"எலான் மஸ்க்கிற்கு பெரும் பின்னடைவு: முக்கிய முடிவால் சரிவைச் சந்தித்தது."
அமெரிக்காவில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் மீது 5% வருடாந்திர சொத்து வரி (Wealth Tax) விதிப்பதற்கான புதிய மசோதா அந்நாட்டுச் செனட் சபையில் தீவிர விவாதத்தில் உள்ளது. "Make Billionaires Pay Their Fair Share Act" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் மட்டுமே ஆண்டுக்குச் சுமார் 24.8 பில்லியன் டாலர் முதல் 42 பில்லியன் டாலர் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த வரியின் மூலம் திரட்டப்படும் பல டிரில்லியன் டாலர் நிதி, சாமானிய மக்களின் கல்வி, மருத்துவம், குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டுவசதித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply