காய்ச்சல்,இருமல் வந்தால்வேப்பமரத்து தோல் முருங்கை மரத்து தோல்50 கிராம் விதம் எடுக்க வேண்டும்.தோலை இடிச்சு வச்சுக்கணும்.சுக்கு, சீரகம்,மிளகு, பட்டை, திப்பிலி, கருஞ்சீரகம், சேர்த்து நல்லா இடிச்சு,ஒரு லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் ஆகும் வரை சேர்த்து கொதிக்க வைக்கவும். வெது வெது சூடோட சாப்பிட உடன் நிவாரணம்.
ராகி கூழ் - உடல் சூட்டை வேகமாக குறைத்து, நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும். கம்பு கூழ் - உடலை உள்ளிருந்து குளிர வைக்கும், சோர்வை குறைக்கும். பழைய சோறு - குடல் ஆரோக்கியம் ஆதரிக்கும், உடல் குளிர்ச்சி தரும். நீர்மோர் - நீர்மோர் நீர்ச்சத்தை சீராக்கும், ஜீரணத்தை ஆதரிக்கும். தேங்காய் பால் - ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது உடல் ஊட்டச்சத்து ஆதரிக்கும். பானகம் - உடனடி எனர்ஜி தரும், ஆனால் அளவாக எடுத்தால் மட்டுமே நல்லது.
வாழைப்பழம், ஆப்பிள், கிவி, பூசணி, நெல்லிக்காய், செர்ரி போன்றவற்றை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இவை உடலுக்குப் புத்துணர்ச்சி தருவதால் இரவு தூக்கம் பாதிக்கப்படலாம்.ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளால் புகைபிடிக்காத பெண்களுக்குக்கூட நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல். உணவுகள் காரணமல்ல, அவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் வீரியமிக்க பூச்சிக்கொல்லிகளே காரணம்.
இரவு நேரத்தில் செல்போன் பார்ப்பதால், திரையில் இருந்து வெளிவரும் நீலநிற ஒளி கண்களுக்கு அதிக அழுத்தத்தை தரும். மேலும் கண் வறட்சி, மங்கலான பார்வை ஏற்படவும் வாய்ப்புள்ளது.இந்த ஒளி தூக்க ஹார்மோனான மெலடோனினை குறைத்து தூக்கத்தை பாதிக்கும்.இந்த பழக்கம் பல நாட்கள் தொடர்ந்தால் தூக்கமின்மை, கவனக்குறைவு,உடல் எடை அதிகரித்தல், காலையில் எழுந்தாலும் மீண்டும் சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
ரத்த சோகை- ஆக்சிஜன்- ஊட்டச்சத்து உடல் முழுவதும் ஆக்சிஜன் செல்லவும், ரத்த சோகையைத் தடுக்கவும் ,இரும்புச் சத்து அவசியம். கம்பு - அரிசியைவிட எட்டு மடங்கு இரும்பு சத்து உள்ளது. கீரை வகைகள் - முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.ஆட்டு ஈரல் - ரத்த சோகையை நீக்க மிகச் சிறந்த உணவு. இரும்புச்சத்து எளிதில் கிரகிக்கப்படும். வேர்க்கடலை - இரும்புச்சத்து, புரதம், நல்ல கொழுப்பு நிறைந்தது. தினமும் சிறிதளவு உண்ணவும்.
குழந்தைகள் நீண்ட நேரம் கண்களுக்கு அருகில் செல்போன் பார்ப்பதால் கண்களில் ஈரப்பதம் குறைந்து, 'கண் உலர்ச்சி' (Dry Eyes) ஏற்பட்டு கண்கள் திறக்க முடியாமல் போகலாம்.தொடர்ந்து போன் பார்ப்பதால் வரும் பாதிப்புகள்:கண் எரிச்சல் & தலைவலிபார்வை குறைபாடுஇரவில் பார்ப்பதில் சிரமம்குறிப்பு: குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தைக் காக்க செல்போன் தருவதைக் கட்டுப்படுத்துங்கள்!
கிழிந்த ஜவ்வையும் கூட்டி, முட்டிக்கு நல்ல பலம் தரும் ஒரு சித்த வைத்தியம்: நாட்டு பாக்கு 10 மற்றும் புளியங்கொட்டை 10 ஆகியவற்றை நன்றாக ஊற வைத்து, தண்ணீர் விடாமல் அம்மியில் அரைத்துக் கொள்ளவும். அதில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து கலக்கி, முட்டியில் பற்று போட வேண்டும். பற்று கீழே விழாமல் இருக்க ஒரு வெள்ளை துணியால் கட்டி, அதன் மீது சிறிது நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். அது காய்ந்த பிறகு மீண்டும் எண்ணெய் ஊற்றலாம்.
குழந்தைகளுக்கு 1-3 கிராம் அஸ்வகந்தா பொடியை பாலுடன் கலந்து கொடுப்பது, ஒரு மாதத்திற்குள்அவர்களை அழகாகவும், நல்ல வடிவத்துடனும், ஆரோக்கியமாகவும் மாற்றும்.உங்கள் தலைமுடி இளநரைத்து உதிர்ந்தால், தினமும் 3 கிராம் அஸ்வகந்தாவை பாலுடன் கலந்து உட்கொள்ள வேண்டும்.இது நிச்சயமாக உங்கள் பிரச்சனையைத் தீர்க்கும்.உயரத்தை அதிகரிக்க, ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடியை பசும்பாலுடன் கலந்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன் அருந்தவும்.கார்டிசோல் (மன அழுத்த ஹார்மோன்) அளவைக் குறைப்பதன் மூலம் மன அமைதியைத் தருகிறது.ஆழ்ந்த தூக்கத்தைத் தூண்டி, சோர்வைப் போக்குகிறது.உடல் வலிமை மற்றும் தடகள செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை வலுப்படுத்துகிறது.
கீழ்க்கண்டவற்றைச் சாப்பிட்டவுடன் உடனே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்:வேர்க்கடலை: உடனே தண்ணீர் குடித்தால் இருமல், தொண்டை வலி ஏற்படும்.இனிப்புகள்: உடலில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது.பழங்கள் & ஜூஸ்:செரிமான ஆற்றல் பாதிக்கப்படும் (பழங்கள் சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குப் பின் குடிப்பது நல்லது).டீ, காபி (சூடான பானங்கள்):சூடான பானங்களுக்குப் பின் குளிர்ந்த நீர் குடிப்பது பல், ஈறு மற்றும் செரிமான அமைப்பைக் கெடுக்கும்.
பீன்ஸில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ளும். எனவே நீரிழிவு நோயாளிகள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், பீன்ஸை அதிகளவு உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.