25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 21, 2024

20 லட்சம் வசூலித்து ஏழைக் குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் கட்டிய பி.டி.உஷா.

.இதுவரை 18 தங்கப் பதக்கங்கள், 13 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 100க்கும் மேற்பட்ட சர்வதேசப் பட்டங்களை வென்றுள்ள பி.டி.உஷா.20 லட்சம் வசூலித்து ஏழைக் குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் கட்டியுள்ளார்.ஏழைக் குழந்தைகளுக்காக நிதி வசூலித்து கட்டியுள்ள P.T.உஷாவை  மனதாரப் பாராட்டுகிறோம்.

Sep 19, 2024

தீ விபத்து

தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.தீ விபத்தில் காயமுற்றோருக்கு உரிய முதலுதவி செய்த பின்பு மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.உடைகளில் தீ பிடித்தால் தரையில் படுத்து,உருண்டு, தீயினை அணைக்க வேண்டும். தீ விபத்து ஏற்படும்போது கூச்சலிட்டோ, விசில் அடித்தோ, சுவர்களில் தட்டியோ அனைவரையும் எச்சரிக்க வேண்டும்.தீ விபத்தின் போது மின்சாரம், சமையல் எரிவாயு கலன் ஆகியவற்றின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.கட்டடத்தில் இருந்து தப்பிக்கும் போது தரையில் குனிந்தபடி தப்பிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் புகையினைச் சுவாசித்து உயிரிழக்க நேரிடும்.வீடுகள் , பள்ளி , அலுவலகங்களில் தீயை அணைப்பதற்கான உபகரணங்களை பொருத்தி பாதுகாக்க வேண்டும்.

Sep 19, 2024

அழியும் தாவரங்களின் பட்டியலில் நீலக்குறிஞ்சி

நீலக்குறிஞ்சி செடிகள் அழியும் தாவரங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு (ஐ.யு.சி.என்.,) தெரிவித்துள்ளது. நீலக்குறிஞ்சி மலர்கள் அரிதான தாவரம், பாதுகாக்கப்பட வேண்டிய தாவரம் என தெரிவித்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் சோழா காடுகளில் காணப்படும் புதர்செடி தான் நீலக் குறிஞ்சி. இவை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூ பூக்கின்றன. ஊதா நிறத்திலான இந்த நீலக்குறிஞ்சி மலர்களில் இருந்து தான் நீலமலை என்ற பொருள்படும் நீலகிரி மலை என்ற பெயர் வந்தது.

Sep 18, 2024

மழைக்கால பாதுகாப்பு' வழிமுறைகள்

அதிக மழையின் போது மரங்கள், பாதுகாப்பற்ற இடங்களில் நிற்பதை தவிர்க்கவும். ஈரமான கைகள், கால்கள் உடன் மின் இணைப்புகள் மற்றும் ஸ்விட்சிகள் மேல் கை வைக்க வேண்டாம். பலத்த காற்று, மழையின் போது வீட்டின்முக்கிய மின் இணைப்பை துண்டித்து விடவும். மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காமல் பாதுகாத்துக் கொள்ளவும். வீட்டில் உள்ள கால்நடைகளை மழையின் போது மின் கம்பங்களில் கட்டி வைக்க கூடாது. தாழ்வான பகுதியில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடத்தில் குடியேறுவது அவசியம்.

Sep 18, 2024

ABOVE 65 வயதை கடந்தவர்கள் உங்களை எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

கூடுமானவரை துணை இன்றி படிகளில் ஏறாதீர்கள், வேகமாக திரும்பாதீர்கள். கால் பாதத்தை தொடுமாறு குனியாதீர்கள்.நின்றவாறு கால்சட்டை  மாட்டிக் கொள்ளாதீர்கள்..Sit-ups அதாவது எதையும் பிடிக்காமல் மல்லாக்க படுத்தபடி தலையை உயர்த்தி எழுந்திருப்பதான பயிற்சிகளை செய்யாதீர்கள்..இடுப்பை இடமும் வலமுமாக திருப்பாதீர்கள்.பின்புறமாக நடக்காதீர்கள்..எடை கூடிய பொருட்களை குனிந்து தூக்காதீர்கள்.படுக்கையில் இருந்து எழும் போது உடனடியாக எழுந்து நிற்கவோ நடக்கவோ செய்யாதீர்கள் உங்களை எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள் அடைத்துக் கொண்ட உணவானது தானாக இறங்கும். சரியான தலையனையே உபயோகிக்காவிட்டால் கழுத்துவலிக்கும் அப்போது கால்களை ஓவ்வொன்றாக உயர்த்தி கால் விரல்களை மிருதுவாக பிசைந்து கொள்ளுங்கள் வலி சரியாகும். கால்களில் திடீரென தசை இறுக்கமோ அல்லது சுளுக்கு ஏற்பட்டது போல் வலியோ வந்தால் எதிர்பக்க கையை உயர்த்த வேண் டும்,வலது கால் வலித்தால் இடது கையையும், இடதுகால் வலித்தால் வலது கையையும் உயர்த்துங்கள். நீங்கள் நலமாக உணர்வீர்கள்.திடீரென பாதத்தில் கூச்சம் ஏற்பட்டால்  எதிர்புறத்து உள்ளங்கையை வேகமாக சுழற்றுங்கள்.

Sep 18, 2024

பட்டு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

பட்டு ஆடைகள் விஷேசமானது. பட்டு என்பது பட்டுப் பூச்சியின் கூடுகளில் சுரக்கும் இழை, மல்பெரி இலைகளை உண்ணும் பட்டுப்புழுக்களிலிருந்து இவை பெறப்படுகின்றன. பட்டுப்புழுவின் ஆயுட்காலம் 2 மாதம். இதன் வாழ்க்கை சுழற்சி என்பது முட்டை, லார்வா நிலை (கம்பளிப்பூச்சி), கூட்டுப்புழு (குக்கூன்), பட்டுப் பூச்சி என நான்கு வளர்ச்சி நிலைகளைக் கொண்டுள்ளது. பட்டுபூச்சிகளை வளர்த்து அதிலிருந்து பட்டு தயாரிக்கப்படுவது 'செரிகல்சர்' என அழைக்கப்படுகிறது. பட்டு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

Sep 17, 2024

ஆதார் அட்டை போல் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டம்

நாடு முழுவதும் பொது மக்களுக்கு ஆதார் அட்டை போல் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. "விவசாயிகள் பற்றிய தனிப்பட்ட தரவுகள் இல்லை என்பதால், அந்த குறையை போக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும். விவசாயிகள் பெயர்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இத்திட்டத்தின் மூலம் பல்வேறு வேளாண் திட்டத்தின் பயன்களை விவசாயிகள் பெற முடியும் என்று டெல்லியில் நடந்த வேளாண் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் வேளாண் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் மாதத்திற்குள் 5 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.

Sep 17, 2024

விசேஷ வீடுகளில் வாழை மரங்களை வைப்பதற்கு பின்னால் பெரிய விஞ்ஞான காரணம்?

வாழை இலைகள் பெரிதாக இருப்பதால், அது அதிக அளவிலான ஆக்சிஜனை தேக்கி வைத்து வெளியிடும். விசேஷங்களில் மக்கள்கூட்டம் கூடும் போது,கார்பன் டை ஆக்சைடுவெளிப்பாடு பொதுவாகவே அதிகமாக இருக்கும்.இதனால் மூச்சுத்திணறல்ஏற்படும். இதனை தடுக்கவே.,நம் முன்னோர்கள் விசேஷ வீடுகளில் வைத்து வந்துள்ளனர்.

Sep 16, 2024

புண்ணிய மாதமான புரட்டாசி மாதம்

புண்ணிய மாதமான புரட்டாசி மாதம் இந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி துவங்குகிறது.புரட்டாசியின் முதல் மற்றும் கடைசி ஆகிய இரண்டு நாட்களுமே பௌர்ணமி திதியாக அமைவதால், இந்த நாளில் செய்யப்படும் சத்ய நாராயண பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.செப்டம்பர் 17ம் தேதி துவங்கி, அக்டோபர் 17ம் தேதி வரை அமைந்துள்ள புரட்டாசி மாதம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது.புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தியும் வது சனிக்கிழமையில் ஏகாதசியும் கடைசி சனிக்கிழமையில் திருவோண விரதம் விஜய் தசமி ஆகியனும் , அதற்கு அடுத்த நாளே ஏகாதசியும்வருவதாக அமைந்துள்ளது.அக்டோபர் 02 ம் தேதியான புதன் கிழமை மகாளய அமாவாசை யும், 2 பவுர்ணமிகளும் புரட்டாசி மாதத்தில் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.இந்த மாதத்தில் அசைவத்தை அறவே தவிர்க்க வேண்டும். சைவ உணவை உண்டு, விரதமிருந்து வெங்கடாசலபதியை வழிப்படுவது சிறப்பு.இந்த மாத சனிக்கிழமைகளில் விரதமிருந்து புரட்டாசி தளிகை சமைத்து பெருமாளை வழிப்படுவது சிறப்பு. இந்த நாளில் 108 திவ்ய தேசங்களிலும் வழிபாடு களைக்கட்டும்.இந்த மாதத்தில் திருப்பதி கோயிலுக்கு சென்று வழிப்பட்டு முடி காணிக்கைகளை செலுத்தலாம். பெருமாளுக்கு காணிக்கை, நேர்த்தி கடன் களை செய்ய உகந்த மாதம்.இந்த மாதத்தில் திருமணம் போன்ற விஷேங்கள் செய்வதில்லை. இந்த மாதத்தில் மட்டும் தான் மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபாடுவார்கள்.

Sep 16, 2024

மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபர்

வட அமெய்க்காவின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு லத்தீன் அமெரிக்க நாடுதான் மெக்ஸிகோ. இந்த நாட்டின் 200 ஆண்டுகளாக வரலாற்றில் பெண் ஒருவர் அதிபராக அரியணை ஏறியுள்ளார்.யூத இனத்தைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய கிளாடியா ஷெயின்ஸ்பாம் பார்டோ என்பவர்தான் அந்தப் பெண். அரசியல்வாதி விஞ்ஞானி கல்வியாளர் எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. நேஷனல் ரீஜெனரேஷன் மூவ்மென்ட் என்ற இடதுசாரிக் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.2000 முதல் 2006 ம் ஆண்டு வரை அப்போதைய அதிபரான ஆண்ட்ரெஸ் மானுவல் லோபெஸ் ஒப்ரேடார் தலைமையிலான அரசில் சுற்றுச்சூழல் செயலாளராகப் பதவிவகித்துள்ளார். 2015 முதல் 2017 ம் ஆண்டு வரை லால்பான் நகரத்தின் மேயராகப் பணியாற்றியிருக்கிறார். பின்னர் மெக்ஸிகோவின் ஹெட் ஆப் தி சிடி என்ற பதவியையும் வகித்திருக்கிறார். மெக்ஸிகோ நாட்டின் நேஷனல் அட்டானமஸ் பல்கலைக்கழத்தினால் எனர்ஜி இஞ்சினீயரிங் பிரிவில் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆற்றல்கள் சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த வளர்ச்சித் தொடர்பாக 100 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இரண்டு புத்தகங்களையும் கிளாடியா எழுதியிருக்கிறார்.மிகச் சிறந்த பெண்ணியவாதி என்றும் இவரைக் கொண்டாடுகிறார்கள். பால் வேறுபாடுகள் காரணமாகப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இவரின் குரல் ஓங்கி ஒலிக்கும். கருக்கலைப்பைச் சட்டபூரவமாக்க வேண்டும் என்பது இவருடைய ஆணித்தரமான கருத்து.திரு நங்கைகள் ஆகியோரின் உரிமைக்காகவும் பாடுபடுபவர் கால நிலை மாற்ற விஞ்ஞானியான இவரை 2018 ம் ஆண்டு சிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசி தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மெக்ஸிகோ அதிபர் தேர்தலில் கடந்த 200 ஆண்டுகளில் ஒரு பெண் கூட அந்தப்பதவிக்கு வந்ததில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் இந்த ஆண்டு கடந்த ஜூனில் நடைபெற்ற மெக்சிகோ அதிபருக்கான தேர்தலில் கிளாடியா ஷெயின்ஸ்பாம் பார்டோ போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சோச்சிட் கால்வேஸ் மற்றும் ஜார்ஜ் அல்வாரெஸ் ஆகியோரைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியுள்ளார்.மொத்த வாக்குகளில் 60% வாக்குகளை கிளாடியா பெற்றிருக்கிறார். மெக்ஸிகன் வரலாற்றில் ஒரு வேட்பாளருக்கு இதுவரையில் கிடைத்திராத அளவுக்கு அதிக எண்ண்க்கையிலான வாக்குகள் இவருக்குக் கிடைத்திருக்கின்றன. இது நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களுக்குமான வெற்றி என்று தமது மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார் கிளாடியா.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 46 47

AD's



More News