சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (12.06.2026) ஜீன்-12 சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் வேல்டு விசன் இணைந்து நடத்திய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, நான், குழந்தை மற்றும் இளம் பருவத்தொழிலாளர் எவரையும் பணியில் அமர்த்த மாட்டேன். குழந்தை மற்றும் இளம் பருவத்தொழிலாளர் முறையை அகற்றிட - குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்தி தயார் செய்யும் எந்த பொருளையும் உபயோகப்படுத்த மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன் என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
அதனைத்தொடர்ந்து, சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்.” என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக, விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மின்னனு விளம்பர திரையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறை, தொண்டு நிறுவனமான வேல்டு விஷன் இந்தியா உட்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply