ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!
சிட்னியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டத்தில், உலகின் 10-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து, சீன தைபேயின் சென் சு யுவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய சிந்து, வெறும் 29 நிமிடங்களில் 21-6, 21-9 என்ற நேர் செட்களில் எதிராளியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
- மற்றொரு கால்இறுதிப் போட்டியில் களமிறங்கிய இளம் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா, உலகின் 3-வது நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் 14-21, 14-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இன்று நடைபெறும் விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் பி.வி.சிந்து, ஜப்பானின் பலத்த எதிரியான அகானே யமாகுச்சியை எதிர்கொள்கிறார். சர்வதேச போட்டிகளில் இவ்விருவரும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் சிந்து 15 முறையும், யமாகுச்சி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply