25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டிக்டாக் செயலியை வாங்க, மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டிக்டாக் செயலியை வாங்க, மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை.

இந்தியா உள்பட உலகின் சில நாடுகளில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவும் டிக் டாக் செயலியை தடை செய்ய போவதாக அறிவித்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற உடன் டிக்டாக் செயலிக்கு தடை என்று அறிவித்தது. ஆனால் சில மணி நேரங்களில் தடையை நீக்கி ,அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய டிரம்ப் கால அவகாசம் கொடுத்தார்.

இந்த நிலையில் டிக் டாக் செயலியை வாங்க அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்கள் முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் குறிப்பாக எலான் மஸ்க் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு ஏலம் கேட்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி, டிக் டாக் செயலியை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.

டிக் நாக் நிறுவனம் கை மாறியவுடன் இந்தியாவில் அந்நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது டிக் டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குமா அல்லது எலான் மஸ்க் நிறுவனம் வாங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *