென்றல்காற்றாகவும், கண் எதிரே அநியாயங்கள் நடக்கும் பொழுது அதை அழிக்கும் புயலாகவும் மாறலாம்.
துரோபதியை அவமானப்படுத்தும் பொழுது நடுச்சபையில் பீஷ்மர், திருதராஷ்டினர்,துரோணர்,யாருமே தட்டிக் கேட்காமல் இருக்கப்போய்தான் குருஷேத்திரப் போர் முண்டது. முளையிலேயே கிள்ளி எறிந்தால் இந்தப்போர் வந்திருக்காதல்லவா?
மனிதாபிமானத்துடன் தட்டிக் கேட்கவேண்டும். வன்முறையில் அல்ல!'
0
Leave a Reply