இன்பமயமான புது வருடப் பிறப்பில் நல்லதொரு சமுதாயம் உருவாக உறுதி கொள்வோம்
HAPPY NEW NEAR' என்று வாழ்த்துவதும், கூவுவதும் மட்டும் போதுமோ ? நம்முடைய கலாச்சாரம். பண்பாடுகள் எங்கே சென்று கொண்டு இருக்கிறது. பார்த்தால் பயங்கரமாக, இளம் வாரிசுகள் அன்பிற்காக ஏங்கி, அன்பு என்றால் என்ன ? என்ற கேள்விக்கு பதில் தெரியாத இளம் தலைமுறையினர் உருவாகின்றனர்.
பயங்கரவாதம் எங்கே உருவாகிறது. அன்போ, கருணையோ இல்லாத ஒரு சமூகம் தான் இந்த சமுதாயம் உருவாக நாமும் ஒரு காரணமாகிறோம். எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே தான் அன்றாட வாழ்க்கையும் போய்க் கொண்டிருக்கிறது. ரோட்டில் நடக்கும்போது, ட்ரைவிங் செய்யும் போது 2 வீலரில் செல்லும் பொழுது, சமைக்கும் பொழுது, தூங்கும் பொழுது, குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பொழுது. கல்யாண வீட்டிலோ, துக்க வீட்டிலோ எல்லோரும் சேரும் பொழுது செல்போன் தான். செல்போன் என்னும் போதை நம்மை சிறிது சிறிதாக விழுங்கிக் கொண்டிருக்கிறது. செல்போன் அவசியம் தான். தேவையானதற்கு மட்டும் தான் .அதே உலகமாக மாறும் பொழுது மனநலம். உடல்நலம் நம் குழந்தைகளின் எதிர்காலம் எல்லாமே பாதிக்கப்படுகிறது.நம் குழந்தைகள் நம் எதிர்கால இந்தியாவை, பாதுகாக்கும் சொத்துக்கள் அந்த சொத்தானது, செல்போனால் செத்து மடிவது, நாட்டில் பயங்கரதவாதத்தை உருவாக்கும் என்பதில் எள்ளளவு கூட சந்தேகமில்லை. நம் குழந்தைகளிடம் தினமும் அரை மணி நேரமாவது பேச வேண்டும்.
நம் குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும். எப்படி நம் வீட்டிற்கு வரும் உறவினர்களை வரவேற்க வேண்டும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை .எது கிடைத்தாலும் பகிர்ந்து சாப்பிடுவது. கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் மனப்பான்மை .அன்றாடம் சிறிது நேரம் நம்மைக் காக்கும் கடவுளுக்கு நன்றிதெரிவிக்கும் வகையில், நம்மை மிஞ்சிய காணமுடியாத சக்திக்கு நன்றிகூறும் பழக்கம்,ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு பார்ப்பதை தவிர்ப்பது ,அனைவரையும் சமமாக பாவிப்பது, நம் வீட்டில் வேலை செய்யும் அனைவரிடமும் அன்பு பாராட்டுவது, அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே என்ற எண்ணம், நம் குழந்தைகளின் மனதில் ஆழப்பதிய வேண்டும். எதிர் தரப்பதில் தவறு செய்தாலும், அதை எடுத்துக் கூறி அவர்களுக்கு எடுத்துரைப்பது போன்ற பழக்கங்களை ஏற்படுத்துவது நமது கடமை.
பசங்களை கோடை பயிற்சி வகுப்பு எதிலும் சேர்க்கலையா ? பயிற்சி வகுப்பில் சேர்த்தா, பசங்க நிறைய நாலெட்ஜ் கெயின் பண்ணுவாங்க. அதை 'மிஸ்' பண்ணீட்டாங்களே, ஸ்கூல் திறந்ததுன்னா, இதே மாதிரி வாய்ப்பு கிடைக்காதுனு சொல்பவர்கள் பலர். கோடை பயிற்சி வகுப்பு சேர்ந்து தான் பசங்க அறிவை வளர்த்துக்கணும்னு இல்லை. பள்ளி சமயத்தில் கூட நேரம் கிடைக்கும் போது, இதுபோல சின்ன, சின்ன, பயிற்சி வகுப்பில் சேர்க்கலாம்.ஆனால் படிக்கின்ற பிள்ளைகளுக்கு இதைப் போல தொடர்ந்து விடுமுறை கிடைப்பது கஷ்டம், அந்த சமயத்திலும், அவங்களை இப்படி அடைச்சு வைக்காமல், விடுமுறையை அனுபவிக்க விடணும், "முதலில் உறவுகளின் அருமையை தெரிஞ்சுக்கணும், அண்ணன் பிள்ளைகள், அக்கா பிள்ளைகள், தாத்தா. பாட்டின்னு உறவுகள் சூழ, அவங்க இருக்கக் கூடிய வாய்ப்பைத் தரணும், பாசத்தைப் பகிர்ந்து வாழ கற்றுக் கொடுக்கணும்,தனி தீவாக எதிலும் அவங்களை கலந்துக்க விடாமல் படிப்பு, படிப்புன்னு ஒரு வட்டத்துக்குள் அடைச்சு வளர்த்தா, நாளைக்கு பெரியவங்க ஆனதும், உறவுகளின் உண்மையான நெருக்கமும், பாசமும் கிடைக்காமல் விலகிப் போயிடுவாங்க.
அந்தக் காலத்தில் விடுமுறை வந்தாச்சுன்னா, எல்லாரும் தாத்தா, பாட்டி, வீடு தேடி ஓடுவோம் அண்ணன். தம்பி. அக்கா, தங்கைன்னு குறைந்தது. வீட்டிற்கு நாலு பேராவது இருப்போம். இப்ப அப்படியில்லை வீட்டிற்கு ஒன்று, இல்லைன்னா இரண்டு பேர் தான் இருக்காங்க.அவங்களையும் இப்படி படிப்பு படிப்புன்னு, எதிலும் கலந்துக்க விடாமல் சின்ன கூட்டுக்குள் அடைச்சு வளர்க்கிறோம்.நாம் அந்தக் காலத்தில் உறவுகளோடு சேர்ந்து இருந்து அனுபவித்த சந்தோஷத்தில் பாதியாவது, நம் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டாமா ?படிப்பை மட்டுமில்லை. வாழும் கலையை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்.
|இப்படி அனைவரிடமும் அன்பு செய்யும் பொழுது யாருக்குமே மற்றவரிடம் சண்டை போடுவது, அவர்களை எதிர்த்து வசை பாடுவது என்ற செயலுக்கு இடமே இருக்காது. எங்கு அநியாயம் நடப்பினும் தட்டிக் கேட்கும் தைரியமும் இருக்க வேண்டும். பணம் சம்பாதிப்பது அவசியம், பணத்தின் மீது உள்ள பேராசையை தவிர்ப்பது நமக்கு நல்லது என்று சொல்லி வளர்க்க வேண்டும்.விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பகிர்ந்து கொள்ளுதல், செல்போனை தவிர்ப்பது, பெரியவர்களை மதிக்கும் பழக்கம் வந்து விட்டால் எங்கே சண்டை, எங்கே விவாகரத்து, சொத்து பிரிக்கும் பொழுது வரும் சண்டை எல்லாமே போய் விடுமே கொஞ்சம் சிந்தியுங்கள்.குழந்தைகள் வளரும் பொழுது அன்றாடம் அவர்களுடைய நடவடிக்கைகளை கண்டிப்பாக கவனிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகளின் முகம் வாட விடாதீர்கள்.
நம் குழந்தைகளின் படிப்பிலோ, செயலிலோ, மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள் .அவரவர்கள் வழியில் விட்டால் அவர்கள் ஒருநாள் நிச்சயமாக பிரகாசிப்பார்கள் அப்படிச் செய்ததால்தான் செஸ் சாம்பியன் குகேஷ் 18 வயதிலேயே உலக சாம்பயினாக உருவாகி உள்ளார்.புது வருடம் பிறந்ததிலிருந்து ஸ்வீட் சாப்பிடமாட்டேன் தினமும் நடைப்பயிற்சி செய்வேன் இந்த மாதத்திலிருந்து சிறு சேமிப்பை செய்ய ஆரம்பிப்பேன் என்று மனதில் நினைத்தால் மட்டும் போதாது அதை கடைபிடித்தால் நமக்கு தானே நல்லது.
இப்படி ஒரு சமுதாயம் உருவாகுமா ? என்று யோசிக்காமல் செயல்படத் தொடங்கினால் இந்த வருடம் மட்டும் அல்ல. இனி வரும் வருடங்கள் எல்லாம் இன்பமயமான HAPPY NEW YEAR தான்.
0
Leave a Reply