உடல் குளிர்ச்சி தரும் அதிக நீர்ச்சத்து (water content) இருப்பதால் வெயில் காலத்துக்கு ரொம்ப நல்லது.சுகர் patient க்கு BEST கம்மி கலோரி, கம்மி சர்க்கரை,ஜீரணத்திற்கு உதவும் - நார்ச்சத்து (fiber) இருக்கு.ஹார்ட் health க்கு நல்லது-ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கு,Dehydration ஆகாமல் காக்கும்-உடம்பு தண்ணீர் குறையாமல் help பண்ணும். நல்லா கழுவி நேரடியாக கடிச்சு சாப்பிடலாம்.நடுவுல இருக்கிற விதை (seed) இருந்தா எடுத்துட்டு சாப்பிடலாம்.சின்ன சின்ன துண்டா நறுக்கி கொஞ்சம் மிளகுத்தூள் உப்பு தூவி சாப்பிடலாம்.ஜூஸ் மாதிரி அடிச்சு குடிக்கலாம். (சர்க்கரை சேர்க்காமல்)வயிற்று சளி,குளிர் அதிகமாக இருந்தால் , ரொம்ப அதிகமாக சாப்பிடாதீங்க.
அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும். அதிமதுர பொடியை 2 கிராம் அளவு தேனில் குழைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.இது மூச்சுக் குழாய் அழற்சி தொண்டைப்புண், போன்றவற்றை சரி செய்யும். அதிமதுரம் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் நுரையீரலை சுத்தப்படுத்தவும், சுவாசக் கோளாறுகளை தடுக்கவும் பயன்படுகிறது.
முருங்கைக்கீரை (Drumstick Leaves) - வாரம் 2 நாள் சூப் குடிச்சா ரத்தம் ஜூவ்வுனு ஊறும்.கருப்பட்டி & பேரிச்சம்பழம் -தினமும் ரெண்டு சாப்பிட்டா இரும்புச்சத்து தானா ஏறும்.சுண்டைக்காய் (Turkey Berry) - கசக்கும்னு ஒதுக்காதீங்க, ரத்தத்தை சுத்திகரிச்சு சிவப்பணுக்களை அதிகமாக்கும்.மாதுளம் பழம் & பீட்ரூட் ஜூஸ் (Pomegranate & Beetroot Juice) - முகமே சிவப்பாயிடும்.கருப்பு உலர் திராட்சை - நைட்டு தண்ணியில் ஊற வச்சு, காலையில் குடிச்சா அயர்ன் சத்து அதிகமாகும்.சுவரொட்டி கிடைச்சா சாப்பிடுங்க.மலிவா கிடைக்கிற இந்த ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிடுங்க.
சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு ,தலா1 ஸ்பூன் எடுத்து,2 டம்ளர் தண்ணீரில் இரவே கொதிக்க வைத்து ,மூடி வைக்கவும். காலை வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து குடித்தால், உடல் வலி அனைத்தும் ஆயுளுக்கும் வரவே வராது.
ஜாதிக்காய் மன அழுத்தத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.மூளையை அமைதிப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.ஆழ்ந்த தூக்கத்தை தூண்ட ஜாதிக்காய் பயன்படுகிறது.ஜாதிக்காயில் உள்ள கூட்டு பொருள் நரம்பு மண்டலத்தை அமைதி படுத்துகிறது.நரம்புத் தளர்ச்சி மற்றும் உடல் சோர்வை நீக்கும்.நினைவாற்றல் அதிகரித்து மூளை டானிக்காக பயன்படுகிறது.ஜாதிக்காய் செரிமான நொதிகளை தூண்டி அஜீரணம் வயிற்று பொருமல் மற்றும் வயிறு சம்பந்தமான' கோளாறுகளை சரி செய்கிறது.வாயுத் தொல்லை மற்றும் வயிற்று வலியைச் சரிசெய்யும். சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி பொலிவைத் தரும்.
தினமும் 21 முறையாவது குனிந்து காலை தொட்டு நிமிருங்கள்.அமரும் போது வலையாதீர்கள்.நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.சுருண்டு படுக்காதீர்கள்.கனமான தலையணைகளை தூக்கி எறியுங்கள். தினம் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.டூ-வீலர் ஒட்டும் போது குனிந்து ஓட்டாதீர்கள். பலுவான பொருட்களை தூக்கும் போது குனிந்து தூக்காதீர்கள்.காலை 20 முறை மாலை 20 முறை ,கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.
ஜவ்வரிசி உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. நமது உணவுக்குழாய், வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை குணப்படுத்துகிறது. எலும்புகளை ஆரோக்கியம், மூட்டுவலி, தசைகளை வலுவூட்டல், உடல் குளிர்ச்சி, செல்களை புதுப்பிக்கவும் பயன்படுகிறது.ஜவ்வரிசியில் புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனுடன், கலோரிகளின் அளவும் மிகக் குறைவு. இது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.உடலுக்குத் தேவையான அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. வாயு பிரச்சனைகள் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை உடனடியாக தடுக்கிறது.இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இவற்றில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி இருப்பதால், கர்ப்பிணிகள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள வைட்டமின் கே மூளைக்கு நல்லது.
சப்ஜா விதைகள் பார்ப்பதற்கு மிக, மிக சிறிய அளவில் இருக்கும். சப்ஜா விதைகளில் நார்ச்சத்து மிகுதியாக கொட்டி கிடக்கிறது. பொதுவாக கோடைகாலத்தில் நாம் அருந்தும் குளிர்பானங்களில் இந்த சப்ஜா விதைகளை சேர்த்துக் கொள்கிறோம். இதன் மூலமாக பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. ரத்த சர்க்கரை குறைய தொடங்குகிறது மற்றும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் இந்த சப்ஜா விதைகளில் இருக்கிறது.சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சப்ஜா விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுபாட்டுக்குள் இருக்கும் மேலும் சப்ஜா விதைகள் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்ததால் செரிமானத்தை உயர்த்தி உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகின்றன.
வேர்க்கடலையில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுத்து, மாரடைப்பு அபாயத்தை குறைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை உட்கொள்வதன் மூலம் உடல் பருமனை தவிர்த்து, ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க முடியும்.வேர்க்கடலை எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்துவது கொலஸ்ட்ரால் அளவைச் சமநிலைப்படுத்த உதவும். வேர்க்கடலையில் கலோரிகள் அதிகம் என்பதால், அளவோடு சாப்பிடுவது நல்லது.
சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது.சப்போட்டா உடலுக்கு நல்லதுதான். ஆனால், அதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சில பிரச்சனைகள் வரலாம்.இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும். தினம் 2 சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்லது.சப்போட்டாபழம். தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல், பல உடல் நல பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது. கோடைக்காலத்தில் அதிகம் பார்க்கப்படும் சப்போட்டா இனிப்புசுவை கொண்டது. தினமும் இதை சாப்பிடலாம். ஆனால் அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகள் வரலாம். நீரிழிவு, ஒவ்வாமை, செரிமான பிரச்சனை இருப்பவர்கள் பொதுவாகவே சப்போட்டாவை தவிர்க்க வேண்டும்.