லடாக்:நுன்-குன் சிகரங்களுக்கு அருகே, சுமார் 18,600 அடி உயரத்தில், காயமடைந்து சிக்கித் தவித்த மலையேறும் நபரை இந்திய ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் மீட்டுள்ளனர்.கடும் பனிப்பொழிவு, பலத்த காற்று மற்றும் மிகக் குறைந்த ஆக்சிஜன் அளவு என உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவியபோதும், இந்திய ராணுவ வீரர்கள் மேற்கொண்ட இந்த மீட்புப் பணி.
கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டி – 2026.அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா வரலாறு படைத்துள்ளார்!அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனும் அமெரிக்க வீரருமான ஃபேபியானோ கருவானாவை 15–13 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ.1.91 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.தன்னம்பிக்கை! திறமை! விடாமுயற்சி! வெற்றி!இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்! இந்தியாவின் பெருமை சாதனைகள் தொடரட்டும். மேலும் உயரட்டும்!
AI பயன்பாடுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய தரவு மையங்களை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.OpenAI, அமெரிக்காவின் ஓஹியோவில் 10 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையத்தை உருவாக்குவதற்காக SoftBank நிறுவனத்தின் SB Energy உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு Nvidia-வின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது.இந்தியாவிலும் தரவு மைய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. HCLTech நிறுவனம் தரவு மையங்களில் ரூ.3,500 கோடி முதலீடு செய்யும் திட்டங்களை அறிவித்துள்ளது. அதேபோல், 1 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையப் பிரிவை உருவாக்க TCS நிறுவனம் 7 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளுக்கு அளவோடு கொடுக்க வேண்டிய உணவுகள்!குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக கீழ்க்கண்ட உணவுகளை அடிக்கடி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.அதிக சாக்லேட் குளிர்பானங்கள் பிரெஞ்ச் ஃப்ரைஸ் பர்கர் உள்ளிட்ட ஃபாஸ்ட் ஃபுட் மிட்டாய்கள் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் க்ரீம் கேக் செயற்கை பழச்சாறு பானங்கள் பாக்கெட் ஸ்நாக்ஸ் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள் அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறிகள், முட்டை, பருப்பு வகைகள் மற்றும் வீட்டில் தயாரித்த சத்தான உணவுகளை வழங்குவது சிறந்தது.
இந்தியாவின் புகழ்பெற்ற இயற்பியலாளர் பேராசிரியர் தீபக் தாருக்கு 2026ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க Dirac Medal வழங்கப்பட்டுள்ளது.Statistical Mechanics எனப்படும் புள்ளியியல் இயற்பியல் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. Theoretical Physics துறையில் மிக உயர்ந்த மதிப்பைப் பெற்ற விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் Dirac Medal, உலகின் தலைசிறந்த இயற்பியலாளர்களுடன் தொடர்புடையது.74 வயதான பேராசிரியர் தீபக் தார், இயற்பியல் துறையில் பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் வழங்கப்பட்டுள்ளது.
“கடந்த 10 ஆண்டுகளில் செமிகண்டக்டர் உற்பத்தி முதல் விண்வெளித்துறை வரை நடந்துள்ள சாதனைகள் வியக்கத்தக்கது.ஒரு காலத்தில் கடக்கவே முடியாதவை என்று தோன்றிய தடைகள் இன்று தகர்க்கப்பட்டுள்ளன.தொலைநோக்குப் பார்வையும், உறுதியும் கொண்ட ஒரு தலைவரைத் தேர்வு செய்ததால் இது சாத்தியமானது.”— ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு.
ஒட்டகத்தின் கண்ணீரில் உள்ள சில ஆன்டிபாடிகள் பல்வேறு கொடிய பாம்பு விஷங்களுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டிருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.துபாய் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மையங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில், ஒட்டகத்தில் காணப்படும் சிறப்பு வகை ஆன்டிபாடிகள் 26 வகையான கொடிய பாம்பு விஷங்களுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இத்தகைய சிறிய ஆன்டிபாடி வடிவங்கள் 'நானோபாடிகள்' (Nanobodies) என அழைக்கப்படுகின்றன.இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால், சில நானோபாடிகள் அதிக வெப்பநிலையையும் தாங்கக்கூடியவை என்பதால், எதிர்காலத்தில் பாம்பு விஷ எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கும் ஆராய்ச்சியில் அவை முக்கியத்துவம் பெறக்கூடும்.குறிப்பு: பாம்பு கடித்தால் இதை எந்த வகையிலும் சிகிச்சையாகப் பயன்படுத்தக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, உரிய antivenom சிகிச்சையைப் பெற வேண்டும்.
உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் ரவி டம்டா, ‘Hapida Sky Private Limited’ நிறுவனத்தின் மூலம் ‘HAPIDA SKYNEX’ என்ற மின்சாரத்தில் இயங்கும் ஒற்றை இருக்கை பறக்கும் வாகனத்தின் முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ட்ரோன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த முழுமையான மின்சார வாகனம், மலைப்பகுதிகளில் நீண்ட நேரம் சாலைப் பயணம் செய்ய வேண்டிய நிலையை குறைத்து, பயண நேரத்தை 10 முதல் 15 நிமிடங்களாகக் குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது
கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமல்ல, கல்வியிலும் சாதனை படைத்த வீரர்களில் ஒருவராக வெங்கடேஷ் ஐயர் குறிப்பிடப்படுகிறார்.வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், CA இடைநிலைத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து நிதித் துறையில் MBA பட்டமும் பெற்றுள்ளார்.மேலும், ரூ.15 லட்சம் மதிப்பிலான டெலாய்ட் நிறுவன வேலைவாய்ப்பை நிராகரித்ததாகவும், மத்திய அரசு வருமான வரித்துறையில் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது நிதித் துறையில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.கிரிக்கெட், கல்வி, தொழில் என பல துறைகளில் ஆர்வத்துடன் பயணிக்கும் வெங்கடேஷ் ஐயரின் முயற்சி பாராட்டுக்குரியது.
நாகப்பட்டினம் விழுந்தமாவடி.மது மற்றும் போதைப் பழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவக் கிராம மக்கள் ஊர்க் கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளனர்.இதன்படி, திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்துவது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், திருமணமானவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சினை ஏற்படுத்தினாலும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விதிமீறல் குறித்து ஆதாரத்துடன் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.இது அரசு விதித்த சட்டம் அல்ல. கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் சமூக நலனைப் பாதுகாக்க மக்கள் தாங்களாக முன்வந்து மேற்கொண்டுள்ள சமூகக் கட்டுப்பாட்டு முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.சமூக நலனுக்காக ஒன்றிணைந்த விழுந்தமாவடி கிராம மக்களின் முயற்சி பாராட்டுக்குரியது!