செவ்வாய் கிரகத்தில் ...
வருங்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பல நாடுகளுக்கு உள்ளது. அவ்வாறு அனுப்பும்போது அங்குள்ள குறைந்த ஈர்ப்பு விசையால் சிறுநீரகம் பாதிக்கப்படும். இதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த ஆய்வுகளை இங்கிலாந்தைச் சேர்ந்த யு.சி.எல். பல்கலை மேற்கொண்டு வருகிறது.
செவ்வாய் கிரகத்தில் ஒவ்வோர் ஆண்டும் 180 முதல் 260 விண்கற்கள்விழுவதாக நாசாதெரிவித்துள்ளது. நாசா அனுப்பிய இன் ஸைட் லாண்டர் விண் கலம் ஏற்கனவே எடுத்த செவ்வாயின் படங்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இது தெரியவந்துள்ளது -
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வியாழனை ஆராய்வதற்காக அனுப்பிய விண் கலம் ஜூனோ. இது தற்போது வியாழனின் துணைக்கோளான ஐஓவின் படங்களை அனுப்பியுள்ளது. இதிலிருந்து அங்கு எரிமலை குழம்புகள் ஆறு போல் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
0
Leave a Reply