சுண்டல், பட்டாணி குருமா
தேவையான பொருட்கள் : 1 கப் கருப்பு சுண்டல்,1 கப் பட்டாணி,4 பெரிய வெங்காயம்,2 பச்சைமிளகாய், 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1ஸ்பூன் மல்லித்தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள்,1டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தூள்,1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையான அளவுகல் உப்பு,
சிறிதுகறிவேப்பிலை, சிறிதுகொத்தமல்லி தழை, 1/2 கப் கடலெண்ணெய் ,1ஸ்பூன் கடுகு,1/2 ஸ்பூன் சோம்பு,
மசாலா அரைக்க: 1 மூடி தேங்காய், 4 தக்காளி, 15 பல் பூண்டு, சிறிய துண்டு இஞ்சி
செய்முறை :
சுண்டல் மற்றும் பட்டாணியை எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் .பின் கழுவி தண்ணீரை வடிகட்டி குக்கரில் போட்டு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும்.
ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு முறை கிளறி விடவும். பின் மசாலா அரைக்க கொடுத்துள்ள தேங்காயை நறுக்கி கொள்ளவும் .பின் அதனுடன் இஞ்சி பூண்டு தோல் நீக்கி தக்காளி உடன் சேர்த்து கழுவி எடுத்து கொள்ளவும்.
தேங்காயை முதலில் இரண்டு சுற்று சுற்றி அதனுடன் நறுக்கிய தக்காளி இஞ்சி பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
குருமா செய்ய வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு ,சேர்த்து வெடித்ததும் நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சேர்த்து வதக்கவும் .பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
மெல்லிய தீயில் வைத்து எட்டு நிமிடம் வரை நன்றாக வதக்கவும். பின் வேகவைத்த சுண்டல் மற்றும் பட்டாணியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான ஆரோக்கியமான டிபன் வகைகளுக்கு ஏற்ற சைவ குருமா ரெடி.
0
Leave a Reply