விளையாட்டு .JANUARY -5 th 2026
ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் ஆமதாபாத்தில்,இந்திய வீராங்கனை வைதேகி சவுத்ரி 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் மரியா கோலோவினாவிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.
ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில்பெங்களூருவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 5-7, 6-7 என, பிரான்சின் ஆர்தர்ரேமண்ட்டிடம் போராடி தோல்வியடைந்தார். இந்தியாவின் மணிஷ் 3-6, 3-6 என, நெதர்லாந்தின் நீல்ஸ் விஸ்கரிடம் தோல்வியடைந்தார்.
ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப், 'டிரஸ்சேஸ்' அணிகள்பிரிவில் மும்பையில் ஸ்டாஸ்யா பாண்ட்யா, ஹரிப்பிரியா சிங், அமரா சிங், தேவ் ஹரிஷ்அடங்கிய மும்பை அணி வெள்ளி வென்றனர்.
0
Leave a Reply