25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 06, 2026

இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் செயல்பாடு தொடக்கம்.

ஆந்திரப் பிரதேசத்தின் சுவர்ணகிரியில் இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. முதல் முழு செயல்பாட்டு ஆண்டில் சுமார் 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆண்டுகளில் இதை 900 கிலோ முதல் ஒரு டன் வரை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Jul 06, 2026

திருப்பதி கோவிலுக்கு அசோக் லேலண்ட் லாரி நன்கொடை!

அசோக் லேலண்ட் என்ற ஒரு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம், திருப்பதி கோவிலுக்கு ரூ.31 லட்சம் மதிப்புள்ள ஒரு லாரியை தினசரி நிர்வாக மற்றும் போக்குவரத்து பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளது.

Jul 04, 2026

கேரள கோயில்களுக்கு ஆனந்த் அம்பானியின் ரூ.22.55 கோடி நன்கொடை. திருமலை தேவஸ்தானத்துக்கும் ஆனந்த் அம்பானியின் முக்கிய பங்களிப்பு.

ரிலையன்ஸ் குழும இயக்குநர் ஆனந்த் அம்பானி, கேரளாவின் ஒன்பது வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.22.55 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.இதில், ராஜராஜேஸ்வரம் கோயிலுக்கு ரூ.12 கோடியும், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலுக்கு ரூ.6 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 கோயில்களுக்கு மொத்தம் ரூ.4.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 மின்சார பேருந்துகளை நன்கொடையாக வழங்க ஆனந்த் அம்பானி முன்வந்துள்ளார். மேலும், 50 பேருந்து ஓட்டுநர்களின் ஊதியத்துக்கு நிதியுதவி அளிப்பதுடன், ரிலையன்ஸ் நிறுவனம் மின்னேற்றும் (Charging) நிலையங்களையும் அமைக்க உள்ளது.அதோடு, குஜராத்தில் செயல்பட்டு வரும் 'வந்தாரா' திட்டத்தைப் போல, திருமலை தேவஸ்தான கோசாலையை நவீனமயமாக்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்

Jul 04, 2026

உலகத் தரத்திற்கு மாறுமா திருச்சி விமான நிலையம்?

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டு, அங்கு சிப்காட் அமைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனால், தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பப்படி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தை அடுத்த கட்டத்திற்குத் தரம் உயர்த்தி, அதன் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிக எளிதாக அணுகக்கூடிய ஒரே விமான நிலையம் திருச்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது

Jul 04, 2026

உலகின் சிறந்த டீ:இந்தியாவின் மசாலா டீ முதலிடம்!

TasteAtlas வெளியிட்ட உலகின் டாப் 100 டீக்களின் பட்டியலில் இந்தியாவின் மசாலா டீ முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் மற்ற தேநீர் வகைகளான டார்ஜிலிங் டீ 6வது இடம், அசாம் டீ 13வது இடம், ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா டீ மற்றும் ஜம்மு காஷ்மீரின் இளஞ்சிவப்பு நிற நான் சாய் (Noon Chai) ஆகியவையும் முதல் 50 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.

Jul 04, 2026

எவரெஸ்ட் மலையேற்றத்தில் அதிர்ச்சி மோசடி!

உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் மலையேற்றத்தில் அதிர்ச்சி அளிக்கும் காப்பீட்டு மோசடி ஒன்று நேபாளத்தில் அம்பலமாகியுள்ளது.விசாரணையில், சில வழிகாட்டிகள், ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மலையேற்ற வீரர்களின் உணவில் உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் பொருட்கள் கலக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவசர மீட்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் காப்பீட்டு தொகைகளை மோசடி செய்ததாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jul 04, 2026

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்ட மாற்றக் குழுவுக்கு மயில்சாமி அண்ணாதுரை தலைமை.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டங்களை நவீன தேவைகளுக்கு ஏற்ப மறுசீரமைக்கும் பணிக்காக, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட புதிய நிபுணர் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.இந்தக் குழு, எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் திறன் சார்ந்த கல்வியை வலுப்படுத்தும் வகையில் பரிந்துரைகளை வழங்கும்.புதிய நியமனம்: மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் விலகியதைத் தொடர்ந்து, இஸ்ரோவின் சந்திரயான்-1 முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தமிழக பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.குழுவின் பணி: ஆகஸ்ட் 2025-ல் தொடங்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையின்படி, பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை உருவாக்கும் பணியில் இக்குழு ஈடுபடும்.உறுப்பினர்கள்: கல்வி உரிமை ஆர்வலர் அனந்தஜித் மக்கியா உள்ளிட்ட புதிய சேர்க்கைகளுடன் இக்குழுவின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. பாடத்திட்ட வடிவமைப்புப் பொறுப்பு அண்ணாதுரை மற்றும் பாட நிபுணர்களிடம் இருக்கும்.

Jul 04, 2026

நாசா மாநாட்டில் தமிழ்நாட்டு மாணவர் ஹரி துவாரகன் சாதனை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வயது மாணவர் ஹரி துவாரகன், நாசா NSS மாநாட்டில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.விண்வெளி குடியேற்றம் தொடர்பான 'ASTRO ZENTH ERA' என்ற தனது புதுமையான திட்டத்தை சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்திய அவர், பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

Jul 04, 2026

மைக்ரோசாஃப்ட் பேச்சுவார்த்தையில் 'Zoho' பெயர் உத்தி: ஸ்ரீதர் வேம்பு.

90% கட்டணக் குறைப்பு: இந்திய வாடிக்கையாளர் ஒருவர் தனது மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் உரிமத்தைப் புதுப்பிக்கும்போது, 'Zoho Office Suite'-க்கு மாறப்போவதாகக் கூறியதை அடுத்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விலையில் 90% தள்ளுபடி வழங்கியதாக Zoho இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.வேம்பின் பரிந்துரை: நிறுவனங்கள் மைக்ரோசாஃப்ட் உரிமத்தைப் புதுப்பிக்கும் பேச்சுவார்த்தையின் போது, Zoho-வை ஒரு மாற்றாகக் குறிப்பிட்டே பெரும் தொகையைச் சேமிக்கலாம் என அவர் யோசனை கூறியுள்ளார்.சந்தைப் போட்டி: தொழில்நுட்பச் சந்தையில் ஏகபோக ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்குச் சாதகமான விலை நிர்ணயத்தைப் பெறவும் ஆரோக்கியமான போட்டி அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Jul 04, 2026

எலான் மஸ்க் பிறந்தநாள் & SpaceX IPO விவாதம்.

ஒரே நாள் பிறந்தநாள்: ஜூன் 28 அன்று பிறந்த எலான் மஸ்க், தன்னைவிட 3 ஆண்டுகள் இளையவர் (மஸ்க் - 1971, வேம்பு - 1968) என்ற சுவாரசியத் தகவலை ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்துள்ளார்.SpaceX சாதனைகள்: $75 பில்லியன் மதிப்பிலான சாதனை ஐபிஓ (IPO) வெளியீட்டிற்குப் பிறகு, SpaceX நிறுவனத்தின் மதிப்பு $2.2 டிரில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இது எலான் மஸ்க்கை உலகின் முதல் 'டிரில்லியன் டாலர்' (Trillionaire) செல்வந்தராக உயர்த்தியுள்ளது.கோள்களின் சீரமைப்பு மற்றும் தனது பிறந்தநாளை ஒட்டி, ஒரு சுப நாளாகக் கருதியே ஜூன் மாதத்தில் இந்த வெற்றிகரமான IPO-வை மஸ்க் திட்டமிட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 118 119

AD's



More News