பாம்பன் பால திறப்பு விழா , பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் .
பிரதமர் மோடி இலங்கை அனுராதபு ரத்தில் இருந்து ஹெலி காப்டரில் புறப்பட்டு மன்னார் வளைகுடா டு கடல் வழியாக மண்டபம் வந்த போது தனுஷ்கோடி, இலங்கை தலைமன்னார் இடையே 35 கி.மீ.,ல் ராமபிரான் அமைத்த ராம் சேதுபாலத்தை பார்வையிட்டு தரிசித்தபடி வந்தார். ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலத்தை ,பிரதமர் மோடி மதியம் 12:55 மணிக்கு ரிமோட் மூலம் ஏப்ரல் 6, 2025 அன்று புதிய ரயில் பாலத்தின் தூக்கு பாலத்தை திறந்து வைத்தார்.
ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, இது நாட்டின் முதல் செங்குத்து லிப்ட், ரயில் கடல் பாலம் என்றார், இது அப்துல்கலாம் மண். அறிவியலும், ஆன்மிகமும் ஒன்றிணைந்தது என்பதை, அவரது வாழ்க்கை நமக்கு கற் பித்துள்ளது. அதுபோல, ராமேஸ்வரம் வரையிலான புதிய பாம்பன் பாலம் பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை, 21ம் நுாற்றாண்டின் பொறியியல் அதிசயத்தின் வாயிலாகஇணைத்திருக்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன் இப்பாலத்தை கட்டி யவர் குஜராத்தைச் சேர்ந்த வர். இன்று திறந்து வைத் ததும், குஜராத்தில் பிறந்த நான். இவ்வாறு மோடி பேசினார்.
இந்தியாவையும் இலங்கையையும் பின்னர், இலங்கையையும் ஆதாம் பாலம் வழியாக இணைக்கும் யோசனை முதலில் 1876 இல் ஆராயப்பட்டது. அதிக செலவுகள் காரணமாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இறுதியில், 1906 ஆம் ஆண்டில் மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடிக்கு ஒரு ரயில் பாதை, மற்றும் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு ஒரு நீராவி கப்பல் சேவை.இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பாலம், அந்தக் காலத்தின் ஒரு பொறியியல் அற்புதமாகும். மதுரை விமான நிலையத்தில் பிரதமருக்கு தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், மதுரை ஆட்சியர் எம்.எஸ். சங்கீதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
0
Leave a Reply