பாதாம் - நரம்புகளுக்கு தேவையான வைட்டமின் E வழங்கும்.வால்நட் - நரம்பு செயல்பாட்டை தூண்டும் நல்ல கொழுப்பு.முருங்கைக் கீரை - மக்னீசியம், வைட்டமின்கள்; நரம்பு சோர்வை குறைக்கும்.வெந்தயம் - நரம்பு பலவீனத்தை மெதுவாக சரிசெய்ய உதவும்.மோர் - குடல் நலம் சீராக இருந்தால் நரம்பு நலமும் மேம்படும்.நல்லெண்ணெய் (அளவோடு) - நரம்பு மென்மை மற்றும் பாதுகாப்புக்கு உதவும்.நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பேரிக்காயை அடிக்கடி உண்டு வர, நரம்புகள் பலம் பெறும்.குறிப்பு - தூக்கக் குறைவு, அதிக மன அழுத்தம், சத்தற்ற உணவு -நரம்பு பலவீனத்தின் காரணங்கள்.
கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதுடன் உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் மிகவும் உதவி செய்கிறது.கொய்யாப் பழத்துடன் சப்போட்டா பழத்தையும் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலு பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும்.நன்றாக பழுத்த கொய்யாப் பழத்துடன் மிளகு, எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வை நீக்குவதுடன், பித்தம் நீங்கும்.
முதல் நாள் இரவில் பீட்ரூட்டை பாதியாக அறுத்து, ஒரு பாதியை தண்ணீரில் ஊற வைக்கவும். காலை எழுந்தவுடன் அந்த பீட்ரூட் தண்ணீரை நன்கு வடிகட்டி குடிக்கவும்.இதை தொடர்ந்து குடித்து வந்தால்உடலில் ஹீமோகுளோபின் அளவு மேம்பட உதவும்.முகம் பளிச்சிடும்.கரும்புள்ளிகள் குறைந்து இயற்கை பொலிவு கிடைக்கும்.
பித்தம் பிரச்சனைகள் தீர எளிய வழிமுறைகள்எலுமிச்சை பித்தத்தை குறைக்கும்.தனியாவும் இஞ்சியும் ஜீரணத்தை அதிகரிக்கும்.உலர் திராட்சை மலச்சிக்கலை போக்கும்.தேன் வயிறு பிரச்சனைகளை சரிசெய்யும்.பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.பித்தம் குறைய தேவையான பொருட்கள் :இஞ்சி – 25 கிராம்,கொத்தமல்லி விதை (தனியா) – 2 ஸ்பூன்,எலுமிச்சை – 1,உலர் திராட்சை – 10,பூண்டு – 4 துண்டுகள்,தேன் – 1 ஸ்பூன்,செய்முறை :இஞ்சியின் தோலைப் சீவி, சிறு துண்டுகளாக வெட்டவும்.தனியா, உலர் திராட்சை, பூண்டு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.பின் இதனை வடிகட்டவும்.எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.இதை மாதம் ஒருமுறை குடிக்கலாம், அல்லது எண்ணெய் பதார்த்தம் கலந்த உணவை உண்டபின் இதனை அருந்தினால் பித்தம் குறையும்.
உடம்பு சூட்டை தணிக்க கருணைக்கிழங்கு.ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்.தலைவலி நீங்க முள்ளங்கி சாறு.தேனுடன் இஞ்சி கலந்து சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.பூண்டில் பென்சிலின் சக்தி அதிகம் உள்ளது."மூலநோய் தீர வாழைப்பூ கூட்டு.வாத நோய் தடுக்க அரைக்கீரை.வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.உடல் பருமன் குறைய முட்டைக்கோஸ்.பித்தம் தணிக்க நெல்லிக்காய்.வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.
எலும்பு வலுவாக இருக்க பால், மோர். வெந்தயம், எள், ராகி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள்,முட்டையின் மஞ்சள் கரு, காளான் ஆகிய வைட்டமின் டி உணவுகள்,துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பாதாம், வால்நட் போன்ற புரதம் நிறைந்தவை.வாழைப்பழம், பேரீச்சை, கடலை பருப்பு, பூசணி, சூரியகாந்தி விதை ஆகிய மெக்னீசியம், பாஸ்பரஸ் இருப்பவை. அதேநேரம், இனிப்புகள், குளிர்பானம்,கூடுதல் உப்பு மற்றும் அளவுக்கதிமான காஃபின் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.சுத்தமான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும்.காரமான உணவுகள்,காபி,மதுபானம் தவிர்க்க வேண்டும். தண்ணீர், தயிர், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.நெலிக்காய் சாறு அல்லது ரோஸ் வாட்டர் உடல் முழுவதும் தடவலாம்.வெந்தய தண்ணீர் அதிகமான வியர்வையை குறைக்கும்.குளித்த பிறகு உடல் நன்றாக காய்ந்த உடைகளை அணிய வேண்டும்.தயிர், எலுமிச்சை சாறு, தேங்காய் தண்ணீர் போன்றவை உடல் வெப்பத்தை குறைக்கும்.வியர்வை அதிகமாக இருந்தால் தோல் மருத்துவரை அணுகவும்.
காலிஃபிளவர்மூளையை போன்றதோற்றம் உடையது.அதேபோல் இதுமூளை வளர்ச்சிக்கும்உதவுகிறது.வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகமாக உள்ளன. தினமும்90 கிராம் அளவுக்கு காலிஃபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது.மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புச்சக்தி அதிகமாக உள்ளது.புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.செரிமான கோளாறுகளை சரிசெய்யும் தன்மை இதற்கு உண்டு.காலிஃபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்துகளை தயாரிக்கலாம்.
சுக்கு, மிளகு, திப்பிலி பொடியை சிறிது எடுத்து தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். மல்லிப்பொடி ஒரு தேக்கரண்டி, பனைவெல்லம், சுக்குப்பொடியை நீர்விட்டு காய்ச்சி குடித்து வரலாம். இரவு படுக்கச் செல்லும் முன் திரிபலா சூரணம் பொடியை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இது ஒற்றை தலைவலி வராமல் தடுப்பதுடன், ரத்தத்தை சுத்திகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
கோடைகாலத்தில்வெயிலுக்குஇதமாக உடல் சூட்டை குறைக்கும்பழங்களில்தர்பூசணி முதன்மையானது.வைட்டமின்,தாதுக்கள்,கார்போஹைட்ரெட், இரும்பு சத்துக்கள் தர்பூசணியில் நிறைந்து காணப்படுகிறது.கண் குளிர்ச்சிக்கு தர்பூசணி சிறந்த மருந்தாகும்.ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் பொட்டாசியத்தின் அளவைகட்டுக்குள் கொண்டு வரலாம்.நீரிழிவு நோய், இதயநோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.