25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 10, 2026

டாலரை முறியடித்த ரஷ்ய ரூபிள்.

இந்த ஆண்டின் இந்த காலாண்டில், அமெரிக்க டாலருக்கு எதிராக உலகின் சிறந்தசெயல்பாட்டைக் கொண்ட நாணயமாக உருவெடுத்துள்ளது. உக்ரைன் போர் ரூபிள் ரஷ்யமற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகும், ரஷ்யா தனது அந்நியச்செலாவணி கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியதாலும், எரிசக்தி ஏற்றுமதி மீதான கட்டாயநடவடிக்கைகளாலும் ரூபிளின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில்டாலரின் ஆதிக்கம் சவாலுக்கு உள்ளாகி வரும் நிலையில், ரூபிளின் இந்த திடீர் எழுச்சி உலகப்பொருளாதார வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Jun 10, 2026

தியேட்டருக்கு குட்பை சொல்லும் மெகா சைஸ் 85-இன்ச் 4K SONY TV அறிமுகம்!

பிரபல முன்னணி நிறுவனமான Sony, தனது பிரம்மாண்டமான புதிய Sony Bravia 3II 4K ஸ்மார்ட் டிவிகளை இந்திய சந்தையில் அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது. தியேட்டர் போன்ற திகைப்பூட்டும் அனுபவத்தை வீட்டிலேயே தரும் இந்த டிவிகள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் களமிறங்கியுள்ளன.இந்த டிவிகளின் ஆரம்ப விலை ரூ. 99,990 முதல் தொடங்குகிறது.அசரடிக்கும் முக்கிய அம்சங்கள் (Specifications):📺 டிஸ்ப்ளே மேஜிக்: அல்ட்ரா ஸ்மூத் அனுபவத்திற்காக 120Hz Refresh Rate டிஸ்ப்ளே.🧠 மூளையாகச் செயல்படும் ப்ராசஸர்: சோனியின் சொந்த பிரத்யேக XR Processor இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது காட்சிகளின் தரத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும்.🔊 ஆடியோ & வீடியோ: தியேட்டர் தரத்திலான ஒலியைத் தரும் Dolby ஆடியோ ஆதரவு மற்றும் துல்லியமான காட்சிகளுக்கு Dolby Vision தொழில்நுட்பம். கேமர்களுக்கு கொண்டாட்டம் (Gaming Features):பிளேஸ்டேஷன் மற்றும் ஹெவி கேமிங் பிரியர்களுக்காக இந்த டிவியில் அசத்தலான கேமிங் அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன:HDMI 2.1 & VRR (Variable Refresh Rate) சப்போர்ட்.அல்டிமேட் கேமிங் கிராபிக்ஸிற்காக Dolby Vision Gaming வசதி.PS5 (PlayStation 5) கன்சோலுடன் மிக எளிதாக கனெக்ட் செய்து விளையாடும் அம்சம்.🤖 ஸ்மார்ட் வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஆதரவு:இந்த டிவி உங்கள் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கூகுள், அமேசான் மற்றும் கூகுளின் லேட்டஸ்ட் ஏஐ அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன:வீட்டில் ஒரு மினி தியேட்டரையே உருவாக்க வேண்டும், அதே சமயம் கேமிங்கிற்கும் பட்ஜெட் பார்க்காமல் பெஸ்ட் டிவி வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சோனி பிராவியா 3II ஒரு பக்காவான சாய்ஸ்!

Jun 09, 2026

எடை குறைப்பு மாத்திரைக்கு ஒப்புதல்.

உடல் எடையைக் குறைக்கும் Wegovy (Semaglutide) மாத்திரைக்கு அமீரக மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (EDE) ஒப்புதல் அளித்துள்ளது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கும் திறனும் இந்த மாத்திரைக்கு உள்ளதாக EDE தெரிவித்துள்ளது.

Jun 09, 2026

அறிவுப்பூர்வமான பறவை.

உலகின் ஒரே ஆல்ப்ஸ் வகை கிளியான 'கியா' (Kea) பறவைகள், பூமியின் மிக உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. அறிவார்ந்தu உயிரினங்களின் ஒன்றாக கருத்தப்படுகின்றன. நியூசிலாந்தின் மலைப்பகுதிகளில் காணப்படும் இந்த கிளி இனங்கள், புதிர்களை விடுவிப்பதிலும், மனிதர்களின் பைகளைத் திறந்து உணவுகளைத் திருடுவதிலும் மிகவும் கெட்டிக்காரத்தனமானவை. நிறுத்தப்பட்டுள்ள கார்களில் உள்ள பாகங்களைக் கழற்றுவது போன்ற விசித்திரமான மற்றும் குறும்பான செயல்களில் ஈடுபடுவதால், இவை ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. இவற்றின் அறிவுத்திறன் மற்றும்ரப்பர்பாகங்களைகழற்றுவதுபோன்ற விசித்திரமானமற்றும்குறும்பானசெயல்களில்ஈடுபடுவதால், இவை ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. இவற்றின் அறிவுத்திறன் மற்றும் குறும்புத்தனமான குணம், இவற்றுக்கு 'மலைகளின் கோமாளி' என்ற பெயரையும் பெற்றுத் தந்துள்ளன.

Jun 09, 2026

டிஜிட்டல் மோசடிகளுக்கு செக் வைத்த சிபிஐ

ஆன்லைன் உலகை அச்சுறுத்தி வரும் 'டிஜிட்டல் கைது' மோசடிகளில் இருந்து மக்களைக் காக்க சிபிஐ ஒருசூப்பர்அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘அபய்’ என்ற புதிய AI (செயற்கை நுண்ணறிவு) வசதியை அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். இணைய மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க, பொதுமக்கள் அனைவரும் இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Jun 08, 2026

“AC ஓடும்போது Fan போடலாமா”? .

Room சீக்கிரம் குளிரும்.AC cooling எல்லா இடத்துக்கும் பரவும்.Current bill குறையும்.AC load (long life ).Humidity குறையும் (stickiness குறையும்).கவனிக்க வேண்டியது. Fan speed அதிகமாக வேண்டாம்.Direct காற்று உடம்புக்கு அடிக்க கூடாது.மிகவும் குளிர் இருந்தால் fan off பண்ணவும்.

Jun 08, 2026

குழந்தையை அமைதியாக்க செல்போன் கொடுக்கிறீர்களா? .

 "கொஞ்ச நேரம் தான்...”ன்னு ஆரம்பிக்கும் phone...மெதுவாக குழந்தையின் உலகமாய் மாறிடும்...சாப்பிட phone...அழுதா phone ...தூங்க phone ...ஒரு நாள்... phone இல்லாமல் இருக்கவே முடியாத நிலை வரும்... அதிக மொபைல் usage -னால் -  கண் பாதிப்பு, concentration குறைவு, கோபம் & எரிச்சல்,தூக்கமின்மை, social skills குறைவு. குழந்தைக்கு தேவையானது...Screen இல்ல.attention.....affection......Interaction. phone கொடுப்பதற்கு பதில் புத்தகம்,விளையாட்டு,Family conversation ,Outdoor time கொடுங்கள்.  "குழந்தையின் childhood- ஐ Mobile screen வளர்க்க கூடாது.,.பெற்றோரின் அன்பு வளர்க்க வேண்டும்.

Jun 08, 2026

உங்க போன் ஸ்பீக்கரில் தூசி விழுந்து சத்தம் கம்மியா கேக்குதா?.

கூகுளில் "Fix My Speakers' என்று தேடுங்கள். அந்த வெப்சைட்டில் ஒரு பட்டன் இருக்கும், அதை அழுத்தினால் ஒருவித அதிர்வு சத்தம் (Vibration Sound) வரும். அந்த சத்தம் உங்கள் ஸ்பீக்கரில் இருக்கும் தூசி மற்றும் தண்ணீரைவெளியே தள்ளிவிடு்ம்.

Jun 08, 2026

மும்பையில் நாட்டின் மிகப்பெரிய தரவு மையம் (Data Centre - AirTrunk).

ஆஸ்திரேலியாவின் 'ஏர்டிரங்க்' (AirTrunk) நிறுவனம், அமெரிக்காவின் 'பிளாக்ஸ்டோன்' உதவியுடன் மும்பையில் ₹2 லட்சம் கோடி முதலீட்டில், 3 GW திறன் கொண்ட நாட்டின் மிகப்பெரிய தரவு மையத்தை அமைக்கவுள்ளது.

Jun 08, 2026

இந்திய ராணுவத்தின் புதிய சாதனை,கிளைடு சோதனை வெற்றி.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இந்திய விமானப்படை (IAF) இணைந்து, ஒடிசா கடற்கரையில் 'TARA' (Tactical Advanced Range Augmentation) அமைப்பின் முதல் விமான சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.சாதாரண வெடிகுண்டுகளை ஸ்மார்ட் குண்டுகளாக மாற்றும் 'டாரா கிளைட் கிட்"ஒடிசா கடற்கரையில் ஜாக்குவார் விமானத்தின் மூலம் வெற்றிகரமாக செலுத்தி சோதனை.கிளைட் கிட் பொருத்தப்பட்ட குண்டு இலக்கை துல்லியமாக தாக்கியதாக தகவல்.டாரா பொருத்தப்பட்ட குண்டுகளை எதிரிகளின் வான்பாதுகாப்பு அமைப்புக்கு வெளியே இருந்து வீச முடியும்.கிளைட் ஏவுகணைகளுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த செலவில் தயாரிக்கலாம் எனத் தகவல்.இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இந்திய விமானப்படை (IAF) இணைந்து, ஒடிசா கடற்கரையில் 'TARA' (Tactical Advanced Range Augmentation) அமைப்பின் முதல் விமான சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

1 2 ... 34 35 36 37 38 39 40 ... 137 138

AD's



More News