25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


நலம் வாழ

Mar 03, 2026

உப்பு சாப்பிடுவதை நிறுத்தினால்...

உப்பு சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன ஆகும் .முதல் நாளே உடல் மாறத் தொடங்கும். உடலில் தேங்கியிருந்த தேவையற்ற நீர் வெளியேற ஆரம்பிக்கும், வீக்கம் குறையும், உடல் லேசாக உணரும். இரண்டாம் நாளில்BloodPressure கீழே இறங்கும். மூன்றாம் நாளில் சிறுநீரகம் ஒரு நிம்மதி மூச்சு விடும். ஏனென்றால் அதிக உப்பை வடிகட்ட கஷ்டப்பட்ட அது இப்போது சுலபமாக வேலை செய்யும்.ஆனால் இங்கே ஒரு உண்மை இருக்கிறது. உப்பே வேண்டாம் என்பது தப்பு. உடலுக்கு சோடியம் அவசியம். நரம்புகள் செயல்பட தசைகள் இயங்க, இதயம் துடிக்க ,உப்பு வேண்டும். ஆனால் நாம் சாப்பிடுவது தேவையின் 3 மடங்கு அதிகம். அதனால் நாம் உப்பு அளவாக சாப்பிட வேண்டும். 

Feb 26, 2026

சிறுநீரக தொற்று நோய்கள் குணமாக உலர் திராட்சை.

உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், நெஞ்சில், சளி இருப்பவர்களுக்கு, நல்ல நிவாரணம் கிடைக்கும்.உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பையும் அகற்றும்.ரத்தசோகையை குணப்படுத்தும்.ஒரு டம்ளர் நீரில்10 உலர் திராட்சைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உண்டால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமாகும்.உலர் திராட்சைகளை நீரில் கொதிக்க வைத்து, அருந்தினால் குடல் புண்கள் குணமாகும்.தினசரி இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை அருந்தி, திராட்சையைச் சாப்பிடுவது, சிறுநீரகத்தை சுத்திகரிக்கவும், கழிவுகளை வெளியேற்றவும், தொற்றுகளைத் தடுக்கவும் உதவும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

Feb 24, 2026

பகல் நேரத்தில் தூங்கினால் வரும் நன்மைகள்.

* ரத்த அழுத்தம் குறையும்.*இதய நோய் வரும் அபாயம் குறையும்.* மூளை சிறப்பாக செயல்படும்.* களைப்பு, உடல் சோர்வு குறையும். *அதிகமாக தினமும் தூங்கினால் மன நலம் குறையும் அபாயம் உண்டு.* மதியத்தில் 1 - 3 மணி நேரத்துக்குள் 15-30 நிமிடங்கள் தூங்குவது சிறந்தது.

Feb 20, 2026

விக்கல் அடிக்கடியோ, தொடர்ந்தோ ஏற்பட்டால்…

மூச்சுக்குழல் தசையின் திடீர் கருக்கத்தால்விக்கல் ஏற்படுகிறது, பெரும்பாலான நேரங்களில் தானாகவே நிற்கும், ஆனால் நீண்ட நேரம்விக்கல் தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும் .குளிர்ந்த தண்ணீர் குடிக்கலாம்.ஒரு டிஸ்பூன் வெண் சர்க்கரையை நாக்கில் வைத்து மெதுவாக சாப்பிடவும். இது நரம்புகளை மறுசீரமைக்க உதவும்.ஒரு சொட்டு எலுமிச்சை சாறு நாக்கில் இட்டால் விக்கல் நிற்கும்.ஆழமாக மூச்சை இழுத்து, 10 முதல் 15 வினாடிகள் வரை மூச்கை பிடித்துக்கொண்டு பின்னர் மெதுவாக வெளியே விடவும்.மூக்கையும் வாயையும் மூடி சில விநாடிகள் மூச்சை வெளியில் விடாமல் இருக்க வேண்டும்.கவனத்தை மாற்றி வேறு ஒரு விஷயத்தில் ஈடுபட்டால் சில நேரங் களில் விக்கல் தானாக நிற்கும்.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், நரம்புதளர்ச்சி போன்ற காரணங்களால் விக்கல் உண்டாகலாம். விக்கல் அடிக்கடியோ, தொடர்ந்தோ ஏற்பட்டால் சில உடல்நல பாதிப்புகள் அதற்கு காரணமாகஇருக்கலாம்.  மருத்துவரை கண்டிப்பாக அணுகுவது அவசியமானது.

Feb 17, 2026

உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப் பட்டியலில் பழையசோறு முதலிடம்.

உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப் பட்டியலில் பழையசோறு முதலிடம் வகிக்கிறது. இது அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு. 'பிரியாணிகூட இரண்டு மணி நேரத்துல கிடைக்கும். ஆனா பழையசோறு வேணும்னா ஒருநாள் காத்து இருக்கணும்' என்று சொல்வார்கள் நமது வீட்டுப் பெரியவர்கள். அது உண்மை தான். சோற்றில் நீர் ஊற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி என்ன இருக்கிறது பழையசோற்றில்... வடித்த சோற்றில் 3, 4 மி.கி. இரும்புச்சத்து இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதுவே, பழைய சோறாகும்போது, இரும்புச்சத்தின் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும். பழைய சோறு சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல் பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல; இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. பழைய சோற்றில் வேறு எந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி 6, பி 12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன. காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உஷ்ணத்தைப் போக்கும். பாரம்பரியத்தைப் போற்றுவோம்! இனி கொஞ்சம் பழைய சோற்றுக்கு மாறித்தான் பார்ப்போமே!

Feb 16, 2026

பூரான் கடித்தால் ..

யாருக்காவது பூரான் கடித்து விட்டால் கல் உப்பை தண்ணீரில் கரைத்து கடிபட்ட இடத்தில் கழுவவும். உப்பு ஆன்டிசெப்டிக்காக பயன்படுகிறது. பூண்டு மற்றும் வெங்காயத்தை அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டவும். இதை கட்டுவதால் பூரான் விஷம் உடனடியாக குறைந்துவிடும். இன்னொரு முறையும் உண்டு. பூரான் கடித்தால் வெற்றிலையுடன், மிளகு சேர்த்து சாப்பிட்டால் அதன் விஷம் குறைந்து விடும்.

Feb 14, 2026

சளி சம்பந்தமான நோய்கள் குணமாக கற்பூரவள்ளி இலை

கற்பூரவள்ளி இலையை காலை வேளையில் எடுத்து வந்தால் ,சளி ,இருமல், தொண்டை வறட்சி, தொண்டை கம்மல், உடனே குணமடையும்.பத்து கற்பூரவள்ளி இலைகளை எடுத்து நன்றாக தண்ணீரில் அலசி அதை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அதாவது மூன்று டம்ளர் தண்ணி அளவு2 டம்ளராக குறைய வேண்டும். அதன் பிறகு அதை வடிகட்டி, ஆற வைத்து சிறிது தேன் சேர்த்து பருகினால், சளி சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமடையும்.

Feb 12, 2026

நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கும் கொடுக்காப்புளி.

காற்று மூலம் பரவக்கூடிய வைரஸ் தொற்றுகளைத் தடுப்பதற்கும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை வளர்க்கவும், கொடுக்காப்புளி கிடைக்கும் போதெல்லாம் அதை சாப்பிடுவது நல்லது. கொடுக்காப்புளியில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள்(Phytochemicals) இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ்(Glucose) அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால், நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க அல்லது அதைக் கட்டுக்குள் வைக்க இது நன்மை பயக்கும்.

Feb 11, 2026

ஜலதோஷம், சளிக்கு வீட்டு மருந்து…

ஜலதோஷம் வருவது போல் தொண்டை கரகரப்பாக இருந்தால் அல்லது ஜலதோஷம் இருமல் சளி வந்துவிட்டால் 1 வெற்றிலையில் 5 மிளகு,1 சிட்டிகை மஞ்சள்,1 சிறிய கல் உப்பு சேர்த்து நன்றாக மென்று உமிழ் நீரோடு சாப்பிட வேண்டும் அதன் பிறகு குறைந்த பட்சம் 30 நிமிடத்திற்கு தண்ணீர் உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது. இது மிகச்சிறந்த கிருமி நாசினி இரவு உணவிற்கு பின் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது கூடுதல் சிறப்பு.

Feb 10, 2026

கொழுப்பை எரிக்க பிளாக் காபி....

பிளாக் காபி என்றால் பால் மற்றும் சர்க்கரை இல்லாத காபி ஆகும். இது காபியை தண்ணீரில் மட்டுமே கொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 4 கப் கருப்பு காபி குடிக்கலாம். உங்களது கொழுப்பை எரிக்க நீங்கள் விரும்பினால் கருப்பு காபி குடிப்பது மிகவும் நல்லது.ஒவ்வொரு 1 கப் ப்ளாக் காபிக்குப் பிறகும் 2 கப் தண்ணீர் குடிக்கவும், இதனால் நீரிழப்பு ஏற்படாது. 1கப் கருப்பு  காபி தோராயமாக 17 கூடுதல் கலோரிகளை எரிக்கிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 2 கப் கருப்பு காபி குடித்தால்  அது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.உடற்பயிற்சி செய்வதற்கு முன் நீங்கள் சுமார் 300 மில்லிகிராம் காஃபின் உட்கொண்டால், அது உங்கள் வொர்க்அவுட்டின் தீவிரத்தை அதிகரிக்க உதவுகிறது.காஃபின் உள்ளடக்கம் காபியிலிருந்து காபி வரை மாறுபடும்.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 49 50

AD's



More News