25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


நலம் வாழ

Jun 24, 2026

உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்.....

உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றும். இரத்த சோகையை குணப்படுத்தும். இரவு ஒரு டம்ளர் நீரில் 10 உலர் திராட்சைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமாகும்.அதே உலர் திராட்சைகளை நீரில் கொதிக்க வைத்து, அருந்தினால் குடல் புண்கள் குணமாகும். மலச்சிக்கலைப் போக்கும்.

Jun 20, 2026

சளி, இருமலுக்கு .....

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்: காலையில் வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை மற்றும் தேன் குடிக்கவும்.மூக்கு அடைக்கிறதா: சூடான நீராவியை உள்ளிழுத்து புதினா அல்லது விக்ஸ் சேர்க்கவும்.இரவில் இருமல் உங்களைத் தொந்தரவு செய்கிறது: வாயில் வறுத்த இஞ்சியுடன் தூங்கச் செல்லுங்கள்.சளியுடன் கூடிய இருமல்: துளசி, இஞ்சி மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட தேநீர் குடிக்கவும்.தொண்டை வலி: வெதுவெதுப்பான நீர் + மஞ்சள் + உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கவும்.வறட்டு இருமல்: சிறிது இஞ்சி சாற்றை தேனில் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிடவும்.

Jun 17, 2026

ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்க....

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.வாழைப்பூவைப் பொடிப் பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கைக்கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல்,பித்தக் கோளாறு நீங்கும்.மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்தும் சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கிவிடும்.கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு, அரைத்தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் கண் நோய் வராது.இஞ்சியைச் சாறெடுத்து கொஞ்சம் உப்புப் போட்டு குடித்தால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் வராது.இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கிவிடும்.

Jun 16, 2026

ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஏலக்காய்.

ஏலக்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவும். மேலும், இது ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஏலக்காய் நல்ல நிவாரணமாக திகழ்கிறது.ஏலக்காயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடல்நலத்தை பாதுகாக்க உதவுகின்றன.

Jun 15, 2026

செம்பு மோதிரம் அணிவதால்....

செம்பு மோதிரம் அணிவதால் வியர்வையுடன் தொடர்பில் இருக்கும் போது,செம்பு தோல் வழியாக மெதுவாக கரைந்து இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இது மூட்டு வலி கீல்வாதம் குறைக்கவும், வயிற்றிலுள்ள அசுத்தங்களைச் சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

Jun 12, 2026

வெயிலில் இருந்து வந்த உடனே குளிப்பதையோ அல்லது குளிர்ச்சியான பானங்களை குடிப்பதையோ தவிர்க்கவும்.

உடல் வெப்பம் இயல்பு நிலைக்கு வர 10 நிமிடம் ஓய்வெடுப்பது அவசியம்.வெயிலில் இருந்து வந்த உடனே குளிப்பதையோ அல்லது குளிர்ச்சியான பானங்களை குடிப்பதையோ தவிர்க்கவும்.உடல் வெப்பம் இயல்பு நிலைக்கு வர 10 நிமிடம் ஓய்வெடுப்பது அவசியம்.

Jun 11, 2026

உப்பின் மேல் காலணி இல்லாமல் சில நிமிடங்கள் நின்று பாருங்கள்...

இது மன அழுத்தத்தை குறைக்க உதவும், உடல் நிலையை(posture) மேம்படுத்தும், மற்றும் நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தும். நாள்தோறும் ஓடும் வேகமான வாழ்க்கையில், இவ்வாறான சிறிய இயற்கை முறைகள் உடலுக்கும், மனசுக்கும் கொஞ்சம் ஓய்வை தரும்.

Jun 10, 2026

பற்கள் மற்றும் ஈறுகள் பலப்பட...

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில்ஊற்றிக் கொள்ள வேண்டும். வாயின் எல்லாப் பகுதிகளிலும் படும்படி 15 முதல் 20 நிமிடங்கள்வரை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் வெள்ளை நிற நுரையாக மாறியதும்துப்பிவிட்டு, வெதுவெதுப்பான நீரால் வாயைக் கழுவ வேண்டும்.

Jun 09, 2026

சீரகம் கலந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்தால்......

சீரகம் கலந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, சளி நிவாரணம், சுவாசம் எளிதாகுதல் ஆகியவற்றுக்கு உதவும்; இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தையும் சமநிலைப்படுத்த உதவும்.

Jun 08, 2026

கேன்சரை அழிக்கும் திராட்சை விதை.

இறைவனின் படைப்பில் கேன்சர் நோயை அழிக்க இன்னொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது திராட்சையின் விதைதான். இதை சாப்பிட்ட 48 மணி நேரத்திலேயே கேன்சர் செல்களை அழிக்கும் சக்தி இதற்குண்டு! என ஆராய்ச்சியில்தெரியவந்துள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 53 54

AD's



More News