25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜவுளித்துறை சார்ந்த இலவசப் பயிற்சிகள், மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜவுளித்துறை சார்ந்த இலவசப் பயிற்சிகள், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மற்றும்  தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Courses) மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் மற்றும் அச்சிடுதல் (Certificate in Textile Painting, Dyeing & Printing Courses) போன்ற  பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

 வழங்கப்படும் பயிற்சிகள்: 

1. ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Courses)

 2.    துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல்* (Certificate in Textile Painting, Dyeing & Printing Courses) 

தகுதி மற்றும் நிபந்தனைகள்: வகுப்பு:  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC / ST) வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி:  12-ஆம் வகுப்பு (Plus Two) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:  18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

ஆண்டு வருமானம்:  குடும்ப ஆண்டு வருமானம் *ரூ.3.00 லட்சத்திற்குள்* இருக்க வேண்டும். 

பயிற்சியின் சிறப்பம்சங்கள்: கால அளவு:    4 மாதங்கள் 

இடம் மற்றும் தங்குமிடம்:    இப்பயிற்சி *கோயம்புத்தூர்* மாவட்டத்தில் நடைபெறும். தேர்வு செய்யப்படும் நபர்கள் அங்கு தங்கிப் படிப்பதற்கான விடுதி மற்றும் உணவுச் செலவினங்கள் முழுவதையும் *தாட்கோ (TAHDCO)* ஏற்கும். 

சான்றிதழ் & வேலைவாய்ப்பு:     பயிற்சி நிறைவுற்றதும் சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன், தகுதியான நபர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் *ரூ.25,000/- முதல் ரூ.50,000/- வரை* ஆரம்ப கால ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான *www.tahdco.com* என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News