25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மாற்றங்களுடன் புதிய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் ஜூலை 15 முதல் பயன்பாட்டுக்கு....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றங்களுடன் புதிய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் ஜூலை 15 முதல் பயன்பாட்டுக்கு....

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் ஜூலை 15 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது மாணவர் ஒருவர், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்கள், ‘கேப்ட்சா’ சரிபார்ப்பு நடைமுறை மற்றும் தட்கால் டிக்கெட் முன்பதிவு நேரங்களில் இணையதளம் செயலிழப்பது போன்ற பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் லட்சக்கணக்கான பயணிகள் சிரமம் அடைவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்றும் கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ரயில்வே உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். மேலும், புதிய மற்றும் அதிவேக தொழில்நுட்ப வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், அது ஜூலை 15 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

புதிய இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செயல்முறை மேலும் எளிமையாகவும், விரைவாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News