பிரீமியம் ரக கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களிலேயே பெரிய மோசடி. காலாவதி தேதியை முறையாகச் சரிபார்க்காமல் வாங்காதீர்கள்.
நாம் அன்றாடம் வாங்கும் பிரீமியம் ரக கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களிலேயே இவ்வளவு பெரிய மோசடியா? வெளிநாடுகளில் காலாவதியான பிஸ்கட்கள் மற்றும் உணவுப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, இந்தியாவில் புதிய பேக்கிங் செய்து, காலாவதி தேதியை மாற்றி விற்பனை செய்த கும்பலை டெல்லி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சுமார் ₹4.3 கோடி மதிப்பிலான 43,000 கிலோ பொருட்களைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறை, இந்த மோசடி நீண்ட காலமாக நடைபெற்று வந்ததாகத் தெரிவித்துள்ளது. பிரபலமான பிராண்டுகள் என்றாலும், நீங்கள் வாங்கும் எந்தவொரு பேக் செய்யப்பட்ட உணவுப் பொருளின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை முறையாகச் சரிபார்க்காமல் வாங்காதீர்கள்.
0
Leave a Reply