இந்திய அணி 9-வது முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட் சாம்பியன் !
துபாயில் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் ,நேற்றிரவுஅரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும்மோதின. 41 ஆண்டுகால ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகள் இறுதி ஆட்டத்தில் முதல்முறையாக மல்லுகட்டியதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
முதலில் பந்து வீச்சை 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்தார் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தக்க வைத்தது.
இத்தொடரில் தோல்வியே சந்திக்காத இந்தியா 7 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று கோப்பையை முத்தமிட்டு இருக்கிறது. பாகிஸ்தானையும் 3 முறை போட்டுத் தாக்கி இருக்கிறது.இந்தியஅணி ஆசிய கோப்பையை வெல்வது இது 9-வது முறையாகும். இதற்கு முன்பு 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018, 2023-ம் ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
0
Leave a Reply