25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Aug 25, 2026

மூளையின் ‘ஆட்டோ-டெலீட்’ வசதி.

நாம் வளர வளர மூளையில் தேவையற்ற அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படும் சில நரம்பு இணைப்புகள் குறைக்கப்படும் செயல்முறைக்கு ‘Synaptic Pruning’ என்று பெயர்.இதன் மூலம் மூளையின் செயல்பாடுகள் திறம்பட ஒழுங்குபடுத்தப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Aug 25, 2026

போர்டிங் பாஸில் குடியேற்ற முத்திரை இனி இல்லை.

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகளின் போர்டிங் பாஸில் குடியேற்ற அதிகாரிகள் முத்திரையிடும் நடைமுறை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது.இதற்கு பதிலாக, குடியேற்ற அனுமதியின்போது பயணிகள் தங்களது இ-போர்டிங் பாஸை ஸ்மார்ட்போன் மூலம் சமர்ப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.புதிய நடைமுறையால் வெளிநாட்டு பயணிகளுக்கான செயல்முறை மேலும் எளிமையாகவும், விரைவாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணம் இனி இன்னும் எளிதாகும்.

Aug 25, 2026

ஆவினை வலுப்படுத்தினால் தனியார் பால் நிறுவனங்களுக்கு சவால்: விஜய் அரசு.

தமிழ்நாட்டின் பால் சந்தையில் குஜராத்தின் அமுல், கர்நாடகாவின் நந்தினி, ஆந்திராவின் ஹெரிடேஜ் மற்றும் திருமலா, தெலங்கானாவின் டோட்லா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் கணிசமான சந்தைப் பங்கைப் பெற்றுள்ளன.தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் நிலையில், அதில் சுமார் 30 லட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையை மாற்ற, ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கூடுதல் பாலை கொள்முதல் செய்வதுடன், கொள்முதல் விலையையும் உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில், நுகர்வோருக்கு மலிவான விலையில் பால் மற்றும் பால் பொருட்களை வழங்குவதன் மூலம் ஆவினின் சந்தைப் பங்கை அதிகரிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் குறைத்து, தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவினை மீண்டும் முன்னணி நிறுவனமாக நிலைநிறுத்த முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Aug 25, 2026

UPI பரிவர்த்தனையில் இந்தியாவின் வரலாற்றுச் சாதனை.

ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.2,366 கோடிUPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்தியா புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. அதே மாதத்தில்UPI பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.29.88 லட்சம் கோடி என பதிவாகியுள்ளது.கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இது19% வளர்ச்சி எனNPCI அறிவித்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா தொடர்ந்து முன்னேறுகிறது.

Aug 25, 2026

பூகம்பம் குறித்து பரவும் முன் எச்சரிக்கை பதிவு.

27.08.2026 அன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.நியூஸிலாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, தைவான், சீனா, மியான்மர், நேபாளம் மற்றும் வடகிழக்கு இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் 8.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், அன்றைய தினத்தில் அதிக எண்ணிக்கையிலான மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படுவதுடன், உலகின் பல்வேறு பகுதிகளில் எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு, மேக வெடிப்பு, கனமழை, சூறாவளி மற்றும் வளிமண்டல வெப்பநிலை உயர்வு போன்ற அசாதாரண நிகழ்வுகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பு: நிலநடுக்கம் ஏற்படும் குறிப்பிட்ட தேதி, நேரம் மற்றும் ரிக்டர் அளவை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பது தற்போது அறிவியல் ரீதியாக சாத்தியமில்லை. எனவே, இதுபோன்ற தகவல்களை அதிகாரப்பூர்வ ஆதாரங்களை சரிபார்த்த பின்னரே நம்பவும், பகிரவும்.

Aug 24, 2026

ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள் , இவை இருந்தால் பல அரசு வேலைகள் எளிதாகும்.  1.ஆதார் அட்டை - அடையாளத்திற்கு மிக முக்கியம். 2.குடும்ப அட்டை - அரசு நலத்திட்டங்கள் அனைத்திற்கும் அவசியம். 3.PAN கார்டு - வங்கி, வரி மற்றும் நிதி செயல்களுக்கு. 4.வாக்காளர் அட்டை - வாக்களிக்கும் உரிமைக்கு மிக முக்கியமானது. 5.பிறப்புச் சான்றிதழ் - கல்வி, பாஸ்போர்ட் மற்றும் அரசு பதிவுகளுக்கு.. 6.வருமானச் சான்றிதழ் - உதவித் தொகை, கல்வி மற்றும் அரசு சலுகைகளுக்கு. 7.சமூக சான்றிதழ் -  கல்வி,மற்றும்வேலைவாய்ப்பு  அரசு திட்டங்களுக்கு. 8.இருப்பிடச் சான்றிதழ் - முகவரி நிரூபிக்க அவசியமானது. 9.வங்கி PASSBOOK - அரசு நிதி உதவிகள் மற்றும் வங்கி செயல்களுக்கு. 10.DRIVING LICENCE / PASSPORT - ஓட்டுநர் உரிமம் / கடவுச்சீட்டுஅடையாளம் மற்றும் பயணத்திற்குத் தேவையானது.

Aug 24, 2026

பெண்களின் பருவப்பெயர்கள்.

பெண்களின் பருவப்பெயர்கள், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண். 5-7 வயது பெண் - பேதை 8-11 வயது பெண் - பெதும்பை 12-13 வயது பெண் -மங்கை 14-19 வயது பெண்-மடந்தை 20-25 வயது பெண் - அரிவை 26-31 வயது பெண்- தெரிவை 32-40 வயது பெண் - பேரிளம்பெண்

Aug 24, 2026

எல்லாவற்றுக்கும் பாராசிட்டமால் வேண்டாம்.

மருத்துவர்களின் ஆலோசனையின்றி பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்துகளை தானாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.குறிப்பாக, கடும் வெயிலால் உடல் வெப்பநிலை அதிகரிப்பது, மயக்கம் அல்லது சோர்வு ஏற்படுவது போன்ற அறிகுறிகளை சாதாரண காய்ச்சல் என நினைத்து பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை கொடுக்கக்கூடாது. வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்கு முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

Aug 24, 2026

Emirates பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்.

இந்திய பயணிகள் இனி Emirates விமான , டிக்கெட்டுகளை ஒரே தவணையாக செலுத்த வேண்டியதில்லை. 3 முதல் 36 மாதங்கள் வரை EMI முறையில் கட்டணத்தை செலுத்தி, சுமார் 140 இடங்களுக்கு பயணம் முன்பதிவு செய்யலாம்.

Aug 22, 2026

Instamart-ல் HP Navya சிறிய கேஸ் சிலிண்டர் சேவை.

HPCL நிறுவனத்துடன் இணைந்துInstamart, HP Navya என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சேவையின் மூலம் வழக்கமான வீட்டு LPG இணைப்பு இல்லாதவர்களும் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையிலான சிறிய சிலிண்டர்களை ஆர்டர் செய்யலாம்.சேவையின் அம்சங்கள்:கேஸ் இணைப்பு இல்லாமலும் வாங்கும் வசதி. எடுத்துச் செல்ல எளிதான வடிவமைப்பு. பாதுகாப்பு தரநிலைகளுடன் தயாரிக்கப்பட்டது. அவசர மற்றும் குறுகிய கால தேவைகளுக்கு ஏற்ற சேவை.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 136 137

AD's



More News